வெள்ளிக்கிழமை, ஜூன் 5
Shadow

திரைப்படங்கள்

இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்ட “எனக்கொரு WIFE வேணுமடா’’ பர்ஸ்ட் லுக்!

இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்ட “எனக்கொரு WIFE வேணுமடா’’ பர்ஸ்ட் லுக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்ட "எனக்கொரு WIFE வேணுமடா’’ பர்ஸ்ட் லுக்! பத்திரிகை துறையில் 22 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஜியா உல் ஹக் என்கிற ஜியா இயக்கியுள்ள இரண்டாவது குறும்படத்துக்கு ‘எனக்கொரு WIFE வேணுமடா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘கள்வா’ என்ற ரொமான்டிக் திரில்லர் குறும்படத்தை கடந்த ஆண்டு இயக்கிய ஜியா, இப்போது புது படைப்புடன் வந்துள்ளார். பிலிம் வில்லேஜ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அமோகன் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார். இந்த குறும்படம் ஹியூமர் டிராமாவாக உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த குறும்படம் வெளியாக உள்ளது. ‘எனக்கொரு WIFE வேணுமடா’ குறும்படம் மூலம் இசையமைப்பாளராகவும் ஜியா அறிமுகம் ஆகிறார். இந்த குறும்படத்தின் பர்ஸ்ட் லுக்கை பிரபல இயக்குனர் சீனு ராமசாமி டிவிட்டரில் இன்று வெளியிட்டா...
மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஜோடியான த்ரிஷா!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஜோடியான த்ரிஷா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா கிருஷ்ணன் !!* *விஸ்வம்பரா படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்கிறார் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் !!* *மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் இணையும் பிரம்மாண்ட திரைப்படமான விஸ்வம்பரா படத்தில் த்ரிஷா கிருஷ்ணன் இணைந்துள்ளார்.* மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது அடுத்த பிரம்மாண்ட படமான “விஸ்வம்பரா” படத்திற்காக, சில நாட்களுக்கு முன்பு தான், ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்ட செட்டில் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த பிரம்மாண்ட படத்திற்காக ஹைதராபாத்தில் மொத்தம் 13 பிரம்மாண்ட செட்களை படக்குழு அமைத்துள்ளது. இதற்கிடையில், இப்படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா கிருஷ்ணனை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர். நடிகை த்ரிஷா இன்று நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இயக்குநர் வசிஷ்டா...
ஹேமந்த் M ராவ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கும் புதிய படம்

ஹேமந்த் M ராவ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கும் புதிய படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  VJF - Vaishak J Films தயாரிப்பில், சைட் ஏ சைட் பி படங்களின் வெற்றி இயக்குநர் ஹேமந்த் M ராவ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கும் புதிய படம் !! சப்த சாகரதாச்சே எல்லோ சைட் ஏ சைட் பி படங்களின் வெற்றி இயக்குநர் ஹேமந்த் M ராவ், சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் எனும் சிவண்ணா உடன் இணைந்து அடுத்த படத்தை துவங்குகிறார் இப்படத்தினை VJF - வைஷாக் J பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், டாக்டர் வைஷாக் J கவுடா தயாரிக்கிறார். இயக்குநர் ஹேமந்த் M ராவ் கூறியதாவது.., ஒரு நடிகராக சிவராஜ்குமார் சாரின் அனுபவம் மிகப்பெரியது, அவர் தனது முழு வாழ்க்கையிலும் மாறுபட்ட பல பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். ஒரு இயக்குநராக என்னையும், அவரையும் உற்சாகப்படுத்தும் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். அவருடன் பணியாற்றுவது எனக்கு கிடைத்திருக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு. மேலும் இயக...
பாக்காதீங்க ப்ளீஸ்… ”சிக்லெட்ஸ்” திரைப்பட விமர்சனம் 2.5/5

