ஞாயிற்றுக்கிழமை, மே 31
Shadow

திரைப்படங்கள்

விரைவில் ‘விஸ்வரூபம்-2’ டிரைலர்

விரைவில் ‘விஸ்வரூபம்-2’ டிரைலர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வரூபம்’. இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு சம்தத் சைனுதீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமல்ஹாசனே இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை மிக விரைவில் கமல்ஹாசன் வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கமலின் உதவியாளரும், ‘தூங்காவனம்’ படத்தின் இயக்குனருமான ராஜேஷ் எம்.செல்வா, ‘விஸ்வரூபம்-2’ டிரைலர் ரெடி என்றும் இந்த டிரைலர் மிக விரைவில் வெளியாகும்’ என்றும் அறிவித்துள்ளார்! இது கமலின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ரஜினிகாந்த் படத்திற்கு அனிருத் இசை

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ரஜினிகாந்த் படத்திற்கு அனிருத் இசை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். தற்போது விஜய் நடிப்பில் அவரது 62-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்நிலையில் தனது அடுத்த பட அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக இந்த படத்தை தயாரிக்கிறார். பீட்சா, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்று சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....
மிக மிக அவசரமாக ஸ்ரீபிரியங்கா படத்தை வாங்கிய வெற்றிமாறன்

மிக மிக அவசரமாக ஸ்ரீபிரியங்கா படத்தை வாங்கிய வெற்றிமாறன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
‘அமைதிப்படை 2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இயக்குனராக அவதாரமெடுத்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’. கதாநாயகியை பிரதானப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், ‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை,’ ஸ்கெட்ச் ஆகிய படங்களில் நடித்த ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கதையை ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்பைக் காணோம்’ ஆகிய படங்களின் இயக்குனர் ஜெகன்நாத் எழுதியுள்ளார். புகைப்படம், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள அரீஷ் குமார் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார். அவரோடு வழக்கு எண் முத்துராமன், லிங்கா, ஆண்டவன்கட்டளை அரவிந்த், ஈ. ராமதாஸ், சரவண சக்தி, வெற்றிக்குமரன், குணா, வி.கே.சுந்தர், மாஸ்டர் சாமுண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.  மேலும் இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் ...
காலா டீசர் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்..!

காலா டீசர் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ திரைப்படத்தின் டீசர் இன்னும் சில நிமிடங்களில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நேரத்தில் திடீரென ஒரு செய்தி அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. காலா’ படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் சற்றுமுன் தனது டுவிட்டரில் ஒரு தகவலை பதிவு செய்துள்ளார். இதன்படி காஞ்சி பெரியவர் அவர்கள் இன்று காலை காலமானதை அடுத்து நாளை வெளியாகவிருந்த ‘காலா’ படத்தின் டீசர், மார்ச் 2ஆம் தேதி வெளியாகும் என்றும் இதனால் ரசிகர்களுக்கு ஏற்படும் ஏமாற்றத்திற்கு தான் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.தனுஷின் இந்த அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும் தலைவர் ரஜினிக்காக இன்னும் ஒருநாள் காத்திருப்பதில் தங்களுக்கு த்ரில்தான் என்றும் அவர்கள் டுவிட்...
ஸ்ரீதேவி மரணம்: விடை தெரியாத கேள்விகள்..!

ஸ்ரீதேவி மரணம்: விடை தெரியாத கேள்விகள்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக இறந்ததாக முதலில் கூறப்பட்டது. தற்போது அவர் தற்செயலாக நீரில் மூழ்கி இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. அவருடைய மரணம் தொடர்பாக  மிகப் பெரிய கேள்விகள் எழுந்துள்ளன. * போனிகபூர் குளியல் அறையை முட்டித்தள்ளிக் கொண்டு சென்றபோது மாலை 6.25 மணி என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த சம்பவம் குறித்து துபாயைச் சேர்ந்த நண்பரின் அறிவுரைக்கு பிறகு இரவு 9 மணிக்குத்தான் போலீசுக்கு அவர் தகவல் தெரிவித்து உள்ளார். ஏன் இந்த தாமதம்?... * போனிகபூர் இதுபோன்ற சூழ்நிலையில் நட்சத்திர ஓட்டலின் அவசர மருத்துவ உதவியை ஏன் நாடவில்லை?... * ஸ்ரீதேவிக்கு திடீர் மாரடைப்பால் மரணம் நிகழ்ந்தது என்பதை யார், எதற்காக கூறினார்கள்? விடை காணமுடியாத கேள்விகளாக இவை உள்ளன.  ...
விஸ்வாசம் படத்தில் இணையும் யோகி பாபு – ரோபோ சங்கர் கூட்டணி..!

