ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

மருத்துவ வசதி கிடைக்காததால் நடிகை பியாவின் சகோதரர் மரணம்!

மருத்துவ வசதி கிடைக்காததால் நடிகை பியாவின் சகோதரர் மரணம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
மருத்துவ வசதி கிடைக்காததால் நடிகை பியாவின் சகோதரர் மரணம்! ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த பொய் சொல்ல போறோம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். தொடர்ந்து அஜித்தின் ஏகன், வெங்கட்பிரபு இயக்கிய கோவா, கே.வி.ஆனந்தின் கோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இதுதவிர தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தன் சகோதரருக்கு இன்று காலை முதலே டுவிட்டர் மூலம் உதவிகேட்டு வந்தார் பியா. “உத்தர பிரதேசத்தில் உள்ள பரூகாபாத் நகரில் தனது சகோதரர் இருப்பதாகவும், உடனடியாக படுக்கையும், வென்டிலேட்டர் வசதியும் அவருக்குத் தேவை, தயவு செய்து உதவுங்கள்” என பதிவிட்டிருந்தார். ஆனால், நடிகை பியாவின் சகோதரருக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை போலிருக்கிறது. சிறிது நேரத்தில் “எனது சகோதரர் இறந்துவிட்டார்” என பதிவிட்டுள்ளார் பியா. அவருக்கு...
பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்கள்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்கள்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்கள்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத்துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அயராது உழைக்கின்றன. கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப்பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள். செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்....
கருணரத்னே, ஜெயவிக்ரமா அபாரம் – 2வது டெஸ்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இலங்கை!

கருணரத்னே, ஜெயவிக்ரமா அபாரம் – 2வது டெஸ்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இலங்கை!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
கருணரத்னே, ஜெயவிக்ரமா அபாரம் - 2வது டெஸ்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இலங்கை! வங்காளதேசம் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் நடைபெற்றது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் எடுத்தது. கேப்டன் கருணரத்னே 118 ரன்னும், லஹிரு திரிமானே 140 ரன்னும், ஒஷாடா பெர்னாண்டோ 81 ரன்னும், டிக்வெலா 77 ரன்னும் எடுத்தனர். வங்காளதேசம் அணி சார்பில் தஸ்கின் அகமது 4 விக்கெட்டும், மெஹிதி ஹசன், ஷோரிபுல் இஸ்லாம், தஜுல் இஸ்லாம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் அணி முதல் இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிம் இக்பால் 92 ரன்னும்,...
உயிருக்கு போராடிய கொரோனா நோயாளி… ஆம்புலன்ஸ் விமானம் அனுப்பி உதவிய சோனு சூட்!

உயிருக்கு போராடிய கொரோனா நோயாளி… ஆம்புலன்ஸ் விமானம் அனுப்பி உதவிய சோனு சூட்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
உயிருக்கு போராடிய கொரோனா நோயாளி... ஆம்புலன்ஸ் விமானம் அனுப்பி உதவிய சோனு சூட்! உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்தவர் கைலாஷ் அகர்வால். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், ஜான்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு இவரது உடல்நிலை மோசமானதால், உயர் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். பின்னர் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையை தேடி அலைந்துள்ளனர். ஆனால் எங்கும் இடம் கிடைக்க வில்லையாம். இதையடுத்து டுவிட்டர் வாயிலாக நடிகர் சோனு சூட்டுக்கு நிலமையை எடுத்துக் கூறி உள்ளனர். இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இடம் இருப்பதை அறிந்த சோனு சூட், கைலாஷ் அகர்வாலை ஜான்சியில் இருந்து ஐதராபாத்துக்கு கூட்டிச் செல்ல தன் சொந்த செலவில் ஆம்புலன்ஸ் விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வரும் கைலாஷ்...
6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு! கொரோனா பரவலின் 2-வது அலை தமிழகத்தில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 258 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதேபோல உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளிடம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவுறுத்தினார். தமிழகத்தில் தற்போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை ...
சனாதனத்தை வீழ்த்தி சனநாயகத்தைக் காப்பாற்றிய தமிழக மக்களுக்கு நன்றி! தொல். திருமாவளவன் அறிக்கை

