சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

திரைப்படங்கள்

முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட ரெட் ப்ளவர் இசை வெளியீடு!

முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட ரெட் ப்ளவர் இசை வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்க, விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ரெட் ஃப்ளவர்” (Red flower). ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியிருக்கிறார். ஆகஸ்ட் 8ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடிகர் விஷால், இயக்குனர்கள் பி.வாசு, சுராஜ் மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. ரெட் ஃப்ளவர் படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் பேசியதாவது: ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸின் முதல் மற்றும் மிக பிரமாண்டமான தயாரிப்பு இந்த ரெட் ஃப்ளவர். மேடையில் இருப்பவர்கள் மட்டும் சிறப்பு விருந்தினர்கள் அல்ல, இங்கு வந்திருக்கும் எல்லோருமே என்னுடைய சிறப்பு விருந்தினர்கள் தான்...
வெளியீட்டுக்கு முன்பே வரவேற்பை பெற்ற  ஜென்ம நட்சத்திரம்!

வெளியீட்டுக்கு முன்பே வரவேற்பை பெற்ற ஜென்ம நட்சத்திரம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *'ஜென்ம நட்சத்திரம்' வெளியீட்டுக்கு முன்பே ஹிட்! ஊடக விமர்சனங்களும் முன்னோட்டக் காட்சிகளும் வரவேற்பை பெற்றுள்ளன!* ஊடகங்களின் பாராட்டுகளும், முன்னோட்டக் காட்சிகளின் சிறப்பான எதிர்வினைகளும் 'ஜென்ம நட்சத்திரம்' படத்துக்கு வணிக வட்டாரத்திலும் திரையரங்க உரிமையாளர்களிடமும் வலுவான வரவேற்பை ஏற்படுத்தியுள்ளன. ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடும் இந்த அதிரடித் திகில் திரைப்படம் ஜூலை 18 (வெள்ளிக்கிழமை) உலகமெங்கும் திரைக்கு வர உள்ளது. சினிமா வட்டாரத்தில், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பலத்த ஓப்பனிங்கை பெறும் என எதிர்பார்ப்பு வளர்ந்துவருகிறது. துல்லியமான அணுகுமுறை, தரமான உள்ளடக்கம், மற்றும் பாணியை மதிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்ட கதை , இவை அனைத்தும் வெற்றிகரமான திரைப்படத்தின் ரகசிய சூத்திரம். 'ஜென்ம நட்சத்திரம்' குழு, அந்த சூத்திரத்தை கைவசப்படுத்தி விட்டது போலவே தெரிகிறது. 1981-ஆம் ஆண்டு வெளியா...
எம். எஸ். பாஸ்கர் – ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இணைந்து நடிக்கும் புதிய படம்!

எம். எஸ். பாஸ்கர் – ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இணைந்து நடிக்கும் புதிய படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    நடிகர்கள் எம். எஸ். பாஸ்கர் - ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இணைந்து நடிக்கும் புதிய படம் - பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம் குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிப்பில் நடிகர் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. காமெடி நடிகராக பிரபலமான 'ஃப்ராங்க்ஸ்டர்' ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகரான எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்க...
பரத் – அஜய் கார்த்திக் இணைந்து நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2 ‘படத்தின் டீசர் வெளியீடு!

பரத் – அஜய் கார்த்திக் இணைந்து நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2 ‘படத்தின் டீசர் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    பரத் - அஜய் கார்த்திக் இணைந்து நடித்திருக்கும் 'காளிதாஸ் 2 'படத்தின் டீசர் வெளியீடு தமிழில் பிரபலமான நடிகர் பரத் மற்றும் புதுமுக நடிகர் அஜய் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் 'காளிதாஸ் 2' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ரவி மோகன் - ஜீ. வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 2019 ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற 'காளிதாஸ்' படத்தை தொடர்ந்து அதன் இயக்குநரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காளிதாஸ் 2' திரைப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், 'ஆடுகளம்' கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ , அபர்னதி, ராஜ...
ராஷ்மிகா மந்தனா – தீக்ஷித் ஷெட்டி நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” படத்தின் முதல் பாடல்!

ராஷ்மிகா மந்தனா – தீக்ஷித் ஷெட்டி நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” படத்தின் முதல் பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    ராஷ்மிகா மந்தனா – தீக்ஷித் ஷெட்டி நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” படத்தின் முதல் பாடல் “நதிவே” வெளியாகியுள்ளது! நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஜோடியாக நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” திரைப்படம், கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீராஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகி வருகிறது. புகழ்பெற்ற தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் இப்படத்தினை வழங்குகிறார். இயக்கும் பணியை நடிகராகவும், இப்போது இயக்குநராகவும் செயல்படும் ராகுல் ரவீந்திரன் மேற்கொள்கிறார். முழுமையான காதல் படைப்பாக உருவாகி வரும் இப்படத்திலிருந்து முதல் இசை வெளியீடாக “நதிவே” எனும் பாடல் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. ஹேஷம் அப்துல் வாஹாப் இசையமைத்துள்ள இந்த பாடல், மனதைக் கொள்ளை கொள்ளும் இசையும், ஈர்க்கும் கு...
ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் 96 பிரேம் குமார் – சீயான் விக்ரம் இணையும் புதுப்படம்!

ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் 96 பிரேம் குமார் – சீயான் விக்ரம் இணையும் புதுப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிறுவனம், அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில்   பெருமை கொள்கிறது. இந்திய திரைப்பட உலகின் பெருமைமிகு நடிகர் சீயான் விக்ரம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, 96, மெய்யழகன் புகழ் இயக்குநர் பிரேம் குமார் இப்படத்தை இயக்கவுள்ளார். உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன் சிறப்பான கதைகளை வழங்கும் திறமை கொண்ட இயக்குநர் பிரேம் குமார், பன்முக திறமை கொண்ட நடிப்புக்காக பெயர் பெற்ற சீயான் விக்ரம் ஆகியோர் இணைந்து தமிழ் சினிமாவிற்கு தனித்தன்மை வாய்ந்த ஒரு சினிமா அனுபவத்தை வழங்கவிருக்கின்றனர். இந்த திரைப்படத்தை, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட்டின் தலைவர் டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிக்கிறார். இப்படம், நம் மனதை ஆழமாக தொடும் கதைக்களத்துடன், பரவசமான நடிப்பை கலந்துசேர்த்த, ஒரு புதிய முயற்சியாக உருவாக உள்ளது. இத்திரைப்படத்தின் தலைப்பு, நடிகர் பட்டியல் மற்று...
“ஜீவா 46”  மூலமாக மீண்டும் இணைந்த “பிளாக்” வெற்றிப்படக்கூட்டணி!

“ஜீவா 46”  மூலமாக மீண்டும் இணைந்த “பிளாக்” வெற்றிப்படக்கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    மீண்டும் இணைந்த “பிளாக்” வெற்றிப்படக்கூட்டணி, “ஜீவா 46”  கோலாகலத் துவக்கம்!! நடிகர் ஜீவா நடிப்பில், பிளாக் பட இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கும்  புதிய படம் “ஜீவா 46” இனிதே துவங்கியது!! தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜீவா, பிளாக் பட வெற்றி  இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி உடன் மீண்டும் இணைகிறார். ஜீவாவின் 46 வது படமாக உருவாகும் இப்படத்தினை, KR Group சார்பில் கண்ணன் ரவி தயாரிக்கிறார். துணை தயாரிப்பை  முத்துக்குமார் ராமநாதன்  மேற்கொள்கிறார். இப்படத்தில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். ரபியா கட்டூன் நாயகியாக நடிக்கிறார். பப்லூ பிரித்திவிராஜ், நைலா உஷா, ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.  மேலும் இந்த பூஜையில் நடிகர் விஷால், தயாரிப்பாளர் ஆர்...
ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படத்தில் இணையும் கவின் – பிரியங்கா மோகன் ஜோடி!

ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படத்தில் இணையும் கவின் – பிரியங்கா மோகன் ஜோடி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படத்தில் இணையும் கவின் - பிரியங்கா மோகன்* திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் கவின் கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில கவின்- பிரியங்கா மோகன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு ஓஃப்ரோ (OFRO) இசையமைக்கிறார் . ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி ஜானரிலான இந்த திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்களும், ்படப்பிடிப்பு குறித்த தகவலும் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர...
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கே.எஸ்.அதியமான் இயக்கும் உணர்வுப்பூர்வமான படம்!

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கே.எஸ்.அதியமான் இயக்கும் உணர்வுப்பூர்வமான படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கே.எஸ்.அதியமான் இயக்கும் உணர்வுப்பூர்வமான படம்* தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது. ‘ உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இயக்குநர் கே.எஸ்.அதியமான் இந்தப் படத்தை இயக்குகிறார். மிகச்சிறந்த நடிப்பால் படத்திற்கு உயிரூட்டும் நடிகை ரேவதி இந்தப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் விதார்த், லிஜோ மோல் ஜோஸ், அர்த்தனா பினு என பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தில், சஞ்சித், அபிராமி என்கிற இளம் ஜோடியும் அறிமுகமாகின்றனர். இயக்குநர்கள் ராஜ்கபூர் மற்றும், மகேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். குழந்தை நட்சத்திரம் ஸ்ரீலயா இதில் முக்கிய வேடத்தில...
ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு ரவி மோகன் தொடர்ந்த வழக்கில் பட தயாரிப்பு நிறுவனம் பதில்தர சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!

ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு ரவி மோகன் தொடர்ந்த வழக்கில் பட தயாரிப்பு நிறுவனம் பதில்தர சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு ரவி மோகன் தொடர்ந்த வழக்கில் பட தயாரிப்பு நிறுவனம் பதில்தர சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. நடிகர் ரவி மோகன் மீது பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், 2 படங்களில் நடிக்க நடிகர் ரவிமோகனுடன் கடந்த 2024ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், அதற்காக அவர் ரூ.6 கோடி முன்பணம் வாங்கியதாகவும் தெரிவித்த நிறுவனம், கால்ஷீட் கொடுத்தும் பணிகளை துவங்காததால் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்திருக்கிறது. மேலும், அந்த பணத்தை சொந்த தயாரிப்பு, சொந்த செலவுக்கோ பயன்படுத்த வாய்ப்புள்ளதால், ப்ரோ கோட் படத்தை தயாரிக்க, வேறு நிறுவன தயாரிப்பிலும் நடிக்க ரவிமோகனுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பாபி டச் கோல்டு ...