இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – வைகோ
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 20-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்
- வைகோ
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய அரசும்,
தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டது தொடர்பாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களைக் கைது செய்வதும் அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது.
இவ்வாறு எல்லை தாண்டி வந்து இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்த 121 படகுகள் இலங்கை துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுக் கிடக்கின்றன.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, இப்படகுகளை மீட்பதற்கு இந்திய அரசு எவ...









