உண்மையை கண்டுபிடிக்க 12 மணிநேரம் சிபிசிஐடி தனிதனியாக விசாரணை!
உண்மையை கண்டுபிடிக்க 12 மணிநேரம்
சிபிசிஐடி தனிதனியாக விசாரணை!
சாத்தான்குளம் தந்தை மகன் கொடூர மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போலீசாருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொடூர மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கை கையில் எடுத்ததும் விசாரணை வேகம் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருகிறது. இப்போது சிபிசிஐடி விசாரணை முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
எப்ஐஆர் பதிவு செய்த எஸ்ஐ ரகுகணேஷ் நேற்று இரவு கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 4 போலீஸ் கைது செய்யப்பட்டார்கள். அதில் மிக முக்கியமான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைதுதான் மிக பரபரப்பாக அமைந்தது.
கைது செய்யபட்டவர்களை தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு வந்து, தீவிர விசாரணை செய்தார்கள். அதோடு, ஒவ்வொருவரிட...









