ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

ஆட்சி காலத்தில் செய்ததை பட்டியல் போட்டு சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமி  தயாராக இருக்கிறாரா?  – ஸ்டாலின் கேள்வி

ஆட்சி காலத்தில் செய்ததை பட்டியல் போட்டு சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமி  தயாராக இருக்கிறாரா?  – ஸ்டாலின் கேள்வி

HOME SLIDER, NEWS, politics
ஆட்சி காலத்தில் இதை எல்லாம் செய்திருக்கிறோம் என்று பட்டியல் போட்டு சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமி  தயாராக இருக்கிறாரா?  - ஸ்டாலின் கேள்வி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கும்மிடிப்பூண்டியில் இன்று காலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:- நான் தேர்தல் நேரத்தில் மட்டும் வர மாட்டேன். எப்போதும் உங்கள் கூடவே இருப்பேன். உங்களுடைய சுக துக்க நிகழ்ச்சியில் உரிமையோடு கலந்து கொள்ளக்கூடியவன் என்பது உங்களுக்கு தெரியும். அந்த உரிமையுடன் உங்களிடம் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். நான் 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றை பெற்றிருப்பது உங்களுக்கு தெரியும். 13 வயதில் திருவாரூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் பயின்ற போதே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞரின் மகன்தான் நான். தி.மு.க.வின் சாதாரண தொண்டனாக 14 வயதில் என்னை இணைத்துக் கொண்டேன். இளைஞர் அணியை ஏற்படுத்தினேன். அதன்பிறகு வட்டபிரதிநி...
சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. சந்திரசேகரன் அதிமுகவில் இருந்து நீக்கம்!

சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. சந்திரசேகரன் அதிமுகவில் இருந்து நீக்கம்!

HOME SLIDER, NEWS, politics
சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்ததால் சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. சந்திரசேகரன் அதிமுகவில் இருந்து நீக்கம் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சந்திரசேகரன். இவர் இந்த தேர்தலில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். கட்சி தலைமை இவருக்கு பதிலாக எஸ்.சந்திரன் என்பவரை நிறுத்தியது இதனால் அதிருப்தி அடைந்த சந்திரசேகரன் எம்.எல்.ஏ. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களுடன் கொல்லிமலையில் ஆர்ப்பாட்டம் செய்தார். இந்த நிலையில் அவர் சுயேச்சையாக போட்டியிட இருப்பதாக அறிவித்து உள்ளார். இதையடுத்து சந்திரசேகரன் எம்.எல்.ஏ. சின்னகார வள்ளியில் தேர்தல் அலுவலகம் திறந்தார். இதனிடையே அவர் தேர்தலில் போட்டியிடும் தனக்கு சிலர் பிரச்சனை செய்யக்கூடும் என்றும், பிரசாரத்தின் போது அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ்...
பிரேமலதா தேர்தல் பிரச்சாரத்திற்கு 20 லட்சம் மதிப்பில் சொகுசு வேன் வழங்கிய டிடிவி!

பிரேமலதா தேர்தல் பிரச்சாரத்திற்கு 20 லட்சம் மதிப்பில் சொகுசு வேன் வழங்கிய டிடிவி!

HOME SLIDER, NEWS, politics
  பிரேமலதா தேர்தல் பிரச்சாரத்திற்கு 20 லட்சம் மதிப்பில் சொகுசு வேன் வழங்கிய டிடிவி! தேர்தலுக்கு பிரச்சாரம் செய்வதற்கு கூட சொந்த வாகனம் இல்லாமல் அதே விஜயகாந்த் மனைவி பிரேமலதா, டிடிவி தினகரனிடம், பிரசார வாகனத்தை பெற்றுள்ளார். இதை அறிந்த தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துபோய் இருக்கிறார்கள். 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிரச்சார வேன், தினகரனால், பிரேமலதா விஜயகாந்த்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில்தான் விருத்தாசலம் தொகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளாராம். இந்த நிலையில்தான், டிடிவி தினகரன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து கூட்டணியில் இணைந்ததற்கு நன்றியும் வாழ்த்தும் சொல்லிவிட்டு வந்தார். அத்தோடு 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பிரச்சார வேனை பிரேமலதா விஜயகாந்த்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அன்பளிப்பாக வழங்கி வந்திருக்கிறார் ...
மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட  திருநங்கை ஒருவர் மனுத்தாக்கல்!

மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட திருநங்கை ஒருவர் மனுத்தாக்கல்!

HOME SLIDER, NEWS, politics
  தமிழகத்தில் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட முதன்முறையாக திருநங்கை பாரதி கண்ணம்மா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா முன் 99 வகை மலர் கூறிய வாழ்த்திய அமைச்சர்!

முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா முன் 99 வகை மலர் கூறிய வாழ்த்திய அமைச்சர்!

NEWS
சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பது காலம் காலமாக இருந்து வந்த மரபு.ஆனால் பொங்கல் நாளே தமிழ் புத்தாண்டு என்று 2008ல் திமுக அரசாணை வெளியிட்டது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்தவுடன் 2012ஆம் ஆண்டு சித்திரை முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டு என்ற நடைமுறையை அறிவித்து அதை விழாவாக கொண்டாடினார் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா. இதற்கான விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றபோது விழாவுக்கு தலைமை வகித்தவர் அப்போது சபாநாயகராக இருந்த அமைச்சர் ஜெயக்குமார். நிகழ்ச்சியில் துவக்க உரையாற்றுவதற்காக வந்தபோது, தாயுள்ளம் கொண்ட தலைவிக்கு தமிழ் மலர்களை கொண்டு வாழ்த்து சொல்ல விரும்புகிறேன் என்று குறிப்பிட்டார், அரங்கம் அமைதியாக இருந்தது. சபாநாயகர் ஜெயக்குமார், சங்க இலக்கியங்களில் குறிஞ்சிப் பாட்டில் வரும் முழுக்கமுழுக்க தமிழ் மலர்கள் 99 தமிழ் மலர்களை படிக்க ஆரம்பித்தார். அனில்,ஆம்பல்,அனிச்சம்,குவளை,குறிஞ்சி,வெ...
 சீட் இல்லை… சுயேட்சையாக போட்டியிட போகும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாச்சலம் 

 சீட் இல்லை… சுயேட்சையாக போட்டியிட போகும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாச்சலம் 

HOME SLIDER, NEWS, politics
சீட் இல்லை... சுயேட்சையாக போட்டியிட போகும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாச்சலம் பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தோப்பு வெங்கடாச்சலம். இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகளாக இந்த தொகுதியின் எம்.எல்.ஏ., வாக இருந்து வருகிறார். கடந்த 2012-ம் ஆண்டு வருவாய்த்துறை அமைச்சராகவும், சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இந்த நிலையில் பெருந்துறை தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு தாக்கல் செய்தார். மீண்டும் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்து இருந்தார். ஆனால் அவருக்கு சீட் கொடுக்காமல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமார் என்பவருக்கு அ.தி.மு.க.வில் சீட் வழங்கப்பட்டது. இதனால் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வேட்பாளரை மாற்ற வேண்டும் என...
சட்டசபை தேர்தல் – தலைமறைவாக இருந்த 14 ஆயிரம் ரவுடிகள் கைது!

சட்டசபை தேர்தல் – தலைமறைவாக இருந்த 14 ஆயிரம் ரவுடிகள் கைது!

