ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

சகாயம் ஐ.ஏ.எஸ். VRS பெற விண்ணப்பம்

சகாயம் ஐ.ஏ.எஸ். VRS பெற விண்ணப்பம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சகாயம் ஐ.ஏ.எஸ். VRS பெற விண்ணப்பம் தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐ.ஏ.எஸ். விண்ணப்பித்துள்ளார். தற்போது தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவராக 6 வருடமாக பதவி வகித்து வரும் நிலையில் விஆர்எஸ் கேட்டு அவர் விண்ணப்பித்துள்ளார். முக்கியமில்லாத ஒரே பதவியில் பல ஆண்டுகளாக தமிழக அரசு வைத்திருப்பதால் சகாயம் ஐ.ஏ.எஸ். விருப்ப ஓய்வு பெற விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. விஆர்எஸ்க்கு விண்ணப்பித்த சகாயம் 2 மாதங்களில் அரசு பதவியிலிருந்து விடுவிக்கப்படுவார். சகாயம் ஐ.ஏ.எஸ். மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையாற்றி வருகிறார். மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளியே கொண்டு வந்தவர் சகாயம் ஐ.ஏ.எஸ். என்பது குறிப்பிடத்தக்கது....
உடல் உறுப்புகளை வெட்டி எறியலாமா? – அக்கு ஹீலர் மஹாலட்சுமி விளக்கம்

உடல் உறுப்புகளை வெட்டி எறியலாமா? – அக்கு ஹீலர் மஹாலட்சுமி விளக்கம்

HOME SLIDER, NEWS, செய்திகள், வீடியோ
உடல் உறுப்புகளை வெட்டி எறியலாமா? - அக்கு ஹீலர் மஹாலட்சுமி விளக்கம் https://youtu.be/EjqqOPhyn9g
துருக்கி நிலநடுக்கம்…சுனாமி பேரலை உருவானது!

துருக்கி நிலநடுக்கம்…சுனாமி பேரலை உருவானது!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
துருக்கி நிலநடுக்கம் துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 எனப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி என்னும் பேரலை உருவானது. இதனால் இஸ்மிர் நகரத்திற்குள் கடல் நீர் புகுந்தது. வீதியில் நின்ற கார்கள், வீட்டில் இருந்த பொருட்களை கடல் நீர் சுருட்டிக் கொண்டு சென்றது. 2004-ம் ஆண்டு இந்தோனேசியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தில் இந்தோனேசியா, இந்தியா (குறிப்பாக தமிழ்நாடு), இலங்கை போன்ற நாடுகளில் சுனாமி அலை ஏற்பட்டு கடும் விளைவை ஏற்படுத்தியது. அந்த சுனாமி அலையை தற்போது துருக்கி நிலநடுக்கம் ஞாபகப்படுத்தியுள்ளது....
வேறு வழியின்றி 7.5% இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி – மு.க ஸ்டாலின்

வேறு வழியின்றி 7.5% இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி – மு.க ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
வேறு வழியின்றி 7.5% இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி - மு.க ஸ்டாலின் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்தார். ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் அவருக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “45 நாட்கள் கழித்து, கலந்தாய்வுக்கான காலம் நெருங்குகையில், வேறு வழியின்றி 7.5% இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி! திமுக-வின் போராட்டமும் நீதியரசர்கள் வைத்த மனச்சாட்சி வேண்டுகோள்களும் ஆளுநரின் மனமாற்றத்துக்கு காரணம். இறுதியில் வென்ற சமூகநீதி, எப்போதும் வெல்லும்!” என்று பதிவிட்டுள்ளார்....
பப்ஜி விளையாட்டிற்கு இந்தியாவில் இன்று முதல் முற்றிலும் தடை

பப்ஜி விளையாட்டிற்கு இந்தியாவில் இன்று முதல் முற்றிலும் தடை

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
  பப்ஜி விளையாட்டிற்கு இந்தியாவில் இன்று முதல் முற்றிலும் தடை பப்ஜி விளையாட்டிற்கு இந்தியாவில் தடை விதித்து கடந்த மாதம் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் பிற சீன அப்களை போல் இல்லாமல் ஏற்கனவே ப்பஜி அப்பை தனது மொபைல் மற்றும் கணினியில் பதிவிறக்கம் செய்து வைத்தவர்கள் அதனை தொடர்ந்து உபயோகித்து வந்தனர். இந்தியாவில் மட்டும் பப்ஜி விளையாட்டில் சுமார் 5 கோடி பேர் ஆக்டிவ் பயனாளிகளாக இருந்தனர். ப்பஜி விளையாட்டிற்கு அடிமையானவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், மீண்டும் பப்ஜி விளையாட்டை இந்தியாவிற்குள் கொண்டு வரும் முயற்சியில் தென் கொரிய நிறுவனம் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் இந்தியாவில் உள்ள பயனாளிகளுக்கான அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும் என பப்ஜி மொபைல் அப் கேம் நிறுவனம் தெரிவித்துள்ளது....
நாளை ‘புளூ மூன்’ நிகழ்வு!

