வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

திரைப்படங்கள்

2 மில்லியன் லைக்ஸ்: புது உலக சாதனை படைத்த விஜய்யின் மாஸ்டர் டீஸர்!

2 மில்லியன் லைக்ஸ்: புது உலக சாதனை படைத்த விஜய்யின் மாஸ்டர் டீஸர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் திரைப்படம் தான் மாஸ்டர். மாஸ்டர் படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்ய முடியாமல் இருந்தாலும் விஜய் இல்லாத தீபாவளியா? என்பதைப்போல மாஸ்டர் படத்தின் டீசர் வெளியானது. இதுவரை வந்த விஜய் படங்களில் முற்றிலும் மாறுபட்டு இருந்த மாஸ்டர் டீசர் விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. அதன் விளைவாக வெறும் 24 மணி நேரத்தில் 20 மில்லியன்(2 கோடி) பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. அது மட்டுமில்லாமல் வேறு ஒரு முக்கியமான உலக சாதனை படைத்துள்ளது மாஸ்டர் டீசர். மிகக் குறுகிய காலத்தில் 2 மில்லியன் லைக் பெற்ற ஒரே டீசர் என்ற சாதனை படைத்துள்ளது. உலக சினிமாவிலேயே இதுதான் முதல் முறையாம். இதனை தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர்....
ஹாலிவுட்டை ஓரம் கட்டி அமேசானில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சரித்திரம் படைத்த சூரரை போற்று

ஹாலிவுட்டை ஓரம் கட்டி அமேசானில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சரித்திரம் படைத்த சூரரை போற்று

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஹாலிவுட்டை ஓரம் கட்டி அமேசானில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சரித்திரம் படைத்த சூரரை போற்று சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வாழ்க்கை வரலாறு படமாக உருவான சூரரைப்போற்று அமேசான் தளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. தியேட்டரை குறி வைத்து உருவான சூரரைப்போற்று திரைப்படம் எதிர்பாராத சிக்கல்களால் நேரடியாக அமேசான் தளத்தில் வெளியானது. ரசிகர்கள் பெரிய அளவில் கவலை அடைந்தாலும் சூர்யா நடிப்பில் புதிய படத்தை பார்க்க போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் அமேசான் தளத்தை நோக்கி ரசிகர்கள் பெரிய அளவில் படையெடுக்க ஆரம்பித்தனர். இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு அமேசான் தளத்தில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதால் சர்வரே திணற... அதுமட்டுமல்லாமல் இதுவரை அமேசான் தளத்தில் வெளியான ஹாலிவுட் படங்களுக்கு கூட இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்கிறார்கள். தற்போது சூரரைப்போற்று படம் அமேசான் ...
தென்னிந்திய மொழிகளில் ‘ரவுடி பேபி’ படைத்த புதிய சாதனை!

தென்னிந்திய மொழிகளில் ‘ரவுடி பேபி’ படைத்த புதிய சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மாரி படத்தின் இரண்டாவது பாகமாக வெளியான படம் மாரி 2. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் 2018-ம் ஆண்டின் இறுதியில் வெளியானது. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.அதில், ரவுடி பேபி பாடலை தனுஷ் எழுதி பாடியிருந்தார். இந்தப் பாடலுக்கு இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். இந்தப் பாடலில் தனுஷ் , சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. ‘மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை யூடியூப் பக்கத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைராலான இந்தப் பாடல் பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று புதிய சாதனை படைத்தது. மேலும் இந்தப் பாடல் வெளியான 16 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளையும் 41 நாட்...
யுவனை வாழ்த்திய போனி கபூர் – ட்ரெண்டிங்கில் ‘வலிமை’ ஹேஷ்டேக்

