திமுகவின் கதவுகள் அடைக்கப்பட, ரஜினிகாந்தும் கட்சி தொடங்கப்போவதில்லை என்பதால் தனித்துவிடப்படும் பாமக!
திமுகவின் கதவுகள் அடைக்கப்பட, ரஜினிகாந்தும் கட்சி தொடங்கப்போவதில்லை என்பதால் பாமக தனித்துவிடப்படும் நிலை
பாமக சிறப்புப் பொதுக்குழுவில் அதிமுகவுடன் கூட்டணி சேருவதைத் தவிர வேறு முடிவுகள் விவாதிக்கப்பட வாய்ப்பில்லை என்றும், தொகுதி பேரத்தை அதிகப்படுத்த தனித்துப்போட்டி என்று சில மிரட்டல் பேச்சுக்கள் மட்டும் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே, திமுகவின் கதவுகள் பாமகவுக்கு அடைக்கப்பட்டுவிட்டது. நடிகர் ரஜினிகாந்தும் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்பதால் 2021 சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி அமைக்கும் வாய்ப்பும் தமிழக அரசியல் களத்தில் இல்லை. இந்த நிலையில் அதிமுக அணியில் சேருவதைத் தவிர பாமகவுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை.
சிறப்புப் பொதுக்குழுவில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்பட வாய்ப்பு இல்லையென்றும் கூட்டணிப் பேச்சுகளை நடத்த பாமக தலைவர் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கும் தீர்மானம் நிறை...









