“ராபர்” பட இசைவிழாவில் தயாரிப்பாளர் தாணு சொன்ன நடிகை ரம்பா ரகசியம்!
தயாரிப்பாளர் தாணு, நடிகர்கள் தியாகராஜன்,பாக்யராஜ், அம்பிகா,ரம்பா கலந்து கொண்ட "ராபர்” படத்தின் இசை வெளியீட்டு விழா!
நடிகை ரம்பா பேசும்போது,
நான் ரகசியமாக வைத்திருந்ததை தாணு சார் எல்லோர் முன்னாடியும் போட்டு உடைத்து விட்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு எனக்கு தெரிந்தவர்கள் அனைவரையும் ஒன்றாக இங்கு பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
தயாரிப்பாளர், இயக்குனர் என்று யாராக இருந்தாலும் எங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது பத்திரிகையாளர் தான். அவர்கள் பின்னாடி இருந்து கொண்டு எங்களை முன்னாடி கொண்டு வந்து ஆதரவு தருவார்கள்.
அப்படி பெண் பத்திரிகையாளராக இருந்து, ஒவ்வொரு படியாக சொந்த உழைப்பில் ஒரு படத்தை தயாரித்திருப்பது பெருமையாக இருக்கிறது. கவிதா எப்போது அழைத்தாலும் நான் வருவேன்.
இந்த படம் சிறிய படம், பெரிய படம் என்று இல்லை, எனக்கு நல்ல படமாகத் தான் தோன்றுகிறது. டிரைலர் பார்க்கும் போதே க...