HOME SLIDER, NEWS, politics
சட்டசபை தேர்தல் முன்எச்சரிக்கை- தலைமறைவாக இருந்த 14 ஆயிரம் ரவுடிகள் கைது தமிழக சட்டசபை தேர்தலையொட்டி முன் எச்சரிக்கையாக தமிழகம் முழுவதும் ரவுடிகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக டி.ஜி.பி. அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் 21 ஆயிரத்து 289 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 732 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 18 ஆயிரத்து 183 பேர் நன்னடத்தை பிணைய பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனர். நீதிமன்றத்தால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்து வந்த 14 ஆயிரத்து 343 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தனிநபர் பாதுகாப்புக்காக உரிமம் பெற்று வைத்திருந்த 18 ஆயிரத்து 593 துப்பாக்கிகள் திரும்ப பெறப்பட்டன. தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், மதுரை ...
திமுக வேட்பாளருக்கு போட்டியாக சுயேச்சை வேட்பாளரை களம் இறக்கிய காங்கிரஸ்

திமுக வேட்பாளருக்கு போட்டியாக சுயேச்சை வேட்பாளரை களம் இறக்கிய காங்கிரஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக வேட்பாளருக்கு போட்டியாக சுயேச்சை வேட்பாளரை களம் இறக்கிய காங்கிரஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக  முருகன் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில் வேப்பனப்பள்ளி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்காமல் தி.மு.க. வேட்பாளரை அறிவித்தது அப்பகுதி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து வேப்பனப்பள்ளி தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் குப்பச்சிபாறை கிராமத்தில் ஒன்று கூடினர். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க. வினர் உள்ளடி வேலைகள் பார்த்து காங்கிரசை தோற்கடித்தனர். இதுபற்றி தி.மு.க. தலைமைக்கு புகார் செய்தும் கண்டிக்கவில்லை. இதனால் இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க போவதில்லை’ என்று கூட்டத்த...
ஆண்டு வருமானம் ரூ.1000- ஐ வைத்து ரூ.9 லட்சம் கடனை அடைத்த ஒரே தலைவன் நம்ப சீமான் தான்!

ஆண்டு வருமானம் ரூ.1000- ஐ வைத்து ரூ.9 லட்சம் கடனை அடைத்த ஒரே தலைவன் நம்ப சீமான் தான்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  ஆண்டு வருமானம் ரூ.1000- ஐ வைத்து ரூ.9 லட்சம் கடனை அடைத்த சீமான்! தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கிவருகிறது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்து. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்றுக்கொண்டிருகிறது. கடந்த 15 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், கமல், சீமான், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த சூழலில் சீமான் தனது வேட்பு மனுவில் தமக்கு அசையும் சொத்து ரூ.31,06,500 என்றும், அசையா சொத்துக்கள் ஏதுமில்லை எனவும் தெரிவித்துள்ளார். தனக்குக் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.65,500 மட்டுமே வருமானம் வந்துள்ளதாகவும் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் ஆண்டு வருமானம் ரூ.1000 மட்டுமே என்றும் சீமான் தெரிவித்துள்ளார். இந்த சூழலில்தான் சீமானின் கடன்...
துரோகமிழைத்த வாசன் ராஜினாமா செய்த த.மா.கா துணை தலைவர் கோவை தங்கம்! 

துரோகமிழைத்த வாசன் ராஜினாமா செய்த த.மா.கா துணை தலைவர் கோவை தங்கம்! 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
துரோகமிழைத்த வாசன் ராஜினாமா செய்த த.மா.கா துணை தலைவர் கோவை தங்கம்! வாசன் துரோகமிழைத்து விட்டதால் எல்லா பதவிகளையும் ராஜினாமா செய்கிறேன் என த.மா.கா துணை தலைவர் கோவை தங்கம் அறிவித்திருப்பது அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கோவை தங்கம், “நான் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக பல போராட்டங்களை நடத்தி ஊதிய உயர்வு பெற்று தந்துள்ளேன். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் சேர என்னைப் போன்றவர்களுக்கு உடன்பாடு இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதிமுகவுடனான கூட்டணியில் ஒரு தொகுதி பெற எதிர்ப்பு தெரிவித்தேன். 6 தொகுதியை வாங்க வேண்டாம். சுயேச்சையாக சைக்கிள் சின்னத்தில் 12 தொகுதிகளில் போட்டியிடலாம் என வாசனிடம் கூறினேன். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டாம் எனவும் தெரிவித்தேன். ஆனால் வாசன் என்னை கைவிட்டு, எனக்கு எதிராக துரோகம் ...