திரைப்படங்கள்
‘காலா’ படத்தின் புதிய அப்டேட்!!
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 'காலா'. இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
ஹியூமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், 'வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உள்ளிட்ட பலர் ரஜினியோடு நடித்திருக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இப்படத்துக்கு கபிலன், உமாதேவி பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு முரளி, கலை ராமலிங்கம், எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், சண்டைக் காட்சிகள் திலீப் சுப்பராயன், நடனம் சாண்டி, ஆடை வடிவமைப்பு அனுவர்தன், சுபிகா உள்ளிட்ட படக்குழுவினர் பணிபுரிந்த...
கலகலப்பு – 2 படத்தின் ட்ரைலர்…!
https://youtu.be/wiF-WlWS3dE
ஜனவரி மாதம் 4ம் தேதி`டிக் டிக் டிக்’ ஆடியோ ரிலீஸ்..!
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் `டிக் டிக் டிக்'. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். சிங்கப்பூரை சேர்ந்த ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயம் ரவியின் மகன் ஆரவ் உள்ளிட்டோர் டப்பிங் பணியை முடித்தனர். குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 26-ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கின்றனர்
டி.இமான் இ...
சமந்தாவுடன் நடிக்கும்போது எல்லா பிரச்சனைகளையும் மறந்து சந்தோஷமாக இருக்கும் – விஷால்
CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `இரும்புத்திரை'. இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஷால், சமந்தா, இயக்குநர் பி.எஸ்.மித்ரன், இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன், இயக்குநர் திரு, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதில் விஷால் பேசும் போது,
`இரும்புத்திரை' முதலில் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தோம். ஆனால், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை கட்டாயம். அதனால் படம் வெளி வருவதில் தாமதமானது. ஆர்.கே.நகர் தேர்தலில் நான் போட்டியிட கூடாது என்று பலர் வேண்டிக் கொண்டனர். அதில் இயக்குநர் மித்ரனும் ஓருவர். ஏனெனில் மீண்டும் படம் தள்ளி போய்விடும் என்று எண்ணி தேர்தலில் எனது பரிந்துரையை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற மித்...
‘புரட்சி தலைவி’ திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை..!
திரை உலகில் வெற்றிக்கொடி நாட்டியவர் ஜெயலலிதா. பின்னர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக உயர்ந்தார்.
திரை உலகிலும், அரசியலிலும் தனி அடையாளமாக இருந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் தயாராக இருக்கும் இந்த படத்துக்கு ‘புரட்சி தலைவி’ என்று பெயரிட்டுள்ளனர்.
மும்பையை சேர்ந்த பட நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதற்காக ஒரு வருடத்துக்கு மேலாக ஜெயலலிதா பற்றிய தகவல்களை சேகரித்து இருக்கிறார்கள்.
இதுகுறித்து, இந்த படத்தை தயாரிக்க இருக்கும் ஆதித்யா பரத்வாஜ் கூறியதாவது:-
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே அவரிடம் இதுபற்றி தெரிவித்தோம். ஆனால் அவர் இதுகுறித்து பிறகு பேசலாம் என்று சொன்னார்.
‘புரட்சி தலைவி’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஸ்டுடியோக்களில் நடைபெறும். ஆரம்பகால திரைப்பட வாழ்க்கை பற்றிய படப்பிடிப்பு சென்னையில் படமாகு...
தாதா 87 படத்தில் பெண்மையை உணர்த்தும் பாடல்..!
தாதா 87 (DHA DHA 87) திரைப்படத்தில் ‘வெண்மேகம்’ என்ற பாடலை தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் வளர்ந்து வரும் இளம் பின்னணி பாடகர் பிரியங்கா பாடியுள்ளார். இந்தப் பாடலின் வரிகள் இன்றைய பெண்மையின் உண்மைகளை உளவியல் ரீதியாக உணர்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
இப்பாடலை இப்படத்தின் இயக்குநர் VIJAY SRI G எழுதியுள்ளார், இசையமைப்பாளர் LEANDER இசையமைக்க, RAJAPANDI ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சாருஹாசன், சரோஜா(கீர்த்திசுரேஷ் பாட்டி), ஜனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் தாதா 87 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை காசிமேட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2018ல் படத்தை வெளியிட தயாரிப்பு நிர்வாகம் ‘கலை சினிமாஸ்’ முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே கமல்ஹாசன் பிறந்தநாள் நவம்பர் 7 அன்று படத்தின் 1 ST SINGLE TRACK ஆறடி ஆண்டவன் பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது....
`மாரி-2′ படத்தில் சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கும் வரலட்சுமி..!
வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை’, கவுதம் மேனன் இயக்கத்தில் `எனை நோக்கி பாயும் தோட்டா’ என ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.
இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2′ படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருந்த நிலையில், நடிகை வரலட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தில் வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமசும், முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணாவும் நடிக்கின்றனர். தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
10 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அவரது நண்பர் யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்க...
எம்ஜிஆர் பட டீசரை ஜனவரியில் பிரதமர் மோடி வெளியிட கோரிக்கை..!
காமராஜ் திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக மறைந்த தமிழக முதலவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு “ எம்.ஜி.ஆர் “ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப்படுகிறது.
1967 ஆம் ஆண்டு தமிழகத்தை அதிர்ச்சியிலும், கொந்தளிப்பிலும் ஆழ்த்திய நிகழ்வு எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதாவால் சுடப்பட்ட சம்பவம். எம்.ஜி.ஆர் திரைப்படத்திற்காக அந்த சம்பவம் தத்ரூபமாகப் படமாக்கப்பட்டது.
மேலும் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி, அன்றைய திரைப்பட இயக்குனர்கள் பி.ஆர்.பந்துலு, கே.சங்கர் ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டன.
இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆராக சதீஷ், எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், பி.ஆர்.பந்துளுவாக Y.G.மகேந்திரன், ஜானகி அம்மாவாக ரித்விகா, எம்.ஜி.சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, மற்றும் வையாபுரி ஆகியோர் நடிக்கின்றனர்.
ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை,...
பொங்கல் ரேசில் களமிறங்கும் விஷாலின் ‘சண்டக்கோழி-2’
பி.எஸ்.மிஸ்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை' படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்திலும் விஷால் நடித்து வருகிறார்.
இதில் `இரும்புத்திரை' படம் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இரும்புத்திரை' படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் `சண்டக்கோழி-2' படத்தின் ரிலீஸ் தேதியை விஷால் அறிவித்தார்.
விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
விஷாலின் 25-வது படமாக இந்த படம் உருவாகிறது.
`சண்டக்கோழி-2' படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட...

