சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

திரைப்படங்கள்

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் பிரபுதேவாவின் ‘ரேக்ளா’

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் பிரபுதேவாவின் ‘ரேக்ளா’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் பிரபுதேவாவின் 'ரேக்ளா'   ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அம்பேத் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவிருக்கும் புதிய படத்திற்கு 'ரேக்ளா' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் டைட்டில் லுக்கை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். 'வால்டர்' படத்தை இயக்கிய இயக்குநர் அன்பு இயக்கத்தில் தயாராகவிருக்கும் புதிய படம் 'ரேக்ளா'. இதில் கதையின் நாயகனாக பிரபுதேவா நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தின் டைட்டில் லுக்கை இன்று நடிகர் ஆர்யா வெளியிட்டார். படத்தில் பணியாற்றும் நடிகைகள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபுதேவாவின் நடிப்பில் 58-வது படமாக உருவாகும் 'ரேக்ளா' படத்தின் ...
சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். பாண்டிராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிப்ரவரி 4-ஆம் தேதி இப்படம் ரிலீஸாகும் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். கொரோனா தாக்கம் குறையாத காரணத்தால், 50 சதவிகிதம் இருக்கைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு இருப்பதால், படக்குழுவினர் ரிலீஸ் தேதியை மாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் 17 அல்லது 18 ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் வெளியாகும் என்று ...
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்!

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்! தமிழில் கடந்த 2017-ல் வெளியான மாநகரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகம் ஆன இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷான், ரெஜினா கசான்ட்ரா, சார்லி, ராம்தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நான்கைந்து இளைஞர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் காரணமாக ஒரே புள்ளியில் அவர்கள் சந்திப்பதை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. மாநகரம் திரைப்படம் இந்தியில் மும்பைக்கர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
அஜித் படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை!

அஜித் படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அஜித் படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை! அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் கொரோனா பரவலால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து அஜித் - எச்.வினோத் - போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை தபு தமிழில் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்....
தனுஷின் “வாத்தி” படத்திலிருந்து திடீரென விலகிய ஒளிப்பதிவாளர்!

தனுஷின் “வாத்தி” படத்திலிருந்து திடீரென விலகிய ஒளிப்பதிவாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் தனுஷுக்கு இது போறாத காலம் போல... சமீபத்தில் தனது திருமண வாழ்க்கை 18 ஆண்டுகளோடு முடிகிறது என சொல்லி மனைவி ஐஸ்வர்யாவை பிரிகிறேன் என குறிப்பிட்டிருந்தார் தனுஷ். இப்போது அவர் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் வாத்தி படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் விலகியுள்ளார். தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே (கலாட்டா கல்யாணம்), படங்களைத் தொடர்ந்து மாறன் படமும் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதேபோன்று ஹாலிவுட்டில் தனுஷ் நடித்த கிரே மேன் படமும் பிரபல ஓடிடி தளத்தில்தான் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 26-ம்தேதி மாறன் படத்திலிருந்து முதல் பாடலாக, பொல்லாத உலகம் என்ற பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   தனுஷ் தற்போது தமிழில் வாத்தி, தெலுங்கில் சார் என 2 மொழிகளில் உருவாகி வரும் படத்தில் நடித்து ...
ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி இந்திப் படம்!

ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி இந்திப் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மும்பைக்கர் இந்திப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் கடந்த 2017-ல் வெளியான மாநகரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.   லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகம் ஆன இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷான், ரெஜினா கசான்ட்ரா, சார்லி, ராம்தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ட்ரீம் வாரியர்ஸ் பேனர் சார்பாக எஸ்.ஆர்.பிரபு இந்தப் படத்தை தயாரித்திருந்தார். நான்கைந்து இளைஞர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் காரணமாக ஒரே புள்ளியில் அவர்கள் சந்திப்பதை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது.   படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை, சினிமா ரசிகர்களை மாநகரம் திரைப்படம் விறுவிறுப்பாக கொண்டு சென்றது. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியதுடன், அவ...
ஒரு பாடலுக்கு நடனம்…. பிரபல நடிகைக்கு சிபாரிசு செய்த சிரஞ்சீவி!

