எம்புரான் எல்2 விமர்சனம் 3/5
எம்புரான் எல்2 விமர்சனம் 3/5
ஐயுஎஃப் எனும் கட்சியை வழி நடத்தி வந்த முதலமைச்சர் ராம்தாஸ் திடீர் மறைவுக்குப் பிறகு கேரள அரசியல் களத்தில் நிகழும் குழப்பங்களைத் தீர்க்க, வெளிநாட்டில் இருக்கும் அவரது மகன் ஜதினை(டொவினோ தாமஸ்) அழைத்து வருகிறார் நெடும்பள்ளி எம்.எல்.ஏவான ஸ்டீபன். ராமதாஸின் மறைவை பயன்படுத்தி ஆட்சியிலும், குடும்பத்திலும் அவரது கட்சியிலும் குழப்பங்களை ஏற்படுத்தியவர்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வருகிறார் ஸ்டீபன். அவருக்கு ‘குரேஷி அஃப்ராம்’ எனும் இன்னொரு பெயர் இருப்பதும், உலக நாடுகள் பல அஞ்சி நடுங்குகிற கேங்ஸ்டராக அவர் திகழ்வதும் தெரிய வருவதோடு முதல் பாகமான ‘லூசிஃபர்’ முடிவடைந்திருந்தது.
ஆனால். இந்த முன்கதைச் சுருக்கம் ஏதும் சொல்லத்தேவை இல்லாமலேயே ‘எம்புரான்’ கதை தொடங்குகிறது.
திரைக்கதை தொடக்கமே.. மதக்கலவரத்தால் பாதிக்கப்ப...









