கணேஷ்-ராஜலட்சுமி ஜோடியின் குரலில் சார்லிசாப்ளின் 2 பட பாடல்..!
அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக டி.சிவா மிகப் பிரமாண்டமாக தயாரித்துக் கொண்டிருக்கும் பார்ட்டி படம் விரைவில் வெளி வர உள்ளது.
இதை தொடர்ந்து அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் "சார்லி சாப்ளின்2"
இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப் பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே.
முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார்.
கதா நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார்.
முதல் பாகத்தில் நடித்த பிரபு இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மற்றும் சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா,செந்தில், ரவிமரியா, கிரேன் மனோகர், செந்தி, சாம்ஸ்,காவ்யா, அமீத்,பா...