ஒரு பாடலுக்கு நடனம்…. பிரபல நடிகைக்கு சிபாரிசு செய்த சிரஞ்சீவி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஒரு பாடலுக்கு நடனம்.... பிரபல நடிகைக்கு சிபாரிசு செய்த சிரஞ்சீவி! ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவதற்கு தெலுங்கு திரைத்துறையில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, தான் நடிக்கும் போலா ஷங்கர் என்ற படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலைப்போல் ஒரு பாடல் வைக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். இந்த பாடலுக்கு நடிகை ராஷ்மி கவுதமை நடிக்க வைக்க சிரஞ்சீவியே சிபாரிசு செய்திருக்கிறார். ராஷ்மி கவுதம் தமிழில் சாந்தனுவுடன் கண்டேன் படத்தில் நடித்தவர். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பணியிலிருந்து பிரபலமானவர். பல தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்திருக்கும் ராஷ்மி, சிரஞ்சீவியுடன் ஒரு பாடலுக்கு ஆடுவது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது....
7 வது முறையாக இணையும் இயக்குநர் சுசீந்திரன், D.இமான் கூட்டணி !

7 வது முறையாக இணையும் இயக்குநர் சுசீந்திரன், D.இமான் கூட்டணி !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    7 வது முறையாக இணையும் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் D.இமான் கூட்டணி ! மெகா பட்ஜட்டில் தயாரிக்கும் நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன்!! இயக்குநர் சுசீந்திரன் இசையமைப்பாளர் D.இமான் கூட்டணி 7 வது முறையாக புதிய படமொன்றில் இணைந்து பணியாற்றவுள்ளனர். இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் சுசீந்திரன், பிரபல இசையமைப்பாளர் D.இமான் உடன் இணைந்து பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், கென்னடி கிளப் என ஆறு படங்களில் பணிபுரிந்துள்ளனர். நேற்று, இசையமைப்பாளர் D.இமான் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து கூறியுள்ள இயக்குநர் சுசீந்திரன், தான் 7 வது முறையாக டி.இமானுடன் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும், பாடல் கம்போசிங் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார். மிகப் பெரிய பட்ஜ...
சூர்யாவின் ஜெய்பீம் படத்துக்கு தொடரும் அங்கீகாரம்… நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் 3 விருதுகள்!

சூர்யாவின் ஜெய்பீம் படத்துக்கு தொடரும் அங்கீகாரம்… நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் 3 விருதுகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    நடிகர் சூர்யாவின் 39-வது படம் ஜெய் பீம்.  ஞானவேல் இதனை இயக்கி உள்ளார். இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் பற்றி பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியானது. படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், நடிகை ரெஜிஷா விஜயன், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளியன்று ஓ.டி.டி.யில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் வெற்றியால் பல அங்கீகாரங்களும், விருதுகளும் குவிகின்றன. தொடர்ந்து இந்தாண்டு நடைபெற இருக்கும் ஆஸ்கார் விருதுகள் நாமினேஷனிலும் ‘ஜெய் பீம்’ இடம்பிடித்துள்ளது. இதேபோன்று சில நாட்களுக்கு முன்பு ஆஸ்கார் அதிகாரப்பூர்வ ய...
விக்ரம் – துருவ் விகரம் நடிக்கும் மகான் ஓடிடி ரிலீசாம்!

விக்ரம் – துருவ் விகரம் நடிக்கும் மகான் ஓடிடி ரிலீசாம்!

CINI NEWS, HOME SLIDER, திரைப்படங்கள், நடிகர்கள்
  *மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஆக்ஷன் ட்ராமாவான மகான் பிப்ரவரி-10 அன்று Prime Video-இல் உலகளவில் வெளியிடப்படுகிறது* செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘மகான்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிப்ரவரி-10 முதல் Prime உறுப்பினர்கள் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படத்தைக் காணலாம். சமீபத்திய மற்றும் பிரத்யேகத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, Amazon Originals, Amazon Prime Music மூலம் விளம்பரமில்லா மியூசிக், இந்தியத் தயாரிப்புகளின் மிகப் பெரிய கலெக்ஷனின் இலவச விரைவான டெலிவரி, சிறந்த டீல்களுக்கு முன்கூட்டிய அணுகல், வரம...