ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இழப்பீடாக 1.30 கோடியை கேரளா வழங்கியது!

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இழப்பீடாக 1.30 கோடியை கேரளா வழங்கியது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
விஞ்ஞானி நம்பி நாராயணன் தவறாக கைது செய்யப்பட்ட விவகாரத்தில் கேரள அரசு நம்பிக்கு 1.30 கோடி இழப்பீடாக வழங்கியது.   கடந்த 1994-ம் ஆண்டு இந்திய விண்வெளி திட்டம் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளிநாடுகளுக்கு கொடுத்ததாக 2 விஞ்ஞானிகள் உள்பட 6 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வழக்கில் இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்த நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார். பின்னர், இந்த விவகாரம் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அவர்மீது தவறு இல்லை என்று கண்டறிந்து சி.பி.ஐ. விடுவித்தது. தவறாக கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதற்காக நஷ்ட ஈடு கோரி சுப்ரீம் கோர்ட்டில் நம்பி நாராயணன் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு ரூ.50 லட்சம் வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, அவருக்கு ரூ.50 லட்சத்தை கேரள மாநில அரசு வழங்கியது. இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிடக்கோரி, திருவனந்தபுரம் சப்-கோர்ட்டில் நம்பி நாராயணன் மனு தாக...
டிரம்ப் பேசிக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகை வெளியே மர்ம நபர் துப்பாக்கிச்சூடு!

டிரம்ப் பேசிக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகை வெளியே மர்ம நபர் துப்பாக்கிச்சூடு!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  டிரம்பின் செய்தியாளர் சந்திப்பின்போது வெள்ளை மாளிகைக்கு அருகே மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. துப்பாக்கியால் சுடும் சத்தத்தைக் கேட்ட ட்ரம்ப்பின் பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், ட்ரம்ப்பைச் செய்தியாளர்கள் அறையில் இருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்றனர். செய்தியாளர்களையும் மற்றொரு அறையில் அடைத்து வைத்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மீண்டும் செய்தியாளர்கள் அறைக்கு வந்த ட்ரம்ப்'' வெளியே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. ஆனால் ஆபத்து ஏதும் இல்லை. உளவுத்துறை அதிகாரிகள் சிறப்பாகச் செயல் பட்டுள்ளனர்'' என்று சொல்லி விட்ட...
போக்குவரத்து துறையில் தனியார் ஆதீக்கத்திற்கு வழிகாட்டும் புதிய அரசாணை!

போக்குவரத்து துறையில் தனியார் ஆதீக்கத்திற்கு வழிகாட்டும் புதிய அரசாணை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    போக்குவரத்து துறையில் தனியார் ஆதீக்கத்திற்கு வழிகாட்டும் புதிய அரசாணை! சொந்தமாக வாகனம் வாங்க முடியாத சூழலில், தனியார் வாகனத்தை வாடகைக்கு எடுத்து இயக்கலாம் என போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சேவை நோக்கில் செயல்படும் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் அரசுக்கு லாபம் கிடைக்காததால், அரசுக்கு கூடுதல் சுமை அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநில போக்குவரத்துக் கழகம், தனியார் வாகனத்திற்கும் வாடகைக் கட்டணத்தை நிர்ணயித்து, அதை வாடகைக்கு எடுத்து இயக்குவதற்கு வழிவகை செய்யும் வகையில், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதற்கான வரைவு அறிவிப்பாணையை கடந்த ஜனவரி 9ஆம் தேதி அரசு வெளியிட்டது. இதனிடையே வாகனங்களுக்கு எஸ்.ச...
தமிழக எம்.எல்.ஏ.க்களில் 10 சதவீதம்பேர் கொரானாவால் பாதிப்பு!