நாளை ‘புளூ மூன்’ நிகழ்வு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
நாளை 'புளூ மூன்’ நிகழ்வு! இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் (நீல நிலா) ‘புளூ மூன்’ நிகழ்வு நாளை ஏற்பட உள்ளது. இதை தவறவிட்டால் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் மறுபடி பார்க்க முடியும். புளூ மூன் என்று கூறுவதால் நிலவின் நிறத்தில் பெரிய மாறுபாடு எதுவும் இருக்காது. இது முழுக்க முழுக்க பவுர்ணமியின் கால நேரத்தை பொறுத்தது என்று நாசா விளக்கி உள்ளது. ஒரே மாதத்தில் வரும் இரண்டு பவுர்ணமியில் இரண்டாவதாக வரும் பவுர்ணமியே புளூ மூன் ஆகும். மாதத்தில் ஒரு முறை மட்டுமே பவுர்ணமி வரும். எப்போதாவது சில சமயங்களில் இரண்டு பவுர்ணமி வந்துவிடும். 29 நாட்களுக்கு ஒரு முறை வரும் பவுர்ணமி, மாதத்தில் 30 அல்லது 31 நாட்கள் இருப்பதால், சராசரியாக 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் வந்துவிடுகிறது. இந்த புளூ மூன் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவ...
ஆளுநர் தாமதித்ததால் 7.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு அரசாணை வெளியிடப்பட்டது -முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஆளுநர் தாமதித்ததால் 7.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு அரசாணை வெளியிடப்பட்டது -முதல்வர் எடப்பாடி பழனிசாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆளுநர் தாமதித்ததால் 7.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு அரசாணை வெளியிடப்பட்டது -முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பல்வேறு வசதிகளை அதிமுக அரசு ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது. மேலும் மீனவர்களுக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு அறிவித்து நிறைவேற்றி உள்ளது. மசோதாவுக்கு ஒப்புதரல் தர ஆளுநர் தாமதித்து வருவதால் 7.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உள்ஒதுக்கீட்டை இந்தாண்டே அமல்படுத்...
பசும்பொன் தேவர் வரலாறு ஆவண படத்தின் டிரைலரை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்!

பசும்பொன் தேவர் வரலாறு ஆவண படத்தின் டிரைலரை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
  பசும்பொன் தேவர் வரலாறு ஆவண படத்தின் டிரைலரை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்! அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில் இலவசமாக பார்க்கும்படி ரிலீஸ் ஆக உள்ள "பசும்பொன் தேவர் வரலாறு" ஆவண பட டிரைலரை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்.   நேதாஜியோடு இணைந்து தேச விடுதலைக்கு பாடுபட்ட தென்னாட்டு நேதாஜி தேசிய தலைவர் பசும்பொன் சிங்கம் அய்யா முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்று ஆவண படத்தை "பசும்பொன் தேவர் வரலாறு" என்ற பெயரில் கடந்த 2008ம் ஆண்டு திரையரங்குகள் மூலம் வெளியிட்டோம். அதுவரை அவர் தொடர்பான எந்த ஒரு படைப்பும் வரவில்லை. எங்களின் "பசும்பொன் தேவர் வரலாறு" ஆவண படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதோடு, உலக அளவில் ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்று ஆவண படம் தியேட்டரில் வணிக ரீதியில் வெளியாகி வந்த ஒரே படம் என்ற பெயரையும் பெற்றது. ...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர்பதவி  ‘பெட்ரமாக்ஸ் லைட்’டேதான் வேண்டும் – உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர்பதவி ‘பெட்ரமாக்ஸ் லைட்’டேதான் வேண்டும் – உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் கிண்டல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக சண்முகம் சுப்பையாவிற்கு பதவி அளிக்கப்பட்டுள்ளது குறித்து உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக பதிவிட்டுள்ளார். மதுரையில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான உறுப்பினர்கள் குழுவை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அந்த பட்டியலில் கீழ்பாக்கம் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை தலைவர் சுப்பையா சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுப்பையா சண்முகம் மீது கார் பார்க்கிங் செய்யும் விவகாரத்தில் பக்கத்து வீட்டு பெண்ணுடன் நடந்த சண்டையில் பெண்ணின் வீட்டு முகப்பில் சிறுநீர் கழித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதற்காக அப்போதே பலர் சுப்பையாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது அவர் எய்ம்ஸ் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெர...
தேவர் ஜெயந்தி விழாவிற்காக தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இருவரும் ஒரே விமானத்தில் பயணம்

தேவர் ஜெயந்தி விழாவிற்காக தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இருவரும் ஒரே விமானத்தில் பயணம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இராமநாதபுரத்தில் நடக்கும் தேவர் ஜெயந்தி விழாவிற்காக தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இருவரும் ஒரே விமானத்தில் பயணிக்க இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கதேவருக்கு நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் 30ல் தேவர் ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் ராமநாதபுரம் செல்கிறார். சென்னையிலிருந்து விமானம் மூலமாக மதுரை சென்று அங்கிருந்து ராமநாதபுரம் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முதல்வருக்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ள அதே விமானத்தில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் பயணிக்க இருக்கிறார். மு.க.ஸ்டாலினும் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கெடுக்க உள்ள நிலையில் இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...