இளையராஜா இசையில், பாரி இளவழகன் இயக்கத்தில் ‘கூழாங்கல்’ தயாரிப்பாளரின் ‘ஜமா’!
இசைஞானி இளையராஜா இசையில், பாரி இளவழகன் இயக்கத்தில் 'கூழாங்கல்' தயாரிப்பாளரின் அடுத்த முயற்சி 'ஜமா'!
பூர்வீகம் மற்றும் அழகியலை ஆதரிக்கும் திரைப்படங்கள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. பல ஆண்டுகளாக, இதுபோன்ற திரைப்படங்கள் நாடு மற்றும் மொழிகளுக்கு அப்பாற்பட்ட பார்வையாளர்களின் இதயங்களைத் தொட்டு வருகின்றன.
‘கூழாங்கல்’ திரைப்படத்தை உருவாக்கிய Learn & Teach Productions, தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற மற்றொரு யதார்த்தமான படத்துடன் சினிமா ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது.
பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் அழகியல் கலாச்சாரமான தெருக்கூத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாக அவர் கூறுகிறார். 'ஜமா' என்ற தலைப்பு தெருக்கூத்து நாட...









