ஏப்ரல் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை முன்பதிவு செய்த தரிசன டிக்கெட் 90 நாட்களுக்கு செல்லும் – திருப்பதி தேவஸ்தானம்
ஏப்ரல் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை முன்பதிவு செய்த தரிசன டிக்கெட் 90 நாட்களுக்கு செல்லும் - திருப்பதி தேவஸ்தானம்
கொரோனா 2-ம் அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இலவச தரிசனத்தை முற்றிலும் ரத்து செய்தது
ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் எண்ணிக்கையையும் பாதியாக குறைத்துள்ளது.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், தரிசனத்திற்கு வர முடியாமல் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, ஏப்ரல் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனா தொற்று காரணமாக வரமுடியாத சூழ்நிலை ஏற்படும் நிலையில், அவர்கள் 90 நாட்களுக்குள் வந்து ஏழுமலை...