பாக்காதீங்க ப்ளீஸ்… ”சிக்லெட்ஸ்” திரைப்பட விமர்சனம் 2.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    ”சிக்லெட்ஸ்” கதையின் நாயகிகளாக மூன்று பெண்கள் இருக்கின்றனர், அவர்களின் பெற்றோர்களுக்கு இவர்கள் குறித்து தனித்தனி கனவு இருக்கிறது. ஆனால், இந்த மூன்று பெண்களும் வேறு கனவில் இருக்கிறார்கள். வயசு கோளாறால் காதலில் விழுவதால் காமத்தை தேட முடிவு செய்கிறார்கள். அதற்காக, இந்த மூன்று ஜோடிகளும் தங்களின் பெற்றோர்களை ஏமாற்றிவிட்டு பார்ட்டிக்கு கிளம்புகின்றனர், பிறகு இவர்கள் எதற்காக சென்றார்கள் என்பதை அறிந்த பெற்றோர்கள், அவர்களை தேடி போகிறார்கள்.  கடைசியில் அந்த மூன்று ஜோடிகளும் பார்ட்டிக்கு சென்று தங்களை நினைத்ததை செய்தார்களா? அல்லது பெற்றோர்கள் அவர்களை தடுத்தார்களா? என்பதே ”சிக்லெட்ஸ்” படத்தின் மீதி கதை… படம் பார்க்க வரும் இளைஞர்களைக் குஷிப்படுத்தவேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் கிளாமர் காட்சிகளில் விளையாடியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கொளஞ்சிகுமார். காதல் மற்றும் காமம் இரண...
லவ்வர்’ படத்தின் இசை வெளியீடு

லவ்வர்’ படத்தின் இசை வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *‘லவ்வர்’ படத்தின் இசை வெளியீடு* அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘லவ்வர்’. இதில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ராஜ்கமல் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கும் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொண்டிருக்கிறார். காதலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் நாசரேத் பஸ்லியான், மகேஷ்ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில...
‘‘மறக்குமா நெஞ்சம்” ரசனையா? வேதனையா? கோடங்கி விமர்சனம் 3/5

‘‘மறக்குமா நெஞ்சம்” ரசனையா? வேதனையா? கோடங்கி விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரசனையா? வேதனையா? கோடங்கி விமர்சனம் 3/5   கன்னியாகுமரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் ரக்‌ஷன், கூடபடிக்கும் மலினாவை காதலிக்கிறார். கடைசிவரை தனது காதலை சொல்லாமல் பள்ளி படிப்பை முடிக்கிறார். பல ஆண்டுகள் முடிந்த நிலையில், அந்த பள்ளிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், 2008 ஆம் ஆண்டு அந்த பள்ளியில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களின் தேர்ச்சி செல்லாது என்றும், அப்போது தேர்வு எழுதிய மாணவர்கள் மீண்டும் 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும், என்றும் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. 10 வருடங்களுக்கு முன்பு எழுதிய 12ம் வகுப்பு தேர்வை மீண்டும் எழுதி தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் மாணவர்கள், வேறு வழி இல்லாமல் வருத்தத்தோடு மீண்டும் அந்த பள்ளிக்கு வர, ரக்‌ஷன் தனது மட்டும் மீண்டும் காதலியை பார்க்கப் வ...
சக்சஸ் நிகழ்ச்சியில் இயக்குனருக்கு தங்க சங்கிலி பளிசளித்த தயாரிப்பாளர்!

சக்சஸ் நிகழ்ச்சியில் இயக்குனருக்கு தங்க சங்கிலி பளிசளித்த தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *’சிங்கப்பூர் சலூன்’ சக்சஸ் மீட்!* வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியானத் திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இதன் வெற்றி விழா இன்று நடைபெற்றது. கலை இயக்குநர் ஜெய், “’சிங்கப்பூர் சலூன்’ படத்தில் சலூன் அதைச்சுற்றியுள்ள வீடுகள் என மூன்று ஏக்கரில் செட் உருவாக்கினோம். எங்களுக்கு எல்லா சுதந்திரமும் கொடுத்த இயக்குநர் கோகுலுக்கு நன்றி. கேமரா மேனும் சிறப்பாக ஒத்துழைப்புக் கொடுத்தார். என்னுடைய குழுவினருக்கும் நன்றி” பின்னணி இசையமைப்பாளர் ஜாவித், “எனக்கு இந்தப் படம் மிக முக்கியமானது. இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் கோகுல், தயாரிப்பாளர் ஐசரிக்கு நன்றி. குறிப்பாக இரண்டாம் பாதி எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. உங்களுக்கும் படம் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி” பாடலா...
தூக்குதுரை விமர்சனம் 2.5/5

