2025 தொடங்கி 2037ம் ஆண்டுக்குள் 7 திரைப்படங்கள் ரிலீசாகும் ‘மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஏழு திரைப்படம் - ஒரு பிரபஞ்சம் - எல்லையற்ற புராணக் கதைகள் - கொண்ட 'மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது
மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் படைப்பான ' மகாவதார் நரசிம்மா' 2025 ஜூலை 25ஆம் தேதியன்று வெளியாகிறது
ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும் க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிமேஷன் படைப்பான மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன. பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தத் தொடர் 2025 ஆம் ஆண்டு மகாவதார் நரசிம்மாவுடன் தொடங்கி, 2037 ஆம் ஆண்டின் மகாவதார் கல்கி பார்ட் 2 உடன் நிறைவடைகிறது. மகாவிஷ்ணுவின் பத்து தெய்வீக அவதாரங்களை விவரிக்கும் வகையில் இந்த படைப்புகள் தயாராகி இருக்கின்றன.
இந்த திரைப்படங்களின் வெளியீட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில்
* மகாவதார் நரசிம்மா (2025 )
* மகாவதார் ப...









