சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

திரைப்படங்கள்

பிரமாண்டமாக உருவாகும் வின்னர் 2!

பிரமாண்டமாக உருவாகும் வின்னர் 2!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90-களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிக்கும் திரைப்படம் அந்தகன். இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து பிரசாந்த், வடிவேல் நடிப்பில் வெளியான வின்னர் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்ததை அடுத்து வின்னர் இரண்டாம் பாகம் தொடங்கவுள்ளது. இந்நிலையில், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு நடிகர் பிரசாந்த் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அவர் கூறுகையில், "அந்தகன் விரைவில் வெளியாகும். வின்னர் 2-ஆம் பாகம...
Think Originals’ ரிலீஸ் செய்த “வாடி வாடி” வீடியோ பாடல்!

Think Originals’ ரிலீஸ் செய்த “வாடி வாடி” வீடியோ பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன் & அஞ்சு குரியன் நடிப்பில், Think Originals’ உடைய “வாடி வாடி” வீடியோ பாடல், வெளியானது!!! இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முதல் சுயாதீன ஆல்பம் பாடலான ‘வாடி வாடி’ பாடல் ஜூன் 29 அன்று வெளியிடப்பட்டது, இப்பாடல் அதன் அற்புதமான இசை மற்றும் அசத்தலான காட்சிகளுக்காக ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறது. Think Originals’ தொடர்ந்து இசை பிரியர்களின் இதயம் அள்ளும் சுயாதீன ஆல்பம் பாடல்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் இப்பாடல் ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறது. ஜூன் 29ஆம் தேதி வெளியான ‘வாடி வாடி’ பாடல் வெளியானதில் இருந்தே ரசிகர்களிடம் பாடலுக்கான வரவேற்பு அமோகமாக உள்ளது. ஹாரிஸ் ஜெயராஜின் அற்புதமான இசைக்கோர்வை மற்றும் விவேகாவின் நவநாகரீக பாடல் வரிகள் ரசிகர்களை ஈர்க்கும் அம்சமாக அமைந்துள்ளன. அஸ்வின் குமார் லக்ஷ்ம...
விதார்த் நடிக்கும் புதுப்பட பூஜை

விதார்த் நடிக்கும் புதுப்பட பூஜை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா* 'யதார்த்த நாயகன்' நடிகர் விதார்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார். இதன் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் சுந்தர் எழுத, ஒளிப்பதிவை எஸ். ஆர். சதீஷ்குமார் மேற்கொள்கிறார். பின்னணியிசைக்கும் முக்கியத்துவம் உள்ள இந்த படத்திற்காக ‘வலிமை’ படப் புகழ் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க, கலை இயக்கத்தை மோகன் கவனிக்கிறார். 'டான்' பட புகழ் நாகூரான் ராமச்சந்திரன்...
‘மாயோன்’ இயக்குநருக்கு தங்கசங்கிலி பரிசளித்த நாயகன் சிபிராஜ்!

‘மாயோன்’ இயக்குநருக்கு தங்கசங்கிலி பரிசளித்த நாயகன் சிபிராஜ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *‘மாயோன்’ இயக்குநருக்கு தங்கசங்கிலி பரிசளித்த நாயகன் சிபிராஜ்* டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழிமாணிக்கம் தயாரிப்பில், சிபி சத்யராஜ் நடிப்பில் வெளியான 'மாயோன்' திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்று வணிகரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியை பெற்றிருக்கிறது. இதனை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதன் போது படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் கிஷோருக்கு, படத்தின் நாயகனான சிபிராஜ் தங்கசங்கிலியொன்றை பரிசளித்தார். தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து, பலத்த போட்டிகளுக்கு இடையே வெளியான திரைப்படம் 'மாயோன்'. எளிதில் யூகிக்க இயலாத திரைக்கதை, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பரிபூரண ஒத்துழைப்பு, ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைக்கும் வகையில் வித்தியாசமான விளம்பர உத்தி, திரையலக பிரபலங்களின் பாரட்டு.. என பலவித அம்...
தமிழ் ரசிகர்கள் தனித்துவமானவர்கள்” நெகிழ்ந்த ‘பனாரஸ்’பட இயக்குநர்

