புதன்கிழமை, செப்டம்பர் 30
Shadow

நடிகர்கள்

சர்ச்சையில் சிக்குமா விஜய்சேதுபதியின் சீதக்காதி பட தலைப்பு..!

சர்ச்சையில் சிக்குமா விஜய்சேதுபதியின் சீதக்காதி பட தலைப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் புதிய படத்திற்கு சீதக்காதி என்று பெயரிடப் பட்டுள்ளது. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இந்த படத்தினை இயக்குகிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சீதக்காதி திரைப்படத்தின் தலைப்பு தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சீதக்காதி என்ற பெயர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பெரும்வள்ளலாக வாழ்ந்து மறைந்த வள்ளல் சீதக்காதி பெயரால் உள்ளதால் அவரின் வாழ்க்கை தொடர்பான திரைப்படம் என்ற வதந்தி பரவி வருகிறது. குறிப்பாக கீழக்கரை பகுதியில் சீதக்காதி திரைப்பட தலைப்பு குறித்த சர்ச்சை அதிகஅளவில் எழுந்துள்ளது. இந்தநிலையில் இதுகுறித்து கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராகிம் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடிகர் விஜய்சேதுபதி நடிக்க சீதக்காதி என்ற பெயரிடப்பட்டுள்ள திரைப்படம் படப்பிடிப்...
அப்துல் கலாம் போல பல கனவுகள் கொண்டவன் நான் -கமல்ஹாசன்

அப்துல் கலாம் போல பல கனவுகள் கொண்டவன் நான் -கமல்ஹாசன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கும் கமல்ஹாசன் நடிகர் கமல்ஹாசன் ஜனவரி 16ந்தேதி நள்ளிரவில் தனது அரசியல் பயணத்தினை பிப்ரவரி 21ந்தேதி தொடங்குகிறேன் என அறிவிப்பு வெளியிட்டார். அவர் பிறந்த ராமநாதபுரத்தில் கட்சியின் பெயரை அறிவிக்கிறார். ஆரம்பகட்ட சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் இருந்து நடிகர் கமல்ஹாசன் வரும் 21ந்தேதி அரசியல் பயணத்தினை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்துள்ள விளக்கத்தில், கலாமிற்கு பல கனவுகள் இருந்தன. அவரை போல பல கனவுகள் கொண்டவன் நான்.  விமர்சிப்பது மட்டும் என் வேலையன்று.  நான் இறங்கி வேலை செய்ய வந்தவன் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், திராவிடம் என்பது தமிழ்நாடு தழுவியது மட்டுமல...
சிவகார்த்திகேயன் வெளியிட்ட அதர்வா  நடிக்கும் ‘பூமராங்’ டைட்டில் லுக்..!

சிவகார்த்திகேயன் வெளியிட்ட அதர்வா நடிக்கும் ‘பூமராங்’ டைட்டில் லுக்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘இவன் தந்திரன்’ படத்தைத் தொடர்ந்து ‘பூமராங்’ எனும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் ஆர்.கண்ணன். அதர்வா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்தில் நடிக்கும் மேகா ஆகாஷ் நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், உபென் பட்டேல், சுஹாசினி மணிரத்னம் ஆகியோரும் நடிக்கிறார்கள். ராதன் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார் ஆர்.கே.செல்வா. ‘பூமராங்’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை  சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இப்படத்தை இயக்குனர் கண்ணனே சொந்த பேனரில் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது....
‘கீ’க்காக ‘இரும்புத்திரை’ ரிலீஸை தள்ளி வைத்த விஷால்..!

‘கீ’க்காக ‘இரும்புத்திரை’ ரிலீஸை தள்ளி வைத்த விஷால்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், நடிகர்கள்
‘கீ’க்காக ‘இரும்புத்திரை’ ரிலீஸை தள்ளி வைத்த விஷால்! ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பில் அறிமுக இயக்குனர் காளீஸ் இயக்கியுள்ள படம் ’கீ’. மைக்கேல் ராயப்பனின் ‘குலோபல் இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் அவரது மகன் செராபியன் ராயசேவியர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். https://youtu.be/IWqeTxCdsrk மைக்கேல் ராயப்பன் இதற்கு முன் தயாரித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்த, இது சம்பந்தமாக சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார் மைக்கேல் ராயப்பன். இந்த விஷயத்தின் மீது ஏன் விஷால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இவ்விழாவில் பேசு...
எம்.ஜி.ஆர். பட தொடக்க விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய ரஜினி – கமல்

