சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

திரைப்படங்கள்

அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த  ‘வலிமை ‘ திரைப்படத்தின் டிரைலர்

அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த  ‘வலிமை ‘ திரைப்படத்தின் டிரைலர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
    இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். https://www.youtube.com/watch?v=DBArG6AoJw0   இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் 2 பாடல்கள் ,மற்றும் படத்தின் மேக்கிங் வீடியோ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . வலிமை திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையன்று வெளியாகிறது . இந்நிலையில்  ரசிகர்கள் எதிர்பார்த்த  'வலிமை ' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது....
கட்டில் திரைப்பட மேக்கிங் வீடியோ வெளியீடு

கட்டில் திரைப்பட மேக்கிங் வீடியோ வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், வீடியோ
  கட்டில் திரைப்பட மேக்கிங் வீடியோ வெளியீடு மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடித்து விரைவில் வெளிவர இருக்கும் கட்டில் திரைப்பட மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பீ.லெனின் கதையில் ‌சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடித்து, ஸ்ரீகாந்த்தேவா இசையில் வைரமுத்து, மதன் கார்க்கி பாடலில் உருவான கட்டில் திரைப்படம் நாளை தொடங்கவுள்ள 19வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=BXQ2aV2qOZI  ...
சல்மான்கான் படத்தில் இணையும் பிரபல நடிகர்!

சல்மான்கான் படத்தில் இணையும் பிரபல நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சல்மான்கான் படத்தில் இணையும் பிரபல நடிகர்! சல்மான் கான் நடிப்பில் வெளியான டைகர் படத்தின் பாகம் ஒன்று மற்றும் 2 சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து டைகர் படத்தின் 3ஆம் பாகம் உருவாகி வருகிறது. இதில் சல்மான்கானுக்கு ஜோடியாக கத்ரினா கைப் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் ஷாருக்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். சல்மான் கான் படத்தில் ஷாருக்கான் நடிக்க இருப்பது, ரசிகர்கள் மத்தியில் டைகர் 3 பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தை தவிர பதான் என்ற படத்திலும், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் ஷாருக்கான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
சுல்தான் பாடல் படைத்த புதிய சாதனை!

சுல்தான் பாடல் படைத்த புதிய சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சுல்தான் பாடல் படைத்த புதிய சாதனை! எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த படம் சுல்தான். அதிரடி ஆக்‌ஷன் படமான இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அமைத்திருந்த இப்படம், ஏப்ரல் 2-ந் தேதி தமிழ், தெலுங்கில் வெளியானது. தமிழகத்தைப் போலவே ஆந்திரா, தெலுங்கானாவிலும் சுல்தான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் இடம் பெற்ற ‘ஜெய் சுல்தான்...’ என்ற பாடல் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இந்நிலையில் இப்பாடல் யூடியூப் தளத்தில் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதை கார்த்தி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்....
ரைட்டர் “ரைட்” கதையா? கோடங்கி விமர்சனம்

ரைட்டர் “ரைட்” கதையா? கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  தமிழ் சினிமாவில் அத்தித் பூத்தார்போல வந்த படங்களின் வரிசையில் தன்னை இணைத்துக் கொண்ட படம் தான் ரைட்டர். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் ரைட்டர் என்பவரின் பவர்புல் அதிகாரம் என்ன என்பதை சொல்வதற்கு பதில் சமுத்திரக்கனி போன்ற மனசாட்சி உள்ள நபர்களும் போலீசாக இருக்கிறார்கள் என்பதை செல்வதற்கு ஒரு சபாஷ். ஒரு போலீஸ் கதைக்குள் திறமை இருந்தும் ஜாதியால் பதவியை பெற முடியாமல் மேலதிகாரியின் அடக்குமுறையால் தன் உயிரையே பலி கொடுக்கும் இனியா கதாபாத்திரம் கொஞ்ச நேரம் வந்தாலும் நெஞ்சை உலுக்கும் நிஜம். இனியாவின் அந்த குதிரையேற்றம் ப்பா... என்ன ஒரு காட்சி... கதைப்படி கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து பி.எச்.டி. படிக்கும் ஒரு மாணவன் திடீரென போலீஸ் பிடியில் சிக்கி எப்படி வாழ்வை தொலைக்கிறார்? எதற்காக அவர் போலீஸ் பிடியில் சிக்க வேண்டும்? அவர் காப்பாற்றப்பட்டாரா? இல்லையா என்பதும், கிளைக்கதையாக போலீ...
விஜய் – யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு..!

