சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

ஜுலை15ல் உலக MGR பேரவை நடத்தும் பிரமாண்டமான எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா..!

ஜுலை15ல் உலக MGR பேரவை நடத்தும் பிரமாண்டமான எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  உலக எம்.ஜி.ஆர் பேரவை பிரதிநிதிகள் இணைந்து நடத்தும் மாநாடு மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வரும் ஜூலை 15ஆம் தேதி சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. அதனை பற்றிய தகவல்களை வெளியிடும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் உலக எம்ஜிஆர் பேரவை முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை பற்றி பேசினர். எம்ஜிஆர் பக்தர்கள் உலகம் முழுவதும் பரவி, அங்கேயே அமைப்பை தொடங்கி விழா நடத்தி வருகிறார்கள். நானும் ஃபிரான்ஸில் ஒரு அமைப்பை தொடங்கி 15 வருடங்களாக நடத்தி வருகிறேன்.  கடந்த ஆண்டு ஃபிரான்ஸில் மாநாடு நடத்தினோம். அதில் சைதை துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவரிடம் புரட்சி தலைவரின் பக்தர்களை ஓரணியில் இணைப்பது பற்றி நிறைய பேர் வேண்டுகோள் வைத்தனர். அதற்கு செவி சாய்த்து துவங்கப்பட்டது தான்...

அரை நூற்றாண்டுகளாக தமிழகம் கறைபட்டுள்ளது – கமல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  மக்கள் நீதி மய்யத்தின் “இது நம்மவர் படை” பாடல்கள்  வெளியிடப்பட்டது. பாடலாசிரியரும், நடிகருமான கவிஞர் சினேகனின் வரிகளில், இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையில் உருவாகி இருக்கும் 6 பாடல்கள் கொண்ட தொகுப்பை  “மக்கள் நீதி மய்யம்” கட்சியின் தலைவர் பத்மபூஷன் கமல்ஹாசன் வெளியிட்டார். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வரிசையில் “மக்கள் நீதி மய்யம்”இணைந்த பிறகு நடைபெற்ற முதல் கட்சி நிகழ்ச்சியாக அமைந்த இந்த விழாவில், கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பாடல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றிய கமல்ஹாசன், "நம்மவர் என்பது உங்களையும், என்னையும் குறிக்கும். வரும் காலங்களில் மாலைகளையும், பொன்னாடைகளையும் நாம் தவிர்க்க வேண்டும். மாற்றத்தை நோக்கி நகர்கிறோம் என்பதற்கான சமிக்ஞையாக அது இருக்கும். வருகிற வழியில் சில பேனர்களைப் பார்த்தேன். நமது சாலைகளில் ப...
இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது – யஷ்வந்த் சின்கா

இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது – யஷ்வந்த் சின்கா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பா.ஜ.க.வில் இருந்து சமீபத்தில் வெளியேறிய முன்னாள் மத்திய நிதி மந்திரி யஷ்வந்த் சின்கா, வாரணாசியில் நடந்த ஆம் ஆத்மி கட்சி பேரணியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- இந்திரா காந்தி காலத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையை விட தற்போது அதிக ஆபத்து நிறைந்த அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நாட்டில் நிலவுகிறது. ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. அரசியலமைப்பை நகைச்சுவை ஆக்கிவிட்டனர். அனைத்து அரசு அமைப்புகளும், நிறுவனங்களும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. ஆட்சியாளர்களின் உத்தரவுகளுக்கு ஏற்ப இந்த அமைப்புகள் செயல்படுகின்றன. மற்றவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு உத்தரவிடுவார்கள். ஆனால், அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து எந்த விசாரணைக்கும் உத்தரவிட மாட்டார்கள். பண மதிப்பு நீக்க காலத்தில் முதல் ஐந்து நாட்களுக்குள் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.745...

கருத்துரிமையை பறிக்கவே கைது நடவடிக்கை – இயக்குனர் அமீர் குற்றச்சாட்டு

CINI NEWS, NEWS, politics, செய்திகள்
  கோவையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் கடந்த 8-ம் தேதி விவாத்தின் போது அமைதியை குலைக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் இயக்குனர் அமீருக்கு கோவை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. முன்னதாக கோவையில் தனியார் தொலைகாட்சி இம்மாதம் நடத்திய விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அமீர் சர்ச்சைக்குரிய வகையிலும், மோதல் ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாகவும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி அமீருக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். இதில் அமீர் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் அமீர்க்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இந...
ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு – மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் அவசரநிலை

ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு – மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் அவசரநிலை

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இன்று மாலை மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இரவு 8.15 மணிக்கு விமானம் தரையிறங்க முயன்ற போது, பிரேக் பகுதியில் உள்ள ஹைட்ராலிக் இயங்கவில்லை. இதனால், விமான நிலையத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. தீயணைப்பு, மருத்துவம் உள்ளிட்ட குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. 15 நிமிடங்களுக்கு பின்னர் விமானம் பத்திரமாக தரையிறங்கியதை அடுத்து, விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பியது....
ஆந்திராமெஸ் மூலம் புதுவில்லன் ஆக தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும் ஓவியர் ஸ்ரீதர்..!

