“மிராய்” திரைப்படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது !!
சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, கார்த்திக் கட்டமநேனி, டி.ஜி. விஷ்வ பிரசாத், கிருத்தி பிரசாத், பீப்பிள் மீடியா பேக்டரி இணைந்து வழங்கும் பான் இந்தியத் திரைப்படம் "மிராய்" ஆகஸ்ட் 1ஆம் தேதி உலகமெங்கும் வெளியீடு !!
"மிராய்" திரைப்படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது !!
இந்திய சினிமாவின் வளர்ந்து வரும் நட்சத்திரமான சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, சூப்பர் ஹீரோ ஜானரை முற்றிலும் மறு வரையறை செய்யும் முனைப்பில் இருக்கிறார். தேசிய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற "ஹனுமேன்" திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவரின் அடுத்த பெரிய முயற்சியான "மிராய்" படத்திலும் மக்களை மயக்கத் தயாராகி வருகிறார். இந்த பான் இந்தியா ஆக்ஷன்-அடைவேஞ்சர் படத்தில் தேஜா சஜ்ஜா, சூப்பர் யோதா என்ற மாபெரும் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார், இந்தப்படம் சூப்பர் ஹீரோ ஜானரை மிகவும் சுவாரஸ்யமாக மாற்றும். இப்படத்தை ...









