பொங்கல் ரேசில் களமிறங்கிய சூர்யா,விக்ரம்,பிரபுதேவா..!
பொங்கல் ரேசில் களமிறங்கிய
சூர்யா,விக்ரம்,பிரபுதேவா..!
இந்தாண்டு பொங்கல் பண்டிகையின்போது ரசிகர்களை திருப்திபடுத்த 7 படங்கள் களத்தில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார்போல பல படங்கள் ஜனவரி வெளியீடு என்று பல நாட்களுக்கு முன்பே விளம்பரங்களும் வெளியிட்டு வந்தன.
இந்த நிலையில், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், பிரபுதேவாவின் குலேபகாவலி, விக்ரமின் ஸ்கெட்ச் என 3 படங்கள் மட்டுமே பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆக உள்ளது.
பொங்கலுக்கு இரு தினங்களுக்கு முன்பே 12ம் தேதியே இந்த படங்கள் ரிலீஸ் ஆகிறது.
இதுதவிர அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகி இருக்கும் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்', விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் `மதுர வீரன்', விமல் நடிப்பில் `மன்னர் வகையறா' உள்ளிட்ட படங்களும் பொங்கல் ரேசில் கலந்து கொள்ள முயற்சித்தன.
இதில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பாளர் மீது ஒன்றரை க...









