இயக்குநர் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடைசியாக புதுப்பேட்டை படத்தில் இணைந்து பணியாற்றிய தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை இன்று வெளியிட இருப்பதாக அறிவித்தார்கள். அதன் படி, படத்திற்கு ‘நானே வருவேன்’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டரை வருகிற ஜனவரி 14 பொங்கலன்று மாலை 4.05 மணிக்கு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநாடு படக்குழுவின் இந்த திடீர் அறிவிப்பு சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. அதே தினத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்...
விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் நாளை மறுதினம் உலகமெங்கும்
வெளியாகவுள்ள திரைப்படம் 'மாஸ்டர்'.
லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படம் கொரோனா காரணமாக
சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளிவரும் இந்தத் திரைப்படத்தின்
காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன.
வாட்ஸ்அப் உட்பட பல சமூக வலைதளங்களிலும் அவை பரப்பப்பட்டு வருகின்றன.
இது குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம், வெளியாக ஒரு நாளே இருக்கும்
இந்த வேளையில் இப்படிப் படத்தின் காட்சிகள் வெளியாகியிருப்பது
படக்குழு மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
Lokesh Kanagaraj
@Dir_Lokesh
Dear all It's been a 1.5 year long struggle to bring Master to u. All we have...
*கிணற்றுக்குள் விழுந்தார் நமீதா... கேரளாவில் பரபரப்பு*
பிரபல நடிகை நமீதா கிணற்றுக்குள் தவறி விழுந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை நமீதா முதன் முறையாக தயாரிக்கும் "பெளவ் வெளவ்" படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தயாரிப்பதோடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் நமீதா.
படப்பிடிப்பு காட்டுப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகில் நடந்து கொண்டிருந்த போது, நமீதாவின் மொபைல் தவறி கிணற்றுக்குள் விழுந்தது.
கிணற்றுக்குள் மொபைல் விழுவதைக் கண்டு பதட்டத்தில் அதைப் பிடிக்க முயற்சி செய்த நமீதாவும் கிணற்றுக்குள் விழுந்தார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் பதறிய போது, "கட் கட் சூப்பர்" என கை தட்டினர், இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி & மேத்யூ ஸ்கேரியா.
இந்த செய்தியை உண்மை என்று நம்பிய மக்கள்...
மாஸ்டருக்காக டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்!
விஜய்யின் மாஸ்டர் படம் வரும் 13 ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு மாஸ்டர் படம் திரைக்கு வருகிறது. அதனால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதன் காரணமாக தினந்தோறும் படத்தின் புரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது
ஏற்கனவே 100 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, மீண்டும் 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் செயல்பட வேண்டும் என்ற...
டிக்கெட்டின் விலை ஏன் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது எனக்கு எப்போதும் புரிந்தது இல்லை என நடிகர் அரவிந்த் சாமி டுவிட்
விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் ஜனவரி 13-ந்தேதி வெளியாகவுள்ளது. முதலில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு, பின்னர் அதை ரத்து செய்துள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதே வேளையில், வழக்கம்போல் டிக்கெட்கள் அதிக விலைக்கு விற்கத் தொடங்கியுள்ளனர். டிக்கெட் விற்பனை விவகாரம் தொடர்பாக, முதன் முறையாக ஆதரவு தெரிவித்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி.
இது தொடர்பாகத் தனது டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: "வெவ்வேறு செலவில் தயாரிக்கப்படும் வெவ்வேறு தயாரிப்புகள், வெவ்வேறு தரத்தில் இருக்கும் திரையரங்குகளில், வெவ்வேறு ரியல் எஸ்டேட் மதிப்பு இருக்கும் பகுதிகளில் திரையிடப்படும்போது திரைப்பட டிக்கெட்டின் விலை ஏன் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எ...
சாக்ஷி அகர்வால் வெளியிட்ட அரண்மனை 3 பட அப்டேட்!
சுந்தர்.சி இயக்கிய அரண்மனை பேய் படம் 2 பாகங்கள் வந்துள்ளன. இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராக உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.
இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். விவேக், யோகிபாபு ஆகியோர் காமெடி வேடங்களில் வருகின்றனர். இப்படத்திற்கு சத்யா இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு குஜாரத்தில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் படப்பிடிப்பு பாதியிலேயே தடைபட்டது.
இந்நிலையில், இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது நடிகை சாக்ஷி அகர்வால் இப்படத்தின் டப்பிங் பணியை முடித்து விட்டதாக கூற...
மாஸ்டர் 3 வது புரோமோ வெளியாகியுள்ளது.
மாஸ்டர் படம் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளதால் ஏற்கனமே சிட்டி ஸ்டோரி, பாடல் வெளியாகி வைரலான நிலையில், இன்று மாலை 7 மணிக்கு மாஸ்டர் ரெய்ட் பாடல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்தனர்.
மேலும், விஜய்யின் மாஸ்டர் படத்தின் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் சில்நாட்களுக்கு முன் 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. அதேசமயம் இப்பாடலின் வீடியோ பிரமோவை படக்குழு வெளியிட்டது.
அதேபோல் நேற்று மாலை மாஸ்டர் படத்தில் 2 வது வீடியோ புரோமோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது இப்படத்தயாரிப்பு நிறுவனம். விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தில் அவரது குரலைக் கேட்டு உற்சாகமடைந்துள்ளனர். சென்ற வருடத்தில் அவரது படம் எதுவும் கொரொனா கால ஊரடங்கினால் ரிலீசாகாத நிலையில...
தனுஷ் படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ம்ருதி வெங்கட்!
‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன் அடுத்து தனுஷ் வைத்து புதிய படம் இயக்கவுள்ளார் .
தற்போது இவர் இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தனுஷின் 43-வது படத்தை அவர் இயக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
இந்த படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோஹனன் நடிக்கிறார்.இந்த படத்தில் வசனங்கள் மற்றும் கூடுதல் திரைக்கதைக்காக பாடலாசிரியர் விவேக் சமீபத்தில் இணைந்தார்.
தற்போது இந்த படத்தில் தடம்,மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்திய ஸ்ம்ருதி வெங்கட் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....