சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

திருப்பதி கோவிலுக்கு வரும் வெளிநாட்டு நன்கொடைகள் நிறுத்தம்! ஏன் தெரியுமா?

திருப்பதி கோவிலுக்கு வரும் வெளிநாட்டு நன்கொடைகள் நிறுத்தம்! ஏன் தெரியுமா?

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருப்பதி கோவிலுக்கு வரும் வெளிநாட்டு நன்கொடைகள் நிறுத்தம்! ஏன் தெரியுமா? திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் உண்டியலில் தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை காணிக்கையாக செலுத்துகின்றனர் வெளிநாடுகளில் வாழும் ஏழுமலையான் பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு ஆன்லைன் மூலம் நன்கொடை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் வெளிநாட்டு நிதியை பெறுவதற்கான உரிமத்தை புதுப்பிக்காததால் வெளிநாட்டில் இருந்து வரும் நன்கொடை நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் மதம் சார்ந்த அறக்கட்டளைகளுக்கு நிதி வழங்குவதற்காக உள்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கி வருகிறது. அவ்வாறு திருப்பதி தேவஸ்தானத்திற்கு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் உரி...
ஜோடியை இழந்த மயில் நெகிழச்செய்யும் சோகம்!

ஜோடியை இழந்த மயில் நெகிழச்செய்யும் சோகம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜோடியை இழந்த மயில் நெகிழச்செய்யும் சோகம்! நெருங்கி பழகி வந்தவர்களை இழப்பது என்பது துரதிர்ஷ்டவசமானது. மனிதர்களாகிய நாம் நமக்கு நெருங்கியவர்களை இழக்கும் போது மிகுந்த வேதனை அடைவோம் . ஆனால் அதுவே விலங்குகளுக்கோ அல்லது பறவைகளுக்கோ நடந்தால் அவை எப்படி அந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் என்பதற்கு ஒரு விடை கிடைத்துள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு மயில்கள் பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளன. இந்நிலையில், அதில் 1 மயில் திடீரென உயிரிழந்தது. இறந்த அந்த மயிலை புதைப்பதற்காக அப்பகுதி மக்கள் தூக்கி கொண்டு சென்றனர். இதனை கவனித்து கொண்டிருந்த இன்னொரு மயில் அவர்களை பின் தொடர்ந்து சென்றது. தன் ஜோடியை இழந்த மயில் அங்கிருந்து திரும்ப வர மனமில்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது. மயில் இனங்களை பொறுத்தவரையில் ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய ஜோடியை மாற்றிக் கொண்டே இருக்கும். பெரும்பாலும் இனப்பெருக்கத்தீர்காக ச...

‘டாஸ்மாக்’ கடைகள் 4 நாள் மூட உத்தரவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
‘டாஸ்மாக்’ கடைகள் 4 நாள் மூட உத்தரவு! ‘டாஸ்மாக்’ மேலாண்மை இயக்குனர், அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜனவரி 15-ந்தேதி திருவள்ளுவர் தினம், 18-ந்தேதி வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினம், 26-ந்தேதி குடியரசு தினம் என்பதால், மேற்கண்ட நாட்கள் மதுபானம் விற்பனையில்லா தினங்களாக அனுசரிக்கப்பட இருக்கிறது. இதையொட்டி மேற்கண்ட நாட்களில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற ‘பார்’களை கடை மேற்பார்வையாளர்கள் பூட்டி ‘சீல்’ வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. எனவே அப்போது ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் அடைக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் இந்த மாதத்தில் 4 நாட்கள் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் அடைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க...
இந்தியாவில் முதல் முறையாக வாட்டர் டேக்ஸி சேவை!

இந்தியாவில் முதல் முறையாக வாட்டர் டேக்ஸி சேவை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  மும்பை அதிநவீன வாட்டர் டாக்ஸி சேவைகளை இயக்குவதன் மூலம் புதிய போக்குவரத்து தீர்வைப் பெற உள்ளது. மும்பை நகருக்கும் 30 கிமீ தொலைவில் உள்ள நவி மும்பை பகுதிக்கும் இடையே நீர்வழிப்பாதையில் வாட்டர் டேக்ஸி சேவையை இயக்குவதற்காக திட்டமிடப்பட்டிருந்தது. நிதின் கட்கரி மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரான பின்னர் இந்த திட்டம் புத்துயிர் பெற்றது. இத்திட்டமானது மும்பை துறைமுக கழகம், மகாராஷ்டிரா மேரிடைம் வாரியம், நகர் மற்றும் தொழில்துறை மேம்பாட்டு கழகம் ஆகிய அமைப்புகளுக்கிடையான கூட்டு முயற்சி ஆகும் முதல் கட்டமாக Ferry Wharfல் உள்நாட்டு குரூஸ் டெர்மினல் (DCT) மற்றும் பல்லார்ட் பகுதியில் உள்ள சர்வதேச குரூஸ் டெர்மினல் (ICT) ஆகிய இரு முனையங்களுக்கு இடையே இந்த வாட்டர் டேக்ஸி சேவை தொடங்க உள்ளது. மூன்று நிறுவனங்கள்  இந்த வாட்டர் டேக்ஸி சேவையை அளிக்க உள்ளன. மேலும் ஒரு நிறுவனம் அ...
கஞ்சாவை பக்கத்து வீட்டு காம்பவுண்டில் கஞ்சா விதைத்து பூச்செடி போல வளர்த்த கில்லாடி வாலிபர்!

