ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

சிபிஐ விசாரணையை கையில் எடுப்பதற்குள் ஆதாரங்களை அழிக்க அதிக வாய்ப்பு உள்ளது – கோர்ட் சந்தேகம்

சிபிஐ விசாரணையை கையில் எடுப்பதற்குள் ஆதாரங்களை அழிக்க அதிக வாய்ப்பு உள்ளது – கோர்ட் சந்தேகம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் நேற்று முன் தினம் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின்போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும், வழக்கு ஆவணங்களை தர மறுத்ததாகவும் கூறி நீதித்துறை நடுவர் பாரதிதாசன், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மின்னஞ்சல் வாயிலாக புகார் அளித்திருந்தார். காவல் அதிகாரிகளை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என காவலர் மகாராஜன் அவதூறாக பேசியதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மூன்று காவலர்களையும் உடனடியாக பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில், கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்ப...
CBI விசாரிக்கும்வரை சாத்தான்குளம் அப்பா மகன் படுகொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க கோர்ட் உத்தரவு

CBI விசாரிக்கும்வரை சாத்தான்குளம் அப்பா மகன் படுகொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க கோர்ட் உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் குறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவர் அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். “இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்றம் தாமதத்தை விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கி காத்துள்ளனர். ஆகவே, ஒரு நொடி கூட வீணாகக்கூடாது. சிபிஐ விசாரணையை தொடங்குவதற்குள் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சிபிஐ வசம் ஒப்படைக்கபப்டும் வரை, நெல்லை சரக டிஐஜி இந்த வழக்கு விசாரணையை ஏற்க இயலுமா? அல்லது நெல்லை சிபிசிஐடி உடனடியாக வழக்கு விசாரணையை கையில் எடுக்க இயலுமா? என்பது குறித்து தகவல் பெற்று மதியம் தெரிவிக்க வேண்டும். முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்...
கொரானாவை தடுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி பரிசோதனைக்கு ICMR அனுமதி!

கொரானாவை தடுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி பரிசோதனைக்கு ICMR அனுமதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானாவை தடுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி பரிசோதனைக்கு ICMR அனுமதி! கொரானா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த வைரசுக்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் சில நிறுவனங்களின் மருந்துகளின் பரிசோதனைகள் இறுதிக்கட்டதை எட்டியுள்ளன. ஆனால் இதுவரை எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்தியாவின் புனேயை தலைமையிடமாக கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கொரானாவுக்கு COVAXIN என்ற தடுப்பூசியை கண்டு பிடித்துள்ளது. ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கண்டு பிடித்துள்ள இந்த மருந்து பல்வேறுகட்ட சோதனைகளுக்கு பிறகு, விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றியடைந்ததால், இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு...
கொரானா ஊரடங்கு 100ம் நாளில் தூய்மை பணியாளருக்கு விருது!

கொரானா ஊரடங்கு 100ம் நாளில் தூய்மை பணியாளருக்கு விருது!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், வீடியோ
*கொரோனா ஊரடங்கு 100 வது நாள்* தூய்மை பணியாளர் விருது முதல் ஊரடங்கு மார்ச் 22 அன்று ஆரம்பித்தது. ஜீன் 29 இன்று கொரோனா ஊரடங்கின் 100 வது நாள். வழக்கமாக ஒரு திரைப்படம் 100 நாள் ஓடி வெற்றி கண்டால் அதற்கு விழா எடுத்து பணிபுரிந்தவர்களுக்கு சால்வை அணிவித்து விருது கொடுப்பார்கள். *திரு.வி.க.பூங்கா திரைப்பட கதாநாயகன் இயக்குனர் செந்தில்.செல்.அம்* அவர்கள் கொரோனா ஊரடங்கின் 100 வது நாளை முன்னிட்டு கொரோனா ஊரடங்கின் அசாதாரணமான சூழ்நிலையில்கூட சாதாரணமாக பணிக்கு வந்து ஒருநாள் கூட இடைவெளி இல்லாமல் தனிமனித இடைவெளியுடன் பணிபுரிந்த அவரது கடலூர் வண்ணாரப்பாளையம் வார்டுக்குட்பட்ட தூய்மை பணியாளர்  E.லதா* அவர்களுக்கு சிறந்த தூய்மை பணியாளர் விருதினை வழங்கி சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார் மேலும் அவர் கூறுகையில் தூய்மை பணியாளர்களை மதிப்போம் அவர்களை நம் உறவினர்களாக பார்ப்போம்... அவர்களால் தான் ...
நீதிபதியை மிரட்டும் சாத்தான்குளம் போலீஸ்… கடுப்பான கோர்ட்!

