புதுமுகங்கள் நடிக்கும்“ செயல் “
C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படம் “ செயல் “ ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..
இந்த படத்திற்காக கேரளாவில் பாபா பாஸ்கர் நடன அமைப்பில் “ நீயா உயிரே உயிர் தேடும் உயிர் நீயா “ என்ற பாடல் காட்சியில் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி இருவரும் பங்குபெற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
சாலக்குடி, வாகமன் போன்ற அடர்ந்த காடுகளில் மிகவும் சிரமப்பட்டு இந்த பாடல் காட்சியை படமாக்கினோம்.
சென்னையில் “ டே மாமா வ...







