இந்தியன் 2 செட்டில் பலியானவர்களுக்கு லைகா 2 கோடி, கமல் 1 கோடி நிதியுதவி!
இந்தியன் 2 செட்டில் பலியானவர்களுக்கு லைகா நிறுவனம் 2 கோடி, கமல் 1 கோடி நிதியுதவி
ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தின் படிப்பிடில் நேர்ந்துள்ள கோர விபத்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விபத்தில் இயக்குனர் ஷங்கரின் துணை இயக்குனர் கிருஷ்ணா, ஷங்கரின் பிஏ மது, ஆர்ட் அசிஸ்டண்ட் சந்திரன் என மூன்று இறந்துவிட்டனர். 10 பேர் காயம் படுகாயம் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் தமிழ் திரையுலகமே கருப்பு தினமாக மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த துணை இயக்குனர் கிருஷ்ணா பிரபல கார்ட்டூனிஸ்ட் மற்றும் விமர்சகரான மதன் அவர்களின் மருமகன் ஆவார். திரைத்துறையில் உள்ள பல்வேறு பிரபலங்கள் இறந்தவர்களின் கும்பத்திற்கு வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர். மேலும் சிலர் மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த கு...