தூக்குதுரை விமர்சனம் 2.5/5

CINI NEWS, HOME SLIDER, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து.அவரிடம் இருக்கும் விலைமதிப்பற்ற கிரீடம் கோயில்திருவிழாவின்போது மக்களுக்குக் காட்டப்படும்.மாரிமுத்துவின் மகள் இனியா. அவருக்கும் ஒரு சாமானியரான யோகிபாபுவுக்கும் காதல். அதற்கு எதிர்ப்பு. யோகிபாபு கொல்லப்படுகிறார்.அதேநேரம் அந்த கிரீடமும் காணாமல் போகிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் தூக்குதுரை படம். கதைப்படி சில காட்சிகளிலேயே கொல்லப்பட்டுவிடுகிறார் யோகிபாபு.அதன்பின் அவரைப் பயன்படுத்த இயக்குநர் கடைபிடித்திருக்கும் உத்தி படத்தை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்றுவிடுகிறது. அரசகுடும்பத்து வாரிசு என்பதற்கேற்ற அழகுடன் இருக்கிறார் இனியா. திரைக்கதையில் அவருக்கு குறைவான இடம்தான். ஆனால் வரும் காட்சிகளில் வரவேற்புப் பெறுகிறார். நான்கடவுள் இராசேந்திரன் தலைமையிலான மகேஷ், பாலசரவணன், செண்ட்ராயன் ஆகியோர்தான் படத்தைத் தொடங்க...
சஸ்பென்ஸ் திரில்லர் கதையை புதிய கோணத்தில் சொல்லும் ‘அதோமுகம்’

சஸ்பென்ஸ் திரில்லர் கதையை புதிய கோணத்தில் சொல்லும் ‘அதோமுகம்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ரீல் பெட்டி மற்றும் தரிகோ பிலிம் ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் ‘அதோமுகம்’ அதோமுகம் என்ற பழந்தமிழ் வார்த்தைக்கு மறைத்து வைத்திருக்கும் முகம் என்று பொருள். மனிதர்கள் மறைத்து வைத்திருக்கும் கோர முகங்கள் சில சமயங்களில் வெளிவரும் போது எந்தவிதமான வினோதங்கள், அசம்பாவிதங்கள் நிகழ்கிறது என்பதை அதோமுகம் புதிய கோணத்தில் திரைப்படமாக வடிவமைத்துள்ளனர். ஊட்டி, குன்னூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் கதைகளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். மலைகள், குளிர், மிஸ்ட் ஆகியவையுடன் டெக்னாலஜியுடன் கூடிய சஸ்பென்ஸ் திரில்லாராக படம் உருவாகியுள்ளது.  ஹீரோ  தனது மனைவி  மொபைல் போனில் அவருக்கு தெரியாமல் ஒரு ஸ்பை அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ததால் அவனது வாழ்க்கை தலைகீழாக மாறுவது தான் கதை. இதை சுற்றி பல திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையை வடிவமைத்து அதோமுகம் படத்தை உருவாக்கியுள்ளார்க...
’வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

’வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பீப்பிள் மீடியா ஃபேக்டரி, விஸ்வ பிரசாத் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்துள்ளத் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் நடராஜ் பிள்ளை பேசியதாவது, “கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து பீப்பிள் மீடியா ஃபேக்டரி இயங்கி வருகிறோம். இந்த ஏழு வருடங்களில் தெலுங்கில் ’கார்த்திகேயா2’, ‘வெங்கி மாமா’, ‘நிசப்தம்’ என நிறைய ஹிட் படங்களைக் கொடுத்துள்ளோம். இப்போது தமிழிலும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் மூலம் இங்கு வந்திருக்கிறோம். எங்கள் தயாரிப்பாளர் விஸ்வா தெலுங்கில் மட்டுமல்ல பல மொழிகளிலும் படங்கள் தயாரித்துள்ளார். ’வடக்குப்பட்டி ராமசாமி’ படக்குழுவினருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்”. நடிகர் சந்தானம் பேசியதாவது, “பீப்பிள் மீடியா ஃபேக்டரி தெலுங்கில...