பாரதிராஜா – நட்டி நட்ராஜ் – ரியோ ராஜ் – சாண்டி மாஸ்டர் – இணைந்து நடித்திருக்கும் ‘நிறம் மாறும் உலகில்’ பட இசை மற்றும் முன்னோட்டம் ரிலீஸ்!
*பாரதிராஜா - நட்டி நட்ராஜ் - ரியோ ராஜ் - சாண்டி மாஸ்டர் - ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் 'நிறம் மாறும் உலகில்' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு*
சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் பிரிட்டோ J B இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், 'ஆடுகளம்' நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ் காந்த், ரிஷி காந்த், கனிகா, ஆதிரா , காவ்யா...









