ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

நோயாளி யார்? அறிவாளி யார்? துக்ளக் விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு!

நோயாளி யார்? அறிவாளி யார்? துக்ளக் விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    நோயாளி யார்? அறிவாளி யார்? துக்ளக் விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு! உழைப்பால் உயர்ந்து துணை குடியரசு தலைவர் ஆனவர் வெங்கையா நாயுடு - துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு! பத்திரிகைத் துறையை ஆயுதமாக கையில் எடுத்தவர் சோ என புகழாரம்! சோவை ஆளாக்கியது பெரியவர் பக்தவத்சலம் மற்றும் கலைஞர் ஆகியோர் தான்! முரசொலி பத்திரிக்கை வைத்திருப்பவர்களை திமுககாரர்கள், துக்ளக் பத்திரிக்கையை வைத்திருப்பவர்களை அறிவாளி என்பார்கள்! கவலையை நிரந்தரமாக வைத்து கொள்பவன் நோயாளி, தற்காலிகமாக வைத்து கொள்பவன் அறிவாளி! சமுதாயம், அரசியல் இரண்டும் கெட்டுப் போயுள்ளது. பால் போன்ற செய்தியில் தண்ணீரை கலக்கிறார்கள். பால், தண்ணீரை பிரித்து பார்க்க பழகவேண்டும் என ரஜினிகாந்த் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது....
நான் தெலுங்காக இருந்தாலும் எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தது ஏவிஎம்மெய்யப்ப செட்டியார்தான் – TMJA பொங்கல் விழாவில் கின்னஸ் புகழ் பாடகி பி.சுசிலா பெருமிதம்!

நான் தெலுங்காக இருந்தாலும் எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தது ஏவிஎம்மெய்யப்ப செட்டியார்தான் – TMJA பொங்கல் விழாவில் கின்னஸ் புகழ் பாடகி பி.சுசிலா பெருமிதம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நான் தெலுங்காக இருந்தாலும் எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தது ஏவிஎம்மெய்யப்ப செட்டியார்தான் - TMJA பொங்கல் விழாவில் கின்னஸ் புகழ் பாடகி பி.சுசிலா பெருமிதம்! தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா சென்னையில் நடை பெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் சேரன், பாடகி பி.சுசிலா, எடிட்டர் மோகன், பிக்பாஸ் புகழ் தர்ஷன், நடிகை சர்மிளா ஆகியோர் கலந்துக் கொண்டனர். சங்கத்தின் தலைவர் கவிதா பத்திரிகையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பேசினார். இவ்விழாவில் சங்கத்தின் பொங்கல் சிறப்பு மலரை மூத்த பின்னணி பாடகி பி.சுசிலா மற்றும் எடிட்டர் மோகன் இருவரும் வெளியிட இயக்குனர் சேரன் மற்றும் பிக்பாஸ் தர்ஷன் இணைந்து பெற்றுக் கொண்டனர். தயாரிப்பாளர் எடிட்டர் மோகன் பேசும் போது, நான் கொஞ்சம் உண்மையை பேசுறவன், தப்பா நினைக்காதீங்க, நீங்க நிம்மதியா இருந்தால்...
தமிழகத்தில் 7 இடங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி!

தமிழகத்தில் 7 இடங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்தில் 7 இடங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி* *மதுரை, கரூர், திருச்சி மாவட்டங்களிலுள்ள 7 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்து அரசிதழில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.* *இதுகுறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 1960ம் ஆண்டு விலங்குகள் கொடுமைப்படுத்துதல் (prevention of cruelty to animals, 1960) தடுப்பு சட்ட 2ஆவது பிரிவில், 2017ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் வரும் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.* *கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா ராச்சாண்டார் திருமலை (rachandar tirumalai) கிராமத்திலும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா பாலமேடு, அலங்காநல்லூர், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா சூரியூர் (Sooriyur), மருங்காபூரி தாலுகா ஆவாரங்காடு, மணப்பாறை தாலுகா ...
எனக்காக பிரார்த்திக்கும் தொண்டர்களே எனக்கு முதல் கடவுள் – பொங்கல் விழாவில் விஜயகாந்த் உருக்கம்

எனக்காக பிரார்த்திக்கும் தொண்டர்களே எனக்கு முதல் கடவுள் – பொங்கல் விழாவில் விஜயகாந்த் உருக்கம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    விரைவில் பூரண உடல்நலம் பெற்று மீண்டு வருவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கொரட்டூரில் தேமுதிக சார்பில் 101 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சித் தொண்டர்களுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை வழங்கி பேசிய விஜயகாந்த், தனக்காக பிரார்த்திக்கும் தொண்டர்களே தமக்கு முதல் கடவுள் என்றார். குடியுரிமை திருத்த சட்டத்தை தொடர்ந்து ஆதரித்து பேசி வரும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இந்தியா இந்துக்கள் நாடு, சிறுபான்மையினர் எங்களுடன் இணைந்து வாழ்கின்றனர். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் கட்சி கணிசமான இடங்களில் வெற்றி ஈட்டியிருப்பதாகவும், அதனால் தமிழக அரசியலில் தேமுதிகவின் ஆட்டம் ஆரம்பித்து விட்டதாகவும் கூறினார். அடுத்து வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெற கட்ச...
பொள்ளாச்சியில் களைகட்டிய 6ம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழா!

