சிவகார்த்திகேயன், ரவிகுமார் ‘அயலான்’ மீது வைத்துள்ள நம்பிக்கையே எங்கள் பலம்! – நடிகர் கருணாகரன்
*நடிகர் கருணாகரன்: சிவகார்த்திகேயன், ரவிகுமார் 'அயலான்' மீது வைத்துள்ள நம்பிக்கையே எங்கள் பலம்!*
நகைச்சுவை, குணச்சித்திரம், கதாநாயகன் என தனக்குக் கொடுக்கப்பட்ட எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யக் கூடியவர் நடிகர் கருணாகரன். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வெளிவரக் காத்திருக்கும் 'அயலான்' படத்தில் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சிக்காகவும் தொழில்நுட்பக்குழு தங்களது சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளது என்பவர் இந்தப் படத்தில் பணிபுரிந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம் என்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயனுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, "சிவகார்த்திகேயனுடன் நான் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை. ஒவ்வொரு காட்சியிலும் தான் மட்டுமே சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைக்காமல் தனது சக நடிகர்கள...









