என்றைக்குமே ஓடிடி ஹீரோவாக இருக்க வேண்டும் சூர்யாவை மறைமுகமாகச் சாடிய ‘ரோகிணி’ பன்னீர்செல்வம்
என்றைக்குமே ஓடிடி ஹீரோவாக இருக்க வேண்டும் சூர்யாவை மறைமுகமாகச் சாடிய ‘ரோகிணி’ பன்னீர்செல்வம்
ஜனவரி 13-ம் தேதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 800 திரையரங்குகளுக்கும் அதிகமாக ‘மாஸ்டர்’ வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் செயலாளரும், ரோகிணி திரையரங்க உரிமையாளருமான பன்னீர்செல்வம் பேசியதாவது:
“நடிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தமிழக முதல்வரைச் சந்திக்கவுள்ளோம். அதற்குள் தமிழக முதல்வர் நல்ல செய்தியைச் சொல்வார் என்று நம்புகிறோம்.
‘காட்டேரி’ படத்துக்காக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒரு தவறான அணுகுமுறை. அந...