பொள்ளாச்சியில் களைகட்டிய 6ம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    பொள்ளாச்சியில் களைகட்டிய 6ம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழா! பொள்ளாச்சியில் களைகட்டியுள்ள 6ம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழாவில், பறக்கவிடப்படும் ராட்சத பலூன்கள் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் இந்த பலூன் திருவிழா வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக ஜப்பான், நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் தமிழ்நாடு சார்பாக 4 வெப்பக்காற்று பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன. காற்று குறைந்த காலை நேரத்தில் சுமார் 500 முதல் 800 அடி உயரத்தில் பறக்கவிடப்படும் இந்த பலூன்கள், 5 கிலோ மீட்டர் சுற்றளவில் வட்டமடிக்கிறது. நாளொன்றுக்கு ஒருமுறை மட்டுமே பறக்கவிடப்படும் இந்த பலூன்களில் பறக்க அதிக கட்டணம் என்பதால், ஸ்பான்சர்கள் மட்டுமே பறக்கின்றனர். சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக மாலை நேரத்தில், ஆயிரத்து 50...
இலங்கைக்கு வாங்க ரஜினிக்கு அழைப்பு விடுத்த முன்னாள் முதல்வர்!

இலங்கைக்கு வாங்க ரஜினிக்கு அழைப்பு விடுத்த முன்னாள் முதல்வர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  இலங்கை வாங்க - ரஜினிக்கு விக்னேஸ்வரன் அழைப்பு! தமிழகத்துக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். இலங்கையில் தற்போது தமிழர்களின் அரசியல் நிலைமைகள் குறித்து அவர் இந்த சந்திப்பின்போது விளக்கமளித்தார். வடக்கிற்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் விக்னேஸ்வரன் ரஜினிகாந்துக்கு சிநேகபூர்வ அழைப்பை விடுத்தாரென அறியமுடிந்தது....
ஏடிஜிபி 3 பேர் டிஜிபி-ஆக பதவி உயர்வு… தமிழகத்தில் டிஜிபிக்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது!

ஏடிஜிபி 3 பேர் டிஜிபி-ஆக பதவி உயர்வு… தமிழகத்தில் டிஜிபிக்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க 1988-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த 3 ஏடிஜிபிக்கள் டிஜிபிக்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். 1. சஞ்சய் அரோரா . 1988-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், தற்போது அயல் பணியில் டெல்லியில் இருக்கிறார். 2025-ம் ஆண்டு ஜூலையில் ஓய்வு பெறுகிறார். 2. சுனில்குமார் சிங். பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக பதவி வகிக்கும் இவர் 1988-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெறுகிறார். 3. சுனில் குமார். ஆவின் ஏடிஜிபியாகப் பதவி வகிக்கும் இவர் 1988-ம் ஆண்டு பேட்ச் அதிகாரி. இவர் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெறுகிறார். தற்போது தமிழகத்தில் உள்ள டிஜிபிக்கள் விவரம்: 1. ஜெ.கே.திரிபாதி - டிஜிபி - சட்டம் ஒழுங்கு (1985 பேட்ச்) ஜூன் 2021 ஓய்வு. 2. ஜா...
ஒரு கிராம் தங்கம் விலையை விட மல்லிகை பூ ஒரு கிலோ அதிக விலைக்கு உயர்ந்தது!

ஒரு கிராம் தங்கம் விலையை விட மல்லிகை பூ ஒரு கிலோ அதிக விலைக்கு உயர்ந்தது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  *பூக்கள் விலை கிடுகிடு உயர்வு!* பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை நான்காயிரம் ரூபாயை தொட்டுள்ளது. இது தங்கத்தின் ஒரு கிராம் விலையை விட அதிகம். கடும் பனிப்பொழிவால் மல்லிகைப் பூக்களின் மகசூல் சரிந்து, அதன் வரத்தும் குறைந்தது. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லி படிப்படியாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி ரூபாய் நான்காயிரத்தை தொட்டுள்ளது. ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான முல்லை ஆயிரத்து 300 ரூபாய்க்கும், 600 ரூபாய்க்கு விற்பனையான பிச்சி 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதேபோன்று காக்கிரட்டான் கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், செவ்வந்தி 200 ரூபாய்க்கும், ரோஜா 180 ரூபாய்க்கும் விற்பனையாகிறது....
இந்தியாவுக்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக ரகசிய தகவல்… உளவுத்துறை எச்சரிக்கை!

இந்தியாவுக்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக ரகசிய தகவல்… உளவுத்துறை எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *இந்தியாவுக்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக தகவல்* *பாகிஸ்தான் உளவுத்துறையிடம் பயிற்சி பெற்ற 300 பயங்கரவாதிகள், இந்தியாவிற்குள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.* *இதுகுறித்து ராணுவ உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில், இந்தியாவிற்குள் ஊடுருவ சரியான நேரம் பார்த்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.* *பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. துணையோடு  பயங்கரவாதிகள் இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அவர்களுக்கு ஆப்கன் தாலிபன்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.* *தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து கேட்ட போது இந்த தகவல் தெரியவந்துள்ளதாக இந்திய ராணுவ உளவுத்துறை எச்சரித்துள்ளது.*...
MGR சுடப்பட்ட தினம் இன்று – நீங்காத நினைவுகள்

MGR சுடப்பட்ட தினம் இன்று – நீங்காத நினைவுகள்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  இதே ஜனவரி 12ம் நாள். 1967 - எம். ஜி. ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டார். அன்று மாலை 5 மணி அளவில் எம்.ஆர். இராதாவும், திரைப்படத் தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் நந்தம்பாக்கம் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். எம். ஜி. ஆருக்கும் எம். ஆர் . ராதாவுக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி ராதா தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கி மூலம் எம். ஜி. ஆரை சுட்டதாக கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர். அவரது இடது காதருகே சுடப்பட்டார். துப்பாக்கி குண்டு அவரது தொண்டையில் பாய்ந்தது. இராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து இராதா எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும். எம் ஆர். ராதா மீது வழக்கு தொடர...