விஜய் – யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் - யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு..! விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை சந்தித்து இருக்கிறார். இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய்யின் அடுத்த படத்திற்கு யுவன் இசையமைக்கிறார் என்று பதிவு செய்து வருகிறார்கள்.  ...
திகில், காமெடி நிறைந்த சாகச திரைப்படமாக உருவாகும் ‘கஜானா’

திகில், காமெடி நிறைந்த சாகச திரைப்படமாக உருவாகும் ‘கஜானா’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
திகில், காமெடி நிறைந்த சாகச திரைப்படமாக உருவாகும் ‘கஜானா" சினிமா என்பது மிகப்பெரிய காட்சி ஊடகம் என்றாலும், அதனுடைய முதல் நோக்கம் மக்களை மகிழ்விப்பது தான். அதனை சரியாக புரிந்துக்கொண்ட படைப்பாளிகள், மக்களை மகிழ்விக்க என்றுமே தவறியதில்லை. அந்த வகையில், பெரியவர்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்குமான கலகலப்பான காமெடி, திகில் மற்றும் சாகசங்கள் நிறைந்த படமாக உருவாகி வருகிறது ‘கஜானா’. போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபாதிஸ் சாம்ஸ் பிரமாண்டமான முறையில் இப்படத்தை தயாரிப்பதோடு ,படத்தின் கதையும் அவரே எழுதியுள்ளார். ஜோதிகா நடித்த ’ராட்சசி’ பட இயக்குநர் சை.கெளதம் ராஜ் திரைக்கதை, வசனம் எழுத, அறிமுக இயக்குநர் யாசின் இயக்குகிறார். இயக்குநர் வேலுபிரபாகரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்க...
கிறிஸ்மஸ் ட்ரீட் ஆக வெளியாகும் விஷாலின் வீரமே வாகை சூடும் டீசர்!

கிறிஸ்மஸ் ட்ரீட் ஆக வெளியாகும் விஷாலின் வீரமே வாகை சூடும் டீசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கிறிஸ்துமஸ் தினத்தில் நடிகர் விஷாலின் “வீரமே வாகை சூடும்” திரைப்பட டீசர் ! விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படம் “வீரமே வாகை சூடும் “. அதிகார மட்டதிற்கு எதிராக எளியவனின் போராட்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் 25.12.2021 அன்று வெளியாகிறது. மிக சமீபத்தில் தான் அறிவிக்கபட்ட இப்படத்தின் படக்குழுவின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பில் படத்தின் அனைத்து கட்ட பணிகளும் முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் 2022 ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. பாண்டியநாடு படத்திற்கு பிறகு, விஷால் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிவரும் படம் “வீரமே வாகை சூடும் “. அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையில் விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்ப...
தரமான படங்களையும், நல்ல இயக்குனர்களையும் தமிழ் சினிமாவுக்கு தரும் இரஞ்சித் – பாரதிராஜா வாழ்த்து

தரமான படங்களையும், நல்ல இயக்குனர்களையும் தமிழ் சினிமாவுக்கு தரும் இரஞ்சித் – பாரதிராஜா வாழ்த்து

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  தரமான படங்களையும், நல்ல இயக்குனர்களையும் தமிழ் சினிமாவுக்கு தரும் இரஞ்சித் - பாரதிராஜா வாழ்த்து ரைட்டர் படம் பார்த்தேன் நெகிழ்ந்தேன், தரமான படங்களையும் கலைஞர்களையும் உருவாக்கும் ரஞ்சித்துக்கு எனது வாழ்த்துக்கள். இயக்குனர் பாரதிராஜா பாராட்டு. இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரைட்டர். நேற்று இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் இருவரும் ரைட்டர் படம் பார்த்தபிறகு இயக்குனர் பிராங்ளினை வெகுவாக பாராட்டினார். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போலீஸ் கதை புதுமையாக இருக்கிறது, எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது இளைய தலைமுறையினரிடமிருந்து இப்படிப்பட்ட படங்கள் வருவதைப்பார்க்கும்பொழுது தமிழ் சினிமா இன்னும் வளமானதாக மாறுகிறது. எப்போதும் அதிகமாக பேசி நடிக்கும் சமுத்திரக்கனி இந்தபடத்தில் அதிகம் பேசாமல் மிக அழகாக நடித்திருக்கிறார்....
ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய நயன்தாரா படம்!

ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய நயன்தாரா படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய நயன்தாரா படம்! நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கார் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் ஆஸ்கார் பட்டியலில் இடம்பெற்றுள்ள படங்கள் பட்டியல் ஆஸ்கார் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெற்று இருந்தது. ஆஸ்கார் விருது வழங்கும் விழா அடுத்த வருடம் மார்ச் மாதம் 27-ந் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருதுக்கு 15 படங்கள் இறுதி செய்யப்பட்டு அதில் ஒரு படத்துக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருது வழங்கப்படும். இந்த நிலையில், ஆஸ்கார் வெளியிட்டுள்ள இறுதி பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெறவில்லை. இதன் மூலம் ஆஸ்கார் போட்டியிலிருந்து கூழாங்கல் திரைப்படம் வெளியேறி உள்ளது. இதுகுறித்து...