கண்ணப்பா படத்திலிருந்து ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ருத்ரா கதாப்பாத்திர போஸ்டர் ரிலீஸ்!
*மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்தியா திரைப்படமான கண்ணப்பா படத்திலிருந்து ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ருத்ரா கதாப்பாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது !!*
பெரிதும் எதிர்பார்க்கப்படும் கண்ணப்பா படத்திலிருந்து, கடந்த திங்கட்கிழமை ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ப்ரீ-லுக் வெளியானது ரசிகர்களிடம் பெரும் உற்சாக அலையை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு மஞ்சுவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியப் படமான கண்ணப்பா படத் தயாரிப்பாளர்கள் இப்போது ரிபெல் ஸ்டார் பிரபாஸின், "ருத்ரா" கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டர் பிரபாஸை தெய்வீக மற்றும் பிரமிக்க வைக்கும் ஒரு சக்திவாய்ந்த பாத்திரத்தில் அறிமுகப்படுத்துகிறது, இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
ருத்ரா என்று பெயரிடப்பட்ட பிரபாஸின் கதாபாத்திரம், அபரிமிதமான சக்தி மற்றும் ஆன்மீக முக்கியத்துவ...








