சண்டிமுனி படத்தில் நட்ராஜ்-மனீஷாயாதவ்-யோகிபாபு கூட்டணி
சிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு "சண்டிமுனி " என்று பெயரிட்டுள்ளனர்..
இந்த படத்தில் கதா நாயகனாக நட்ராஜ் நடிக்கிறார்...
கதாநாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். மிக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். வில்லனாக சூப்பர் சுப்பராயன் நடிக்கிறார்.
மற்றும் மயில்சாமி, ஆர்த்தி, வாசுவிக்ரம், முத்துக்காளை, சூப்பர்குட் சுப்ரமணி, கிரேன் மனோகர்,அஞ்சலிதேவி, சீனியம்மாள், பாபுபாய், பூபதி, விசித்திரன், குள்ளசெந்தில், சாந்தி, ஆனந்த் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் மில்கா.எஸ்.செல்வகுமார். இவர் ராகவா லாரன்ஸிடம் முனி 3 காஞ்சனா2 படத்தில் உதவியாளராக பணியாற்றினார். இவர் இயக்கும் முதல் படம் இது.
இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 27 ம் தேதி பழனியில் துவங்குகிறது. தொடர்ந்து 45 நாட்கள் பழனி, பொள்...