விஸ்வாசம் படத்தில் இணையும் யோகி பாபு – ரோபோ சங்கர் கூட்டணி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித் - சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். யோகி பாபு, தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். இந்நிலையில், காமெடி நடிகர் ரோபோ சங்கரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். யோகி பாபு - ரோபோ சங்கர் கூட்டணி இணையும் பட்சத்தில் இருவரும் காமெடியில் கலக்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இருவரும் ஏற்கனவே வீரசிவாஜி, மன்னர் வகையறா உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது...
ராஜஸ்தான் செல்லும்  ‘சாமி-படக்குழு..!

ராஜஸ்தான் செல்லும் ‘சாமி-படக்குழு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விக்ரம் ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் ‘சாமி-2’ படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் ‘சாமி-2’ படத்தின் படப்பிடிப்பு நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது சாமி படத்தில் வில்லனாக நடித்த கோட்டா ஸ்ரீனிவாச ராவ்வின் மகனாக இந்த பாகத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து வடஇந்தியாவில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்காக நடிகர் விக்ரம் உள்ளிட்ட படக்குழு மார்ச்சில் ராஜஸ்தான் செல்லவிருக்கிறது. அங்கு படப்பிடிப்புக்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அங்கு சில முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது. இப்படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். பாபி சிம்ஹா வில்லனாகவும், விவேக், பிரபு, சூரி, ஓஏகே சுந்தர், ஜான் விஜய் உள்ளிட்ட ...
கோலமாவு கோகிலா வைக்கும் முதல் புள்ளி..!

கோலமாவு கோகிலா வைக்கும் முதல் புள்ளி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
லைகா நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு நயன்தாராவுக்கு கடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன் ஆகிய மூன்று படங்கள் வந்தன. அறம் படத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்ற போராடும் மாவட்ட கலெக்டராக நடித்த அவரது கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் குவிந்தன. கிளைமாக்சில் நயன்தாரா அரசியலுக்கு வருவதுபோன்று கதையை முடித்து இருந்தனர். இந்த வருடம் அவர் கைவசம் அதிக படங்கள் உள்ளன. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்த `ஜெய்சிம்ஹா’ என்ற தெலுங்கு படம் ஜனவரியில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, `கோலமாவு கோகிலா’ ஆகிய மூன்று படங்களும் உருவாகி உள்ளது.  இதில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கு அனி...
‘கரு’ படத்தில்  நடிக்க மறுத்த சாய் பல்லவி – இயக்குநர் A.L. விஜய்

‘கரு’ படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி – இயக்குநர் A.L. விஜய்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கரு’. ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி அறிமுகமாகியிருக்கும் இப்படத்தில் நாக செளர்யா ஹீரோவாக நடித்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.   இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் கரு படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டார்கள். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் விஜய், “கரு என் கேரியரில் மிக முக்கியமான படமாக நினைக்கிறேன். இந்த கதையை 2014 ஆம் ஆண்டு லைகா நிறுவனத்தில் நான் சொன்னேன், அப்போது அவர்கள் இந்த படத்தை நீங்கள் எப்போது எடுத்தாலும், நாங்கள் தான் தயாரிப்போம் என்று கூறினார்கள், அதன்படி இன்று அவர்கள் இந்த படத்தை ரொம்ப சிறப்பாக தயாரித்திருக்கிறார...
வைரமுத்துவின் ஆண்டாள் சர்ச்சையில் சிக்கிய அனுஷ்கா படம்..!

வைரமுத்துவின் ஆண்டாள் சர்ச்சையில் சிக்கிய அனுஷ்கா படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகை. பல பெரிய நடிகர்களின் ஹிட் படங்களில் நடித்தவர். அண்மையில் அவரில் நடிப்பில் பாகமதி வெளியானது. ரஜினியும் அனுஷ்காவை வாழ்த்தினார். தற்போது தமிழில் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் படம் வெளியாகியுள்ளது. பக்தி படமான இதில் நாகார்ஜூனா, அனுஷ்கா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் தான் தற்போது பிரச்சனைக்கு காரணம். இதில் வைரமுத்து ஆண்டாளின் பெருமையை உணர்ந்தவர், உயர்த்தியவர் என எழுதியிருந்தார்களாம். இதனால் சிலர் படத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்களாம். தற்போது படத்தயாரிப்பாளர் பதிலடி கொடுத்துள்ளார். விளம்பரத்திற்காக வழக்கு போடுபவர்கள் படத்தை குடும்பத்துடன் தியேட்டரில் வந்து பார்த்துவிட்டு பின்னர் தவறாக இருக்கிறதா என சொல்லுங்கள் என்று கூறியுள்ளாராம்....