ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

ஒரே வாரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்… இது தமிழகமா, வடமாநிலமா?- மு.க. ஸ்டாலின்

ஒரே வாரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்… இது தமிழகமா, வடமாநிலமா?- மு.க. ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஒரே வாரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்... இது தமிழகமா, வடமாநிலமா?- மு.க. ஸ்டாலின் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் ‘‘தமிழகத்தில் தலைவிரித்தாடும் துப்பாக்கிக் கலாச்சாரம்; கள்ளத்துப்பாக்கிகளின் கணக்கற்ற புழக்கம்! காவல்துறையை வைத்திருக்கும் முதல்வருக்கு சுயவிளம்பரப் படப்பிடிப்புக்கு மட்டும்தான் நேரம் இருக்கிறதா?’’ எனப் பதிவிட்டுள்ளார். சென்னையில் கடந்த வாரம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். சிறுபனையூர் தக்கா கிராமத்தில் ஷான் என்பவர் மீது ஹாரூண் துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த நிலையில்தான் பழனியில் இன்று துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. https://twitter.com/mkstalin/status/1328346141637832704?s=20...
அல்வா விற்கும் கதை சொல்ல வரும் அமித்ஷா – காங்கிரஸ் எம்.பி.

அல்வா விற்கும் கதை சொல்ல வரும் அமித்ஷா – காங்கிரஸ் எம்.பி.

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பா.ஜனதா கட்சியின் முக்கியத் தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா வருகிற 21-ந்தேதி தமிழகம் வருகிறார் என்று தமிழக பா.ஜனதா தலைவர் எல். முருகன் நேற்று தெரிவித்தார். மேலும், அமித் ஷாவின் தமிழக வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை தரும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ‘‘அல்வா விற்பதைப் போன்ற பெரும் கதை ஒன்றை சொல்ல வருகிறார் அமித்ஷா. இதற்கு முன் பலமுறை தமிழகம் வந்த அமித் ஷா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’’ என்றார்....
2021 சட்டமன்ற தேர்தலில் மு.க. அழகிரி ஆதரவு யாருக்கு?

2021 சட்டமன்ற தேர்தலில் மு.க. அழகிரி ஆதரவு யாருக்கு?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  2021 சட்டமன்ற தேர்தலில் மு.க. அழகிரி ஆதரவு யாருக்கு? மதுரையில் மு.க. அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 2021 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது அல்லது புதிய கட்சி தொடங்குவது குறித்து எனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே அது குறித்த முடிவுகள் தெரிவிக்கப்படும். கொரோனா நோய் பரவல் காரணமாக எனது ஆதரவாளர்களை சந்திக்கவில்லை எனது ஆதரவாளர்கள் என்னிடம் தான் உள்ளனர் அனைவரும் நன்றாக உள்ளனர். திமுகவில் புகைச்சல் அதிகமாகியுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் திமுகவின் நிலையை நீங்களே அறிந்து கொள்ளலாம். அதுகுறித்து தற்போது என்னால் கூற முடியாது ஏனெனில் நான் ஜோதிடன் கிடையாது. தற்போது திமுகவில் தற்போது உள்ள சில தலைவர்கள் பதவிக்காகவே இருக்கின்றனர். 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அந்த நிலைமையை நீங்களே பார்க்கத்தான் போகிறீர்கள். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கல...
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் 9 பேருக்கு எதிராக 31 பக்க குற்றப்பத்திரிக்கை 105 சாட்சிகள்!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் 9 பேருக்கு எதிராக 31 பக்க குற்றப்பத்திரிக்கை 105 சாட்சிகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் 9 பேருக்கு எதிராக 31 பக்க குற்றப்பத்திரிக்கை 105 சாட்சிகள்! சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ். இவர்களது கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இவ்வழக்கில் கடந்த செப்.25ல் மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒருங்கிணைந்த குற்றப்பத்திரிக்கையை சிபிஐ போலீசார் தாக்கல் செய்தனர். கொரோனா பாதித்து இறந்த எஸ்எஸ்ஐ பால்துரை தவிர, மற்ற 9 பேருக்கும் எதிராக சிபிஐ கூடுதல் எஸ்பி வி.கே.சுக்லா, 31 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த குற்றப்பத்திரிக்கையில் சாத்தான்குளம் காவல்நிலைய தலைமை காவலர் பியூலா, ரேவதி உள்ளிட்ட 6 காவலர்கள், சிறை ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் சில வியாபாரிகள், உறவினர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட 105 பேர் சாட்சிகளாக இடம் பெற்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. ம...
திருப்பதி கோயில் ஊழியர் பக்தருக்கு அனுப்பிய ஆபாச வீடியோ!

திருப்பதி கோயில் ஊழியர் பக்தருக்கு அனுப்பிய ஆபாச வீடியோ!