நீதிபதியை மிரட்டும் சாத்தான்குளம் போலீஸ்… கடுப்பான கோர்ட்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நீதிபதியை மிரட்டும் சாத்தான்குளம் போலீஸ்... கடுப்பான கோர்ட்! சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகனுமான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருவதோடு சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாகவே முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது. சாத்தான்குளம் காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், வருவாய்த்துறை அதிகாரிகள் சாத்தான்குளம் காவல்நிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. மேலும் தடயவியல் துறை அதிகாரிகள் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சென்று அங்குள்ள தடயங்களை சேகரிக்க வேண்டும் எனவும்...
நீதிமன்ற நடுவரின் விசாரணைக்கு சாத்தான்குளம் போலீஸ் ஒத்துழைப்பு இல்லை – நீதிபதிகள் அதிருப்தி

நீதிமன்ற நடுவரின் விசாரணைக்கு சாத்தான்குளம் போலீஸ் ஒத்துழைப்பு இல்லை – நீதிபதிகள் அதிருப்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு போலீஸ் ஒத்துழைப்பு இல்லை என்பதால் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தை கலெக்டர் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று ஆதாரங்களை சேகரிக்க வேண்டும். சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து மரணம் அடைந்தது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தந்தை, மகன் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு போலீசார் போதிய ஒத்துழைப்பு தரவில்லையென தெரிகிறது என்று நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனஎ. அத்துடன், தடயவியல் துறை அதிகாரிகள் சாத்தான்குளம் காவல்நிலை...
CBI விசாரணையால் சாத்தான்குளம் அப்பா,மகன் கொலையில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன் – ப.சிதம்பரம் கருத்து

CBI விசாரணையால் சாத்தான்குளம் அப்பா,மகன் கொலையில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன் – ப.சிதம்பரம் கருத்து

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்ட தந்தை, மகன் மரணம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை போலீசார் அடித்துக் கொன்றுவிட்டதாக குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர். இந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக தமிழக முதல்வர் கூறி உள்ளார். தமிழக முதல்வரின் இந்த முடிவை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடியில் காவல் துறையினர் கைது செய்து காவலில் இருக்கும்போது மரணம் அடைந்த இரண்டு வர்த்தகர்களுக்கு (தந்தை, மகன்) நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்பொழுது பிறந்திருக்கிறது. 1996 ஆம் ஆண்டில் டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வகுத்...
CBI விசாரணை என்பது அரசின் கொள்கை முடிவு அதற்கு கோர்ட் அனுமதி தேவையில்லை – மதுரை கோர்ட்

CBI விசாரணை என்பது அரசின் கொள்கை முடிவு அதற்கு கோர்ட் அனுமதி தேவையில்லை – மதுரை கோர்ட்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாத்தான்குளம் அப்பா,மகன் மரண விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோர்ட்டில் தமிழக அரசு முறையீடு! சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்தாக போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது இருவரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். பிறகு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 20ம் தேதி அதிகாலையில் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். ஆனால், 22ம் தேதி இரவு பென்னிக்சும், 23ம் தேதி அதிகாலை ஜெயராஜும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இருவரின் உடல்களிலும் ரத்தக்காயங்கள் இருந்தன. போலீசார் அடித்துக்கொன்றதாக குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர். தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து உயர்நீத...
ஏற்கனவே இதுபோன்ற புகாரில் சிக்கி பணிமாறுதல் பெற்றவராம் சஸ்பெண்ட் ஆன சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்!

ஏற்கனவே இதுபோன்ற புகாரில் சிக்கி பணிமாறுதல் பெற்றவராம் சஸ்பெண்ட் ஆன சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சஸ்பெண்ட் ஆன சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்கமே சிக்குபவர்களை அடித்து துவைப்பதுதானாம்! தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்ததுடன், கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், சாத்தான்குளத்தில் தங்கியிருந்து சாட்சிகளிடமும், கோவில்பட்ட...
சாத்தான்குளம் அப்பா,மகன் மரண வழக்கு CBI வசம் ஒப்படைக்கப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சாத்தான்குளம் அப்பா,மகன் மரண வழக்கு CBI வசம் ஒப்படைக்கப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சாத்தான்குளம் அப்பா,மகன் மரண வழக்கு CBI வசம் ஒப்படைக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில தினங்களாக நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் அப்பா, மகன் மரண வழக்கு இப்போது விசாரணையில் உள்ளது. மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. அப்பா, மகனை அடித்து கொன்றதாக சாத்தான்குளம் போலீசார் அனைவரும் கூண்டாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பொது மக்கள் மத்தியிலும் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கின் உண்மையான நிலையை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்று தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது. இப்போது இந்த வழக்கின் விசாரணையை கோர்ட் அனுமதியுடன் CBI வசம் ஒப்படைக்க முடிவு செய்து உள்ளதாக முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி கூறியுள்ளார்....