சனாதனத்தை வீழ்த்தி சனநாயகத்தைக் காப்பாற்றிய தமிழக மக்களுக்கு நன்றி! தொல். திருமாவளவன் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics
    சனாதனத்தை வீழ்த்தி சனநாயகத்தைக் காப்பாற்றிய தமிழக மக்களுக்கு நன்றி! தொல்.திருமாவளவன் அறிக்கை சனாதன சக்திகளின் சதிகளை முறியடித்து சனநாயகத்தையும் தமிழகத்தையும் காப்பாற்றிய தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கொள்கைக் கூட்டணியை உருவாக்கி மகத்தான வெற்றியைப் பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எமது உளமார்ந்த பாராட்டுகளை, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடும் ஒரு கட்சி தனி சின்னத்தில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெறுவது தமிழகத் தேர்...
கொல்கத்தா வீரர்கள் இருவருக்கு கொரோனா – இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு!

கொல்கத்தா வீரர்கள் இருவருக்கு கொரோனா – இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
கொல்கத்தா வீரர்கள் இருவருக்கு கொரோனா - இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு! ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்த நிலையில், கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி மற்றும் கேரளாவை சேர்ந்த  சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்று நடைபெறும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் ஒத்திவைக்கப்பட இருப்பதாக பிசிசிஐ அதிகாரி கூறியதாக ஏ.என்.ஐ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.  எனினும், இதுபற்றி பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. ஐபிஎல் போட்டியில் விளையாடும் வ...
ஜெயலலிதாவுக்குப் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர் – ஸ்டாலினை வாழ்த்திய நடிகர் இவர்தான்!

ஜெயலலிதாவுக்குப் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர் – ஸ்டாலினை வாழ்த்திய நடிகர் இவர்தான்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ஜெயலலிதாவுக்குப் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர் - ஸ்டாலினை வாழ்த்திய பிரபல நடிகர்! தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 2) காலை முதலே மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி சுமார் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. திமுக தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சித்தார்த் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: "ஜெயலலிதாவுக்குப் பிறகு நம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர். மகத்தான வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். எங்கள் அனைவரின் நலனுக்கு நீங்கள் நல்ல ஆட்சியைக் கொண்டு வருவீர்கள் என நம்புகிறேன். எதிர்பார்ப்புகளோடும்...
தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த எடப்பாடி பழனிசாமி!

தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த எடப்பாடி பழனிசாமி!

HOME SLIDER, NEWS, politics
தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த எடப்பாடி பழனிசாமி! தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பெரும்பான்மைக்கு 118- தொகுதிகள் தேவை என்ற நிலையில் 126 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, தமிழக முதல் அமைச்சராக வரும் 7 ஆம் தேதி மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார் இதற்கிடையே, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை அதிமுக கூட்டணி வெல்லாத நிலையில், முதல்வர்  பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துள்ளார். சேலத்தில் இருந்து  தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ளார்...
நான் ஓய்வு எடுத்து கொள்வதற்கான நேரமிது – பிரசாந்த் கிஷோர்

நான் ஓய்வு எடுத்து கொள்வதற்கான நேரமிது – பிரசாந்த் கிஷோர்

HOME SLIDER, NEWS, politics
நான் ஓய்வு எடுத்து கொள்வதற்கான நேரமிது - பிரசாந்த் கிஷோர் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.  இவற்றில், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.  தமிழக சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.  இதனால் 10 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்க்கட்சியில் இருந்து ஆளுங்கட்சியாக உருவெடுத்துள்ளது இந்த இரு மாநில தேர்தல்களிலும் ஸ்டாலின் மற்றும் மம்தா பானர்ஜியை வெற்றி பெற செய்வதற்கான பணிக்காக அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஈடுபடுத்தப்பட்டார் இந்த தேர்தலில், பா.ஜ.க. 75க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.  இந்நிலையில், கிஷோர் அளித்துள்ள பேட்டியொன்றில், நான் தற்பொழுது மேற்கொண்டிருக்கும் பணியை தொடர விரும்பவில்லை.  நிறைவாக பணியாற்றி விட்டேன்.  நான் ஓய்வு எடுத்து கொள்வதற்கான நேரமிது.  வாழ்க்...