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலுக்கு பிரத்யேகமாக டிவி சேனல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இது ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் (SVBC) என்ற பெயரில் இயங்கி கொண்டிருக்கிறது. இதில் 11 மணி நேரம் நேரலை நிகழ்ச்சிகளும், 4 மணி நேரம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதற்காக 90 ஊழியர்கள் போதும் என்று கூறப்படும் நிலையில், தற்போது 248 பேர் வேலை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 150 பேர் எந்தவித வேலையும் செய்யாமல் வெறுமனே சம்பளம் பெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ஏழுமலையான் தொடர்பான பக்தி நிகழ்ச்சி ஒன்றை அனுப்புமாறு SVBC சேனலிடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து இ-மெயில் மூலம் லிங்க் ஒன்று பக்தருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை திறந்து பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந...
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு  உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனை அடுத்து இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, சேலம், நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்குமாறும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது....
டிடிவி தினகரன் மகள் திருமண நிச்சயதார்த்தம்

டிடிவி தினகரன் மகள் திருமண நிச்சயதார்த்தம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் மகளுக்கும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுக்கும் நேற்று முன்தினம் இரவு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தை அடுத்த சுவாமிமலை அருகே உள்ள தனியார் ரிசார்ட்டில் நேற்று முன்தினம் இரவு டிடிவி.தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன் ராமநாதன் துளசி அய்யாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. முன்னதாக மாப்பிள்ளை வீட்டார் சீர் வரிசை தட்டு எடுத்து வந்தனர். டிடிவி.தினகரனின் மனைவி அனுராதா மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்றார். கிருஷ்ணசாமி வாண்டையார், தங்கள் குடும்பத்தினரை டிடிவி.தினகரனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். நிச்சயதார்த்த விழா என்றால் பெண்ணையும், மாப்பிள்ளை யையும் ஒரே மேடையில் உட்கார வைத்து உறவினர்கள் அவர்களுக்கு பொட்டு வைத்து வாழ்த்துவது தற்போதை...
2021 தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிமுகவில் குழுக்கள் ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

2021 தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிமுகவில் குழுக்கள் ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
2021 தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிமுகவில் குழுக்கள் ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு 2021 ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அதிமுகவில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வெளியிட்டு உள்ளனர். சட்டமன்ற பேரவை பொது தேர்தல் – 2021 தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான குழுக்களை அமைத்துள்ளது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள். அதன்படி, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரசாரக்குழு, கழகத்தின் சார்பில் ஊடகவியலாளர், செய்தியாளர்களை சந்திக்கும் குழு, ஊடக ஒருங்கிணைப்பாளர் உள்பட பல குழுக்களும், அதற்கான நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளனர்....
டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது – ஜோ பைடன்

டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது – ஜோ பைடன்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக கூறி தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்து வருகிறார். தேர்தல் தொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் டிரம்ப் பிரசார குழு வழக்கு தொடுத்து உள்ளது. இந்நிலையில்,வெல்லிங்டன் மாகாணத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஜோ பைடன்,  டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது என்றார். இதுதொடர்பாக பைடன் கூறுகையில், டிரம்பின் நடவடிக்கை அதிபரின் பாரம்பரியத்திற்கு உகந்ததாக இருக்காது. ஜனவரி மாதத்தில் அனைத்தும் பலனளிக்கும் விதமாகவே அமையப் போகிறது. நம்பிக்கையான எதிர்பார்ப்பு என்னவென்றால், ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அமெரிக்க மக்கள் புரிந்து கொள்கிறார்கள். கடந்த 5,6 ஆண்டுகளில் நாம் கண்டு வந்த கசப்பான அரசியலில் இருந்து நமது நாட்டை நாம் விடுவிப்போம் என்று நம்புகிறேன். நடந்து விடும் எ...
ஒரே ஷாட்டில் எடுக்கும் “இரவின் நிழல்” இன்னும் புதுசாய் இருக்கும் -TMJA தீபாவளி விழாவில் பார்த்திபன் அறிவிப்பு

ஒரே ஷாட்டில் எடுக்கும் “இரவின் நிழல்” இன்னும் புதுசாய் இருக்கும் -TMJA தீபாவளி விழாவில் பார்த்திபன் அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ஒரே ஷாட்டில் எடுக்கும் "இரவின் நிழல்" இன்னும் புதுசாய் இருக்கும் -TMJA தீபாவளி விழாவில் பார்த்திபன் அறிவிப்பு   செய்யாமல்செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது,,,, வணக்கம், இந்த கொரோனா பேரிடர் காலத்தில், எமது பத்திரிகையாளர்களுக்கு ,தக்க சமயத்தில் உதவிய நல் உள்ளங்களுக்கு பல கோடி நன்றிகள்,,தீபாவளி திரு நாளில், ஒரு குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், அரிசி, இனிப்புகள், தீபாவளிக்கான சிறு தொகை என்று, இந்த இக்கட்டான நாட்களில், எங்கள் இல்லங்களில் தீப ஒளி ஏற்ற , வெளிச்சமாய் இருந்த அததனை நல் உள்ளங்களுக்கும் நன்றிகளும், தீபாவளி நல் வாழ்த்துக்களும்,, இந்த தீபாவளி விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார் தமிழ் சினிமாவின் புதிய பாதை ,இயக்குநர் பார்த்திபன் அவர்கள், விழாவில் கலந்து கொண்டதோடு,எமது மக்களுக்கு புத்தாடைகளும் வழங்கி சிறப்பித்தார்,மே...