தமிழக எம்.எல்.ஏ.க்களில் 10 சதவீதம்பேர் கொரானாவால் பாதிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக எம்.எல்.ஏ.க்களில் 27 பேருக்கு கொரானா வைரஸ் இதில் 3 அமைச்சர்கள் அடஙகும்! தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களில் 10 விழுக்காடு பேருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களில் 27 உறுப்பினர்கள் கொரானா வைரஸ் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது மொத்தமுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களில் 10 விழுக்காடாகும். இதில் மூன்று அமைச்சர்களும் அடங்குவார்கள். இதனிடையே, சட்டப்பேரவை தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் தொகுதியில் மக்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உறுப்பினர்கள் உள்ளனர்.அதனால் மக்களை சந்திக்கும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் முகக்கவசம், தகுந்த இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனமாக பின்பற்றவேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துவருகின்றனர். கொரானா பாதிக்கப்பட்டவர்களில் 13 பேர் அதிமுகவையும், 11 பேர் திமுகவையும்...
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் முதல் முறையாக இந்தியாவின் மூவர்ண கொடி பறக்கும்!

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் முதல் முறையாக இந்தியாவின் மூவர்ண கொடி பறக்கும்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  இந்தியாவில் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. உலகம் முழுவதிலும் வசித்து வரும் இந்தியர்கள் சுதந்திர தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். இந்நிலையில், இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நமது நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட மாகாணங்களில் வசித்து வரும் இந்தியர்கள் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நமது நாட்டின் தேசியக் கொடியான மூவர்ண கொடியை ஏற்ற உள்ளனர். இதில் அமெரிக்க வாழ் இந்தியர்களும் பங்கேற்கின்றனர். அமெரிக்காவின் புகழ்பெற்ற முக்கிய சுற்றுலா தலங்களில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கமும் ஒன்று. இங்கு மூவர்ணக் கொடி ஏற்று விழா நடப்படுவது இது முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, ஆகஸ்டு 5-ம் தேதி நடந்த அயோத்தி ராமர் கோவில் அடிக்கல்...
இந்தி மொழி பிரச்சினை… கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் ஆதரவு டிவிட்!

இந்தி மொழி பிரச்சினை… கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் ஆதரவு டிவிட்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தி மொழி பிரச்சினை... கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் ஆதரவு டிவிட்! இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா? என தி.மு.க. எம்.பி, கனிமொழியிடம் கேள்வி எழுப்பட்டதற்கு  கர்நாடக முன்னாள்  முதல்-மந்திரி குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில், தென்னிந்தியாவில் பிறந்த  கருணாநிதி, காமராஜர் போன்ற பெருந்தலைவர்கள் பிரதமராக கூடிய தகுதியுடன் இருந்து, இந்தி அரசியலால் அவர்கள் பிரதமர் பதவியை அடைய முடியவில்லை என்றும் குமாரசாமி குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த சக்கர வியூகத்தை உடைத்து பிரதமரான ஒரே தென்னிந்திய தலைவர் தேவகவுடா என்றும்,  அவரை ஒரு கன்னடர் என்றே இந்தி அரசியல் விமர்சித்தனர். இந்தி ஆளுமை, இந்தி அரசியல், இந்தி ஆதிக்கம் போன்ற காரணங்களால் தென்னிந்தியர்கள் பணி வாய்ப்பை இழந்து வருகின்றனர். தேகவுடா பிரதமராக இருந்தபோது டெல்லி செங்கோட்டையில் கட...
இது இந்தியாவா? “இந்தி”-யாவா? – மு.க.ஸ்டாலின் கேள்வி

இது இந்தியாவா? “இந்தி”-யாவா? – மு.க.ஸ்டாலின் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- இந்தி தெரியாது என்று சொன்னதால், 'நீங்கள் இந்தியரா?' என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் @KanimozhiDMK வை பார்த்துக் கேட்டுள்ளார். இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்!...
ராகுல் காந்தியை சந்தித்தார் அதிருப்தியாக இருந்த சச்சின் பைலட்!