ஆந்திராமெஸ் மூலம் புதுவில்லன் ஆக தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும் ஓவியர் ஸ்ரீதர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
என் படத்தை எப்படிக் கிழித்தாலும் ஏற்றுக்கொள்வேன். - ஜெய் அதிரடி நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள். இந்த சூழல் நிச்சயம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தாது என்று கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார், ஆந்திரா மெஸ் பட இயக்குநர் ஜெய். சினிமாவிற்கு இதுவரை பரீட்சயமில்லாத கோணத்தில்  கதை சொல்லப்பட்டிருக்கும் படம் “ஆந்திரா மெஸ்”. நான்கு திருடர்கள், ஒரு முன்னாள் ஜமீன்தார், அவருடைய இளம் மனைவி.. இவர்களின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கிற சம்பவங்களின் தொகுப்பை மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கும் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், பிரபல விளம்பரப் பட இயக்குநர் ஜெய். “ஷோ போட் ஸ்டுடியோஸ்” சார்பில் நிர்மல் கே.பாலா தயாரித்திருக்கும் இப்படத்தின் கதாநாயகனாக “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, “ரிச்சி” போன்ற படங்களில் நடித்த ராஜ் பரத், கதாநாயகிகளாக தேஜஸ்வினி,...
திரைத்துறை டிசைனர் திருமண நிச்சயதார்த்தம்..!

திரைத்துறை டிசைனர் திருமண நிச்சயதார்த்தம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது   திரைப்படத்துறையில் விஷால், ஜெயம் ரவி,அதர்வா, ஜி வி பிரகாஷ், நிக்கி கல்ராணி உள்ளிட்ட முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருபவர் ஜாய் கிரிஸில்டா. இவருக்கும் தொழிலதிபர் ஃப்ரடெரிக் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.   இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் இந்த திருமண நிச்சயதார்த்தம் நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுஸில் கோலாகலமாக நடைபெற்றது.   இதன் போது நடிகர்கள் சிவகார்த்திகேயன், நக்குல், ‘கயல்’ சந்திரன், திருமதி அஞ்சனா சந்திரன், நடிகைகள் சுஜா வருணீ, அதுல்யா ரவி, இயக்குநர் அட்லீ, பிரியா அட்லீ, எடிட்டர் ரூபன், பின்னணி பாடகி சைந்தவி, வி ஜே ரம்யா உள்ளிட்ட பல முன்னணி திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.   ராஜதந்திரம், ஜில்லா, கீ, உள்குத்து, கத...
முனைவர் ராஜேந்திரன் IAS முயற்சியில் புதுப்பொலிவு பெறும் கற்புக்கரசி கண்ணகி கோயில்..!

முனைவர் ராஜேந்திரன் IAS முயற்சியில் புதுப்பொலிவு பெறும் கற்புக்கரசி கண்ணகி கோயில்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
*தமிழக எல்லையில், கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியில் கண்ணகி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மங்களா தேவி கண்ணகி கோயிலில், மறு சீரமைப்பு செய்யவும், புதிய சிலை பிரதிஷ்டை செய்யவும், வருடத்தில் 27 நாட்கள் தரிசனம் செய்ய, கேரள அரசு முடிவு செய்து உள்ளது.* *அது சம்மந்தமாக நேற்று 16.06.2018 -ம் தேதி காலை, சபரிமலையில், தமிழக பக்தர்களின் கோரிக்கையை, கடந்த 17 வருடங்களாக கையில் எடுத்த, கண்ணகி தேவி டிரஸ்ட்டின் முதன்மை தலைவர், காவல் தெய்வம் முனைவர் M. ராஜேந்திரன், IAS.,தலைமையில் சென்ற குழுவினர், தேவசம் போர்டு தலைவர் பத்மகுமாரை சந்தித்து ஆதரவு தெரிவித்தார், குழுவினர் விரைவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களையும் சந்தித்து, ஆதரவும், நன்றியை தெரிவிக்க உள்ளனர். *வரலாற்றை நேசிப்பதோடு மட்டும் அல்லாமல், சமூகம், சமுதாயம், வரலாற்றை, புத்தக வடிவில், மக்களுக்கு எளிய நடையில் தெரியப்படுத்தியும், சி...
கோரிக்கை மனுவை ஜனாதிபதி நிராகரித்தால் 7 பேர் விடுதலையாவதில் பின்னடைவு..!

கோரிக்கை மனுவை ஜனாதிபதி நிராகரித்தால் 7 பேர் விடுதலையாவதில் பின்னடைவு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கோரிக்கை மனுவை ஜனாதிபதி நிராகரித்தால் பேரறிவாளன்  உள்ளிட்ட7 பேர் விடுதலையாவதில் பின்னடைவு..! முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும் மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக 7 பேரும் சிறை தண்டனை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்து மத்திய அரசின் அனுமதி கேட்டது. இதை ஏற்க முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு மறுத்ததுடன் தமிழக அரசின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 7 பேரையும் விடுத...
சென்னை – சேலம் 8 வழி பசுமை சாலைக்கு கடும் எதிர்ப்பு- தீக்குளிப்போம் என விவசாயிகள் அறிவிப்பு

சென்னை – சேலம் 8 வழி பசுமை சாலைக்கு கடும் எதிர்ப்பு- தீக்குளிப்போம் என விவசாயிகள் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க அரசு முடிவு செய்து உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தப்படும் போது, சேலம் மாவட்டத்தில் அரமனூர், மஞ்சுவாடி, ஆச்சாங்குட்டப்பட்டி, கத்திரிப்பட்டி, மூக்கனூர், ஆச்சாங்குட்டப்பட்டி புதூர், குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி, எருமாபாளையம், சுக்கம்பட்டி, வெள்ளையப்பட்டி, குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, சின்னகவுண்டாபுரம், பாரப்பட்டி, சித்தனேரி, உத்தமசோழபுரம், பூலாவரி அக்ரகாரம் உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும். அதே போன்று பல்வேறு பகுதிகளில் உள்ள பலரது வீடுகளும் இடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த முதல் கட்ட பணியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் இந்த திட்டம் செயல்படுத்தினால் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயம் முற்றிலும் பாதிப்ப...