ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வெளியாகிறது, நடிகர் விஷாலின் “வீரமே வாகை சூடும்” திரைப்படம் !
நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கி வரும் திரைப்படம் “வீரமே வாகை சூடும் “. அதிகார மட்டதிற்கு எதிராக எளியவன் ஒருவன் போர்க்கொடி தூக்கும் கதைதான் இப்படம்.
இப்படத்தின் படக்குழுவின் அர்ப்பணிப்பு இப்படம் அனைத்து கட்ட பணிகளும் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் 2022 ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.
அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையில் விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.
படத்தின் வெளியீட்டு பணிகளில்...
காமெடி என்ற பெயரில் அடுத்தவர்களை நக்கல் அடித்தே தன் படங்களை தந்த சந்தானம் முதல் முறையாக அப்பாவியாக அதே நேரம் தாழ்வு மனம் உள்ள திக்குவாய் மனிதராக நடித்திருக்கிறார்.
கதைன்னு பெருசா ஒன்னும் இல்ல... வழக்கம் போல ஹீரோ வீட்டுக்கு எதிர் வீட்டில் ஹீரோயின் இருப்பதும், அவர்களுக்குள் காதல் வருவதும் எவ்வளவு நாள் கதைன்னு சொல்ல முடியும்.
ஆனால், அதுல விதின்னு ஒரு விஷயத்தை புகுத்தி ஒரு அரசியல்வாதி கேரக்டரை ஏற்படுத்தி பெட்டி பெட்டியா தேர்தலுக்கு பணம் எடுத்துகிட்டு போகும் போது அந்த வண்டி விபத்துல சிக்கி பணம் எரிஞ்சி போவதும், ஒரு பெட்டி மட்டும் ஹீரோ கையில் கிடைப்பதும் கடைசியில் அந்த பணம் என்ன ஆகிறது, அரசியல்வாதி வில்லன் சிக்கினானா, ஹீரோ காதல் கை கூடியதா? ஹீரோவின் தாழ்வுமனப்பான்மை என்ன ஆகிறது என்பதை இயக்குனர் தனக்கே உரிய பாணியில் சொல்லி இருக்கிறார்.
நக்கல் நையாண்டியில் வண்டி ஓட்டி வந...
எப்பவும் பார்க்குற சிம்புவ இதில் பார்க்க முடியாது - யுவன்!
சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.
இதில் யுவன் பேசும்போது, ‘எப்பவும் பார்க்குற சிம்புவ இப்படத்தில் பார்க்க முடியாது. வேறொரு சிம்புவை பார்க்கலாம். எஸ்.ஜே.சூர்யாவிற்கும் சிம்புவுக்கு நடக்கும் ஒரு விளையாட்டுதான் இப்படத்தில் அதிகம் இருக்கும். இதற்கு நடுவில் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் வருவார்கள். நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக மாநாடு உருவாகி இருக்கிறது’ என்றார்.
மாநாடு படத்தில் சிம்புவுடன் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்...
பிறந்தநாளில் புதிய பட அறிவிப்பை வெளியிட்ட நயன்தாரா!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று நயன்தாராவின் பிறந்தநாளை அடுத்து அவருடைய புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘கனெக்ட்’ என்று பெயர் வைத்திருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இப்படத்தை இயக்குகிறார். தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் நயன்தாராவே இப்படத்தை தயாரிக்கிறார்.
தற்போது கனெக்ட் படத்தின் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
பிரச்சனையை நான் பார்த்துக்குறேன்... என்னை நீங்க பார்த்துக்கோங்க... கண்கலங்கிய சிம்பு!
சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.
இதில் நடிகர் சிம்பு பேசும்போது, ‘எனக்கு நிறைய பிரச்சனைகள் கொடுக்கிறார்கள். படத்தை வெளியிட விடாமல் நிறைய பேர் தடுக்கிறார்கள். பிரச்சனைகள் எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை ரசிகர்களான நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கண்கலங்கி பேசி இருக்கிறார்....
ஜி.வி.பிரகாஷுடன் மோதும் சாண்டி!
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ், படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் தற்போது ‘பேச்சிலர்’ படம் தயாராகி வருகிறது. டில்லிபாபு தயாரித்துள்ள இப்படத்தை சதிஸ் செல்வகுமார் இயக்கி இருக்கிறார். இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக இளம் நடிகை திவ்ய பாரதி நடித்துள்ளார். மேலும் முனிஷ்காந்த், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அன்றைய தினத்தில் நடன இயக்குனர் சாண்டி நடிப்பில் உருவாகி இருக்கும் 3.33 (மூணு முப்பத்தி மூணு) திரைப்படமும் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாம்பூ ட்ரீஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு அறிமுக இயக்குனர் நம்பிக்கை சந்துரு இயக்கி இருக்கிறார். இ...
சூர்யாவிற்கு ஆதரவாக துணை நிற்கும் ரசிகர்கள்!
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜெய் பீம்’. பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்து வெகுவாக பாராட்டினர்.
இதனிடையே, ஜெய் பீம் படத்தில் பழங்குடியினர்களை சித்திரவதை செய்யும் குருமூர்த்தி என்கிற போலீஸ் கதாபாத்திரம் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் போல் காட்டப்பட்டு இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்ததோடு, நடிகர் சூர்யாவுக்கு அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பி இருந்தார். இதற்கு சூர்யாவும் அறிக்கை வாயிலாக பதிலளித்தார்.
இந்நிலையில், 'ஜெய் பீம்' பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னி...
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நாளை வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். காமெடி கலந்த ரொமாண்டிக் திரைப்படமாக இது உருவாகி உள்ளது....