யுவனை வாழ்த்திய போனி கபூர் – ட்ரெண்டிங்கில் ‘வலிமை’ ஹேஷ்டேக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் மீண்டும் தொடங்கியது. அதில் நடிகர் கார்த்திகேயா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட்டன. அதைத்தொடர்ந்து ஹைதராபாத்தில் நடிகர் அஜித் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது ரசிகர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வைரலாகின. ஆனாலும்‘வலிமை’ படக்குழு நீண்ட நாட்களாக படம் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியிடாததால் அப்டேட் வெளியிட வேண்டும் ...
சிம்புவின் ‘மாநாடு’ பட ஃபர்ஸ்ட் லுக் விரைவில்…

சிம்புவின் ‘மாநாடு’ பட ஃபர்ஸ்ட் லுக் விரைவில்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் நேற்று தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஈஸ்வரன் டீசருக்கு வாழ்த்து தெரிவித்த வெங்கட் பிரபு ”ஈஸ்வரனுக்கு எங்கள் அப்துல் காலிக்கின் வாழ்த்துக்கள். விரைவில் மாநாடு ஃபர்ஸ்ட் லுக்” என பதிவிட்டுள்ளார்.   https://twitter.com/vp_offl/status/1327854118635937793?s=20  ...
இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி

இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி  நடித்த  ‘சுல்தான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜார்ஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். தீபாவளியை முன்னிட்டு இந்த அறிவிப்பை இப்படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://twitter.com/johnsoncinepro/status/1327662325470433280?s=20...
தீபாவளியன்று  வெளியான மாஸ்டர் டீசர்

தீபாவளியன்று வெளியான மாஸ்டர் டீசர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் டீசர் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டியது. கொரோனா பெருந்தொற்று, ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், பட வெளியீடு தள்ளிப்போனது. படத்தின் டீசர் தீபாவளியன்று வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், மாலை ஆறு மணியளவில் வெளியானது.   https://www.youtube.com/watch?v=UTiXQcrLlv4...
“நெகட்டிவை நீக்கிவிட்டு, பாசிட்டிவை அதிகப்படுத்தவும்” ஸ்டில் வெளியிட்ட பிக் பாஸ் ஜூலி

“நெகட்டிவை நீக்கிவிட்டு, பாசிட்டிவை அதிகப்படுத்தவும்” ஸ்டில் வெளியிட்ட பிக் பாஸ் ஜூலி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  Delete the negative Accentuate The positive . . Movie still . Suspense and surprise awaiting -பிக் பாஸ் ஜூலி   பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஜூலியை தேடி பட வாய்ப்புகள் வந்தன. படங்களில் நடித்துக் கொண்டு நர்ஸ் வேலை செய்ய முடியாது என்று முடிவு செய்தார். அதன் பிறகு நர்ஸ் வேலையை விட்டுவிட்டு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் பிக் பாஸ் ஜூலி கடற்கரையில் மணலில் படுத்து மணலை வைத்து தன் உடலை மூடியபடி எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். நெகட்டிவை நீக்கிவிட்டு, பாசிட்டிவை அதிகப்படுத்தவும். பட ஸ்டில். சஸ்பென்ஸ் மற்றும் சர்பிரைஸ் காத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார் ஜூலி....
ஜீசஸ் என்னுடைய நண்பர் தான் என்கிறார் மூக்குத்தி அம்மன் நயன்தாரா!

ஜீசஸ் என்னுடைய நண்பர் தான் என்கிறார் மூக்குத்தி அம்மன் நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் நாளை ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்திற்கு பொதுமக்களிடமிருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் அதற்குப் பிறகு இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சற்று முன் ஆர்ஜே பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் ஸ்நீக்பிக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கடவுள் பெயரால் பொது மக்களை மூளைச்சலவை செய்து ஏமாற்றிக் கொண்டிருக்கும் மனோபாலாவை நயன்தாரா மிரட்டுவது போன்ற ஒரு காட்சி உள்ளது ஜீசஸ் பெயரால் மோசடி செய்வது அவருக்கு பிடிக்காது என்றும், ஜீசஸ் என்னுடைய நண்பர் தான் என்றும், நரகத்திற்கு உன்னை கொண்டு சென்று எண்ணெயில் போட்டு பொரித்து வ...