தோப்புக்கரணம் போட்ட தாதா
பொதுமக்கள் மத்தியில் கல்லூரி மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்த தாதா
பூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கியுள்ள படம் " தோப்புக்கரணம் "
இவர் தென் ஆசியா கராத்தே பெடரேஷன் அஸோசிசியனின் REFEREE COMMISSION CHAIRMAN என்பது குறிப்பிடத்தக்கது,
இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பான " கைலா " படம் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.
" தோப்புக்கரணம் " படத்தில் கோகன் ,அக்ஷய், சந்துரு, ரிசிகேஸ்வரன், நிரஞ்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடன இயக்குனர் பிரபு தேவாவிடம் உதவியாளராக இருந்த தர்ஷிணி இந்த படத்தின் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.
இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் 2017,18,19 ம் ஆண்டுகளில் மிஸ்டர் இண்டியாவாக வலம் வந்த "ஸ்டீவ் " நடித்திருக்கிறார்.
இவர்க...