எம்.ஜி.ஆர். பட தொடக்க விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய ரஜினி – கமல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
எம்.ஜி.ஆர். தயாரித்து நடித்து இயக்கிய படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’.1973-ல் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்த இந்த படம் அந்த காலகட்டத்தில் மிகவும் பேசப்பட்டது. இந்த படத்தின் இறுதியில், ‘விரைவில் கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு’ என்று எம்.ஜி.ஆர். தனது உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் 2-வது பாகம் பற்றி டைட்டில் போட்டு இருந்தார். இந்த படத்தை கிழக்கு ஆப்ரிக்காவின் பின்னணியில் பிரமாண்டமாக தயாரிக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் தீவிர அரசியலில் இறங்கியதால், அந்த படம் தயாராகவில்லை. எம்.ஜி.ஆரின் அந்த கனவை நிறைவேற்றும் வகையில், ‘கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு’என்ற தலைப்பில் எம்.ஜி.ஆரின் அனிமே‌ஷன் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நே‌ஷனல் சார்பில் ஜசரிகணேஷ், பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் பிரபுதேவா ஆகியோர் தயாரிக்கிறார்கள். அருள் மூர்த்தி இயக்குகிறார். இந்த படத்தின் தொடக்கவிழா எம்.ஜி.ஆரின் 101-வத...
மைக்கேல் ராயப்பனுக்கு பணம் வாங்காமல் படம் நடித்து கொடுக்கிறேன் – கீ பட ஆடியோ விழாவில் விஷால் வாக்குறுதி

மைக்கேல் ராயப்பனுக்கு பணம் வாங்காமல் படம் நடித்து கொடுக்கிறேன் – கீ பட ஆடியோ விழாவில் விஷால் வாக்குறுதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மைகேல் ராயப்பன் - சிம்பு பிரச்சனையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? - விஷால் விளக்கம் காலீஸ் இயக்கத்தில் நடிகர் ஜீவா - நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் கீ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இதில் இயக்குநர் காலீஸ், ஜீவா, நிக்கி கல்ராணி உள்ளிட்ட கீ படக்குழுவினரும், விஷால், விஜய் சேதுபதி, மைக்கேல் ராயப்பன், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் பேசும் போது, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் குறித்து மைக்கேல் ராயப்பன் கொடுத்த வழக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேட்டார். இதனால் இசை வெளியீட்டு விழாவில் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய விஷால், முதலில் கீ படத்தின் பாடல்களும், டிரைலரும் சிறப்பாக வந்திருப்பதாக கூறி, படத்தில் ஜீவா, இயக்குநர்...
ஆன்மீக அரசியல் அல்ல… நீர்மிக அரசியல் : பார்த்திபன்

ஆன்மீக அரசியல் அல்ல… நீர்மிக அரசியல் : பார்த்திபன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
“ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ்” சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் "கேணி". தமிழ் மற்றும் மலையாளம்  இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத். இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர். முழுக்க முழுக்க கேரளா - தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு, இந்த தேசத்திற்கான முக்கிய பிரச்சனையாக இருக்கக் கூடிய தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் இது. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகைகள் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனு ஹாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் மற்றும் நாசர் நடிக்க, இவர்களுடன் ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்திருக்கிறா...
சூரி ஹீரோவாகவும், நான் காமெடியனாகவும் நடிக்க தயார் – விக்ரம்

சூரி ஹீரோவாகவும், நான் காமெடியனாகவும் நடிக்க தயார் – விக்ரம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விக்ரம், தமன்னா, ஸ்ரீமன் நடிப்பில் வெளியான ‘ஸ்கெட்ச்’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் தாணு, படத்தின் தயாரிப்பாளர் பார்த்திபன், சீனு, விக்ரம், ஸ்ரீமன், டைரக்டர் விஜய் சந்தர். கல்லூரி வினோத், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விக்ரம் பேசும்போது, ‘கமர்சியலாக ஒரு படம் பண்ணவேண்டும் என்ற நினைத்து, அதற்காக கதைகளை கேட்டுக்கொண்டிருந்தேன். கேமராமேன் சுகுமார் மூலமா டைரக்டர் விஜய் சந்தர் அறிமுகமாகி, என்னிடம் கதையைச் சொன்னார். அந்த கதையை கேட்டவுடன் பிடித்துவிட்டது. இதுக்காக நான் சுகுமாருக்கு தான் நன்றி சொல்லணும். இந்த படத்துக்கு சுகுமார் பயங்கரமா வொர்க் பண்ணியிருக்கார். படத்தோட டோன் ரியலிஸ்டிக்காகவும், கமர்சியலாவும் இருக்குறதுக்கு அவர் தான் காரணம். அதவிட டைரக்டர் விஜய் இந்த கதையை பிரசண்ட் பண்ண ஸ்டைல் ரொம்ப புதுசா இருந்துச்சி. அவரோட காஸ்டிங் ஹ...
ராகவாலாரன்ஸ் புதுப்படம் “கால பைரவா”..!

ராகவாலாரன்ஸ் புதுப்படம் “கால பைரவா”..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு மாபெரும் வெற்றி பெற்ற முனி 3 காஞ்சனா 2 படத்திற்கு பிறகு தற்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் படம் முனி 4 காஞ்சனா 3.. இந்தப் படம் வெளி வந்த பிறகு தனது அடுத்த படமாக ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மிக மிக பிரமாண்டமாக தயாராகும் “கால பைரவா “படத்தின் வேலைகளை தொடங்குகிறார் .. கால பைரவா படத்தை இயக்கி நடிக்கும் லாரன்ஸ் காஞ்சனா 3 க்கு பிறகு கால பைரவா படத்தை வெளியிட உள்ளார்.. இதைத் தவிர இன்னும் 2 கதைகளை தேர்வு செய்து வைத்திருக்கும் லாரன்ஸ் அது பற்றிய தகவல்களை மார்