சென்னையில் ஐபிஎல்! முடிந்தால் நடத்திப்பார் !வேல் முருகன் ஆவேசம்!.
காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கவே ஐபிஎல் நடத்தப்படுகிறது.எங்க ஸ்லீப்பர் செல்கள் சிதம்பரம் ஸ்டேடியத்துக்குள் புகுந்து போட்டிகளை நடத்தவிட மாட்டார்கள் அத்துடன் சென்னை அணி வீரர்கள் வெளியே செல்லும்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. விவசாயிகள், அரசியல் கட்சியினர், மாணவர்கள் என பல தரப்பினரும் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், போராட்டங்களும் வலுத்துள்ளன. இந்நிலையில், ஐபிஎல் 11வது சீசன் நேற்று முன் தினம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. சென்னை கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
...









