தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” வெற்றிமாறன் இயக்கிய “ஓர் இரவு”
Netflix நிறுவனத்தின் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” திரைப்படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய “ஓர் இரவு” பகுதி வெளியிட்டது !
Netflix நிறுவனத்தின் சமீபத்திய தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” படத்தினை தமிழின் விருதுகள் வென்ற இயக்குநர்களான சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கியுள்ளனர். காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை நான்கு அழகான கதைகளின் வழியே சொல்கிறது இப்படம்.
தமிழின் திறன்மிகு இயக்குநரான வெற்றிமாறன் இயக்கிய “ஓர் இரவு” சுமதி எனும் இளம்பெண் கர்ப்பமாக இருப்பதை, அவளது குடும்பம் அறிந்த பிறகு, அவள் குடும்பத்தினருடன் அவளுக்கு ஏற்படும் சிக்கல்களை, போராட்டத்தை சொல்லும் கதையாகும். அவளது தந்தை, அவளை ஏற்று கொண்டு, குழந்தையை குளிப்பாட்டும் சடங்கை நடத்த, அவளை வீட்டிற்கு கூட்டி வருகிறார். ஆனால் வீட்டில் நடக்க...