ராகுல் காந்தியை சந்தித்தார் அதிருப்தியாக இருந்த சச்சின் பைலட்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ராஜஸ்தான் அரசியல் குழப்பத்தில் ராகுல் காந்தியை சந்தித்தார் அதிருப்தியாக இருந்த சச்சின் பைலட்! ராஜஸ்தானில் முதல்மந்திரி அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் உருவானது. இதையடுத்து தனது ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 19 பேரை சச்சின் பைலட் தனியார் சொகுசு விடுதியில் தங்கவைத்தார். மேலும், அசோக் கெலாட்டிற்கு பெரும்பான்மை இல்லை எனவும் தெரிவித்து வந்தார். தன்னை முதல்மந்திரியாக அறிவிக்கவேண்டும் என்பதற்காகவே சச்சின் பைலட் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ப்ட பலரும் பைலட்டிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர் சமரசத்தில் ஈடுபடாமலேயே இருந்தார். இதனால் ராஜஸ்தான் துணை முதல்மந்திரி, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டதுடன், சபாநாயகர் ப...
என் கணவர் இறப்புக்கு அரசின் அலட்சியம் தான் காரணம் – பகீர் குற்றம் சுமத்தும் சாத்தான்குளம் சிறப்பு எஸ்.ஐ. மனைவி

என் கணவர் இறப்புக்கு அரசின் அலட்சியம் தான் காரணம் – பகீர் குற்றம் சுமத்தும் சாத்தான்குளம் சிறப்பு எஸ்.ஐ. மனைவி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானாவால் என் கணவர் இறப்புக்கு அரசின் அலட்சியம் தான் காரணம் - பகீர் குற்றம் சுமத்தும் சாத்தான்குளம் சிறப்பு எஸ்.ஐ. மனைவி கொரானா ஊரடங்கு நேரத்தில் சாத்தான்குளம் அப்பா மகன் இரட்டை படுகொலை தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஐநா மன்றம்வரை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த காவல்நிலைய இரட்டைக்கொலை வழக்கில் காவல்துறையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். அதில் சிறப்பு எஸ்.ஐ-யான பால்துரையும் ஒருவர். மதுரை சிறையில் அடைக்கப்பட்ட பால்துரைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த சூழலில், "தன் கணவர் பால்துரையின் உயிருக்கு ஆபத்து என்று அவர் மனைவி மங்கையர்திலகம் மதுரை போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அதில், “என் கணவர் தட்டா...
ஆயிரக்கணக்கான சிவப்பு பலூன்களை பறக்கவிட்டு பிரேசில் திடீர் அஞ்சலி – காரணம் இதுதான்

ஆயிரக்கணக்கான சிவப்பு பலூன்களை பறக்கவிட்டு பிரேசில் திடீர் அஞ்சலி – காரணம் இதுதான்

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    கொரானாவால் 1 லட்சத்தை தாண்டிய உயிர் பலிக்கு ஆயிரக்கணக்கான சிவப்பு பலூன்களை பறக்கவிட்டு பிரேசில் அஞ்சலி! உயிர்க் கொல்லியான கொரோனா வைரசின் பிடியில் அதிகம் சிக்கியுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 51 லட்சத்தை நோக்கி விரைகிறது. 1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் உள்ள நாடு, பிரேசில். அங்கு கொரோனா வைரஸ் தொற்று வெறியாட்டம் போடுகிறது. 21 கோடி மக்கள் தொகையை கொண்ட அந்த நாட்டில் கடந்த மே மாத இறுதியில் இருந்து தினந்தோறும் சராசரியாக ஆயிரம் பேர் பலியாகிற சோகம், அங்கு தொடர்கிறது. அங்கு நேற்று முன்தினம் 905 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் மொத்த பலி என்பது 1 லட்சத்து 543 ஆக உள்ளது. இதுவரை தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை, 30 லட்சத்து 12 ஆயிரத்து 412 ஆகும். பலி 1 லட்சத்தை கடந...