கஞ்சாவை பக்கத்து வீட்டு காம்பவுண்டில் கஞ்சா விதைத்து பூச்செடி போல வளர்த்த கில்லாடி வாலிபர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கஞ்சாவை பக்கத்து வீட்டு காம்பவுண்டில் கஞ்சா விதைத்து பூச்செடி போல வளர்த்த கில்லாடி வாலிபர்! கஞ்சா கிடைக்காத காரணத்தால் கஞ்சாவை பக்கத்து வீட்டு காம்பவுண்டில் நட்டு வைத்து செடியாக வளர்த்த கில்லாடி வாலிபரை போலீசார்  கைது செய்துள்ளனர். திருப்பூர் மாநகர நல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தனம்பாளையம் பகுதியில் கஞ்சா செடி வளர்ந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவல் அடிப்படையில் நல்லூர் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, முத்தம்பாளையம், வாய்க்கால் மேடு பகுதியிலிருந்து செவந்தாம்பாளையம் செல்லும் வழியில்  உள்ள ஒரு பனியன் கம்பெனி ஹாஸ்டலில்  பூச்செடிளுக்கு நடுவில் கஞ்சா செடி வளர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த விடுதியில் இருந்த 8 நபர்களிடம் போலீசார் விசாரித்தனர் அப்போது ஹாஸ்டலில் வசிக்காத வெளி நபர் ஒருவர் சம்பந்தமே இல்லாமல் வந்து பூ...
பிரதமர் மோடி மதுரையில் 12-ம்தேதி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு? காரணம் இதுதானா?

பிரதமர் மோடி மதுரையில் 12-ம்தேதி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு? காரணம் இதுதானா?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  பிரதமர் மோடி மதுரையில் 12-ம்தேதி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு? காரணம் இதுதானா? தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து கல்லூரிகளின் கட்டுமான பணிகள் பல மாதங்களாக நடந்து வந்தது. இந்த கட்டிடங்களை வரும் 12ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திரந்து வைக்க முடிவு செய்யப்பட்டிர்ருந்தது. அதே தினத்தில் மதுரையில் தமிழக பாஜக சார்பில் பொங்கல் விழவை நடத்த திட்டமிட்டிருந்தார்கள். அந்த பொங்கல் விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் தமிழகத்தில் வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருவதால் மீண்டும் இரவு ஊரட...
காலையில் மதுரை மாலையில் திருச்சி  திடீரென சிறை மாற்றப்பட்ட ராஜேந்திரபாலாஜி! காரணம் என்ன?

காலையில் மதுரை மாலையில் திருச்சி திடீரென சிறை மாற்றப்பட்ட ராஜேந்திரபாலாஜி! காரணம் என்ன?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
காலையில் மதுரை மாலையில் திருச்சி திடீரென சிறை மாற்றப்பட்ட ராஜேந்திரபாலாஜி! காரணம் என்ன? நிர்வாக காரணங்களுக்காக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரை சிறையிலிருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அதிமுக ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கி தருவதாக கூறி சுமார் 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு அவரை கைது செய்விருந்த நிலையில் தலைமறைவானார். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் அவரை கைது செய்வதற்காக தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில்  கர்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நேற்று காலை காரில் சென்று கொண்டிருந்த ராஜேந்திர பாலாஜியை தமிழக தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் கைது செய்ய்யப்படும்...
கொரோனா பாதிப்பு… வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகர்!

கொரோனா பாதிப்பு… வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகர்!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  கொரோனா பாதிப்பு... வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட நடிகர் மகேஷ் பாபு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது துபாயில் இருக்கும் மகேஷ் பாபு, தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தகவலை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறி உள்ளார். மேலும், சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனே தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்றும் மகேஷ் பாபு கேட்டுக்கொண்டுள்ளார்.  ...
11 இந்திய மாலுமிகளை காப்பாற்றிய ஈரானிய கடலோர காவல்படையினர்!

11 இந்திய மாலுமிகளை காப்பாற்றிய ஈரானிய கடலோர காவல்படையினர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
11 இந்திய மாலுமிகளை காப்பாற்றிய ஈரானிய கடலோர காவல்படையினர்! ஓமன் நாட்டின் சோகர் துறைமுகத்திற்கு சர்க்கரை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று சூறாவளிக்காற்று மற்றும் கடல் சீற்றத்தினால் ஈரான் கடற்பகுதிக்குள் நுழைந்தது. மூழ்கும் நிலையில் இருந்த இந்த கப்பலில் இருந்த 11 இந்திய மாலுமிகளையும் ஈரானிய கடலோர காவல்படையினர் மீட்டு கரை சேர்த்தனர். மாலுமிகள் அனைவரும் நலமாக இருப்பதாக கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்....
வரன்தேடுபவர்களை குறிவைத்து திருமணம்- 50 வாலிபர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்த மோசடி கும்பல்!

வரன்தேடுபவர்களை குறிவைத்து திருமணம்- 50 வாலிபர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்த மோசடி கும்பல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வரன்தேடுபவர்களை குறிவைத்து திருமணம்- 50 வாலிபர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்த மோசடி கும்பல்! சேலத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் திருமணத்திற்கு பெண் தேடி வந்தார். அப்போது இணையதளத்தில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து அந்த எண்ணை தொடர்பு கொண்டார். எதிர்முனையில் பேசிய நபர்கள், தங்களது பெயர் சுனில், கார்த்திகேயன் என்றும், புரோக்கர்களாக இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் தங்களிடம் 24 வயது இளம்பெண் இருப்பதாகவும், பெண் பார்க்க கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறைக்கு வருமாறு கூறினர். மணிகண்டனும் அங்கு சென்றார். அப்போது புரோக்கர்கள் சபிதா(24) என்ற பெண்ணை காண்பித்து பிடித்திருக்கிறதா? என கேட்டனர். மணிகண்டனும் பெண் பிடித்திருக்கிறது என கூறவே, அவர்கள் உடனே திருமணத்தை வைத்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து 2 பேருக்கும் அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தனர். மேலும் அவரி...