விக்ரம் பிரபு & LK அக்ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் !!
*நடிகர் விக்ரம் பிரபு & LK அக்ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் !!*
*செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* சார்பில், தயாரிப்பாளர் *SS லலித் குமார்* தயாரிப்பில், நடிகர் *விக்ரம் பிரபு* நடிப்பில், அறிமுக இயக்குநர் *சுரேஷ் ராஜகுமாரி* இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள *“சிறை”* படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் *லோகேஷ் கனகராஜ்* சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளார்.
கதையில் களத்தையும் கதாப்பாத்திரங்களையும் பிரதிபலிக்கும் அற்புதமான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.
டாணாக்காரன் இயக்குநர் *தமிழ்*, தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளா...









