யூ-டியூப், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!
யூ-டியூப், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
திருநெல்வேலியைச் சேர்ந்த உமா மகேஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “சென்னையில் பெண்களிடம் தவறான முறையில் கேள்விகள் கேட்டு யூ-டியூப் சேனலில் வீடியோ வெளியிட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களது யூ-டியூப் சேனல் போலீசாரால் முடக்கப்பட்டு விட்டது.
இருப்பினும் அவர்களது வீடியோக்கள் பல்வேறு சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு இல்லாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்
2012 ஆம் ஆண்டு நடந்த சர்வே ஒன்றில் இணையதளம் மூலம் மிரட்டுவதில் இந்தியா 3வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஆன்லைன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாடம் நடத்தப...