தமிழ் ரசிகர்கள் தனித்துவமானவர்கள்” நெகிழ்ந்த ‘பனாரஸ்’பட இயக்குநர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
*'பனாரஸ்' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு 'கே ஜி எஃப்' படத்தின் வெற்றிக்குப் பிறகு கன்னட திரையுலகிலிருந்து அறிமுகமாகும் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பனாரஸ்' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது. இதனை தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், நடிகர் விஷாலின் தந்தையுமான ஜி. கே. ரெட்டி வெளியிட்டார். கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பனாரஸ்’. இந்த படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார். இவர்களுடன் மூத்த கன்னட நடிகரான தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படு...
மொழியால என்ன இருக்கு நான் இந்தியன் பனாரஸ் படவிழாவில் விஷால் தந்தை ஆவேசம்

மொழியால என்ன இருக்கு நான் இந்தியன் பனாரஸ் படவிழாவில் விஷால் தந்தை ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  மொழியால என்ன இருக்கு நான் இந்தியன் பனாரஸ் படவிழாவில் விஷால் தந்தை ஆவேசம் I GKReddy speech I Banaras   https://youtu.be/a7MWcq1jCbU  
மீண்டும் தள்ளிப் போன மஹா.. வைரலாகும் போஸ்டர்!

மீண்டும் தள்ளிப் போன மஹா.. வைரலாகும் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் மஹா. இதில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் மற்றும் எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகிவுள்ளது. அதன்படி, ஜூலை 22-ஆம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 'வாலு' திரைப்படத்திற்கு பிறகு சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மஹா'. இத்திரைப்படம் ஹன்சிகாவின் 50-வது படம் என்ப...
தன் பாடலை ரீமிக்ஸ் செய்யும் விஜய்!

தன் பாடலை ரீமிக்ஸ் செய்யும் விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் இயக்குனர் வம்சி. விஜய் நடிப்பில் குடும்பக்கதையுள்ள படம் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்தப் படத்தை அவர் தேர்ந்தெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அண்ணன், தங்கை உறவுகளின் பாசப் போராட்டக் களத்தை விவரிக்கும் இந்தக் கதை குடும்ப ரசிகர்களின் எண்ணிக்கையை விஜய்க்கு அதிகரிக்கும் என்கிறார்கள். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். படத்தில் முக்கியமான இடத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில் விஜய் படத்தின் பாடலையே ரீமிக்ஸ் செய்ய இருப்பதாக தெரிகிறது. அதன்படி 2002-ஆம் ஆண்டு வெளியான யூத் படத்தில் இடம்பெற்று ரசிகர்களின் மனதை கொள்ளையடிதத "ஆல்தோட்ட பூபதி நானடா" என்ற பாடலை வாரிசு படத்தில் ரீமிக்ஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்பாடலை மணிஷர்மா இசையமைத்திருந்ததால் அவரிடம் இது குறித்து பேச்சு வார்த்த...
இரவின் நிழல் ரிலீஸ் தேதியை வெளியிடும் நடிகர் தனுஷ்!

இரவின் நிழல் ரிலீஸ் தேதியை வெளியிடும் நடிகர் தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இதில் வரலஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 'அகிரா புரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இதன் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'இரவின் நிழல்' படத்தின் புதிய அப்டேட்டை பிரபலம் ஒருவர் வெளியிடுவார் என்றும் அப்பிரபலம் என்ற வார்த்தையிலுள்ள மூன்றெழுத்தும் அவர் நடித்துள்ள படத்தின் மூன்றெழுத்தும் ஒன்றாகும் என்று பார்த்திபன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதன்படி, இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் இன்று மாலை 6 மணிக்கு வெள...
சர்ச்சைக்கு பதிலளித்த மாதவன்!

சர்ச்சைக்கு பதிலளித்த மாதவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ராக்கெட்ரி படம் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது, அதில் மாதவான் பேசியதாவது, "ஆயிரம் ஆண்டுக்கு முன் நம் முன்னோர்கள் எழுதிய பஞ்சாங்கத்திற்கும், தற்போது உள்ள விஞ்ஞானத்திற்கும் தொடர்பு இருக்கிறது. நமது பஞ்சாங்கத்தில் கிரகங்கள் அதனுடைய ஈர்ப்பு விசை போன்றவற்றை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர். அந்த பஞ்ச...