ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை, மானியம் இல்லை – உ.பி., அரசு அதிரடி

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை, மானியம் இல்லை – உ.பி., அரசு அதிரடி

HOME SLIDER, NEWS, செய்திகள்
  2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை, மானியம் இல்லை – உ.பி., அரசு அதிரடி   உத்தரபிரதேச மக்கள் தொகை வரைவு மசோதாவில் 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலைகள் இல்லை , அரசு மானியம் கிடைக்காது உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் போட்டியிட முடியாது எனகூறப்பட்டு உள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு நலத்திட்டங்களை குறைத்தல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை உள்ளிட்டவை உத்தரபிரதேச அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு வரைவு மசோதாவில் இடம் பெற்றுள்ளன உத்தேச மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதாவின் வரைவின் படி, உத்தரபிரதேசத்தில் இரு குழந்தைக் கொள்கையை மீறும் எவரும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தும், அரசு வேலைகளில் பதவி உயர்வு பெறுவதிலிருந்தும் அல்லது எந்தவொரு அரசாங்க மானியத்தையும் பெறுவதிலிருந்து தடை செய்யப்படுவார்கள் என கூறப்பட்டு உள்...
பிரதமர் மோடியின் மந்திரிசபையில் 42 சதவீதம் பேர் கிரிமினல்,  90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் – ஏடிஆர் ஆய்வு அறிக்கை

பிரதமர் மோடியின் மந்திரிசபையில் 42 சதவீதம் பேர் கிரிமினல், 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் – ஏடிஆர் ஆய்வு அறிக்கை

HOME SLIDER, NEWS, செய்திகள்
பிரதமர் மோடியின் மந்திரிசபையில் 42 சதவீதம் பேர் கிரிமினல், 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் - ஏடிஆர் ஆய்வு அறிக்கை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அதிகாரத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. கூட்டணி மந்திரிசபையில் அங்கம் வகித்த சிவசேனா, சிரோமணி அகாலிதளம் கட்சிகள், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகின. அதைத்தொடர்ந்து அவற்றின் மந்திரிகள் அரவிந்த் சவந்த், ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகலாலும், மத்திய மந்திரிகளாக இருந்த ராம்விலாஸ் பஸ்வான், சுரேஷ் அங்காடி ஆகியோரின் மறைவாலும், காலியிடங்கள் ஏற்பட்டன. இதனால் மூத்த மத்திய மந்திரிகள் பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளை கவனித்து வந்தனர் இந்த நிலையில் அடுத்த ஆண்டு உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன. அங்கு பா.ஜ.க. செல்வாக...
தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கொரோனா நோய்த் தொற்று பரவலைக் குறைக்கத் தேவையான கட்டுப்பாடுகளை 31-7-2021 வரை தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 12-7-2021 முத...
இன்று மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயாராகிறது!

இன்று மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயாராகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இன்று மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயாராகிறது! தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க முடியாமல் போனது. என்றாலும் 66 இடங்களை கைப்பற்றி அ.தி.மு.க. தனது வலிமையை நிரூபித்தது. ஜெயலலிதா இல்லாத நிலையில் எடப்பாடி பழனிசாமி,   ஓ.பன்னீர்செல்வம்  தலைமையில் அ.தி.மு.க. பெற்ற இந்த வெற்றியை முக்கியத்துவமாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தேர்தலில் 3 சதவீத வாக்குகளே வித்தியாசம் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே  அ.தி.மு.க. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்படும் என்று  தொண்டர்கள் கருதுகிறார்கள். ஆனால் அரசியலை விட்டு ஒதுங்குவதாக கூறியிருந்த சசிகலா மூலம் மீண்டும் அ.தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி...
தமிழ்நாடு முழுவதும் ரூ.520 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு!

