மாமன் விமர்சனம் 3/5
மாமன் விமர்சனம்
அளவுக்கு அதிகமானால் அமிர்தம் கூட நஞ்சாக மாறும் என்ற பழமொழி எல்லாருக்கும் தெரியும் இத எதுக்கு இப்ப சொல்லனும் யோசிக்காம விமர்சனத்துக்குள்ள போகலாம்…
கதைப்படி….
திருச்சி மாவட்டத்தில் இனிப்பு பலகார நிறுவனத்தை நடத்தி வருகிறார் சூரி. தந்தையை இழந்த அவருக்கு, தன் அக்கா சுவாசிகாதான் உயிர்.
சுவாசிகாவிற்குத் திருமணம் ஆகி, 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், குழந்தை இல்லாததால் குடும்பத்தாரும் சுற்றத்தாரும் அவரது மனதைக் காயப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்நிலையில், சுவாசிகா ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். அதீத பாசத்தைத் தன் அக்கா மகன் பிரகீத் சிவன்(லட்டு) மீது பொழிந்து வளர்க்கிறார் தாய்மாமன் சூரி.
இதனிடையே சூரி தன் காதலி ஐஸ்வர்யா லெட்சுமியை மணமுடிக்கிறார். திருமணத்திற்குப் பின் சிறுவன் பிரகீத் சிவனால், சூரி - ஐஸ்வர்யா லெட்சுமி இடையே பிரச்னை வருகி...