தமிழ்நாடு முழுவதும் ரூ.520 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழ்நாடு முழுவதும் ரூ.520 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு! தென்காசி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு  ஆய்வு செய்தார். அதன்படி ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோவில், கீழப்பாவூர் திருவாலீஸ்வரர் கோவில், குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி, தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் உள்பட கோவிலில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் கோபால சுந்தரராஜ் ஆகியோருடன் அமைச்சர் சேகர்பாபு  ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடியாக சென்று கள ஆய்வு செய்து கோவில்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் கோவிலின் சார்பில் நடைபெறுகின்ற அனைத்து மையங்களையும் ஆய்வு செய்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் குற்றாலத்தி...
இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்! பிரதமர் மோடி  தலைமையிலான மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அதிகாரத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. ஆனால் இந்த 2 ஆண்டுகளில் ஒரு முறைகூட மத்திய மந்திரிசபையில் மாற்றமோ, விரிவாக்கமோ செய்யப்படவில்லை. இந்த நிலையில், மத்திய மந்திரிசபையில் மாற்றங்கள் செய்ய வசதியாக 12 மந்திரிகள் நேற்று ராஜினாமா செய்தனர். 12 மந்திரிகளின் ராஜினாமாக்களை  பிரதமர் மோடியின் பரிந்துரை பேரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து மத்திய மந்திரிசபையில் புதிய மந்திரிகளின் பதவி ஏற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை நடந்தது. இதில் புதிதாக 43 மந்திரிகள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி  தலைமையில் இன்...
நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் சமுத்திரகனி படம்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் சமுத்திரகனி படம்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் சமுத்திரகனி படம்.... ரிலீஸ் தேதி அறிவிப்பு! தனுஷின் ‘திருடா திருடி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுப்ரமணியம்சிவா. அதன்பின் பொறி, யோகி, சீடன் போன்ற படங்களை இயக்கிய அவர், வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் சமுத்திரகனியை வைத்து இவர் இயக்கியிருக்கும் படம் ‘வெள்ளை யானை’. நடிகை ஆத்மியா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து, திரையரங்க வெளியீட்டிற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தது படக்குழு. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இப்படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளனர். அதன்படி வர...
புதிய தளர்வுகள் அமல்- தமிழகம் முழுவதும் பஸ்கள் இயக்கம்!

புதிய தளர்வுகள் அமல்- தமிழகம் முழுவதும் பஸ்கள் இயக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
புதிய தளர்வுகள் அமல்- தமிழகம் முழுவதும் பஸ்கள் இயக்கம்! தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மே மாதம் 24-ந்தேதி முதல் 2 வாரத்திற்கு தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு நோய் தொற்று சற்று தணிந்ததால் ஜூன் 7-ந்தேதி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் இருந்து ஒவ்வொரு வாரமும் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி 5 தடவை தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நோய் தாக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தளர்வுகள் அறிவிப்பதற்கு முன்னதாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துவது வழக்கம். அதன்படி கடந்த 2-ந்தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் மேலும் புதிய தளர்வுகளை அறிவிக்கலாம் என்று யோசனை தெரிவித்தனர். அதன்படி புதிய தளர்வுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிய...
சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிரபல நடிகை – வைரலாகும் புகைப்படம்!

சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிரபல நடிகை – வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, sports, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுவாக சென்னை கடற்கரை சாலை, ஈசிஆர் சாலையில் சைக்கிளிங் மேற்கொள்வதை விடாமல் செய்து வருகிறார். தற்போது முதல்வர் ஆன பிறகும், பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் சைக்கிளிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் ஞாயிற்றுகிழமையான இன்று கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்றார் மு.க.ஸ்டாலின். வழிநெடுக போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான இந்த சைக்கிள் பயணத்தில் அவரது நண்பர்கள் சிலரும் பங்கேற்றனர். இந்நிலையில் சைக்கிளிங் சென்ற முதல்வருடன், நடிகை யாஷிகா ஆனந்த் செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் லைக்குகளும் குவிந்து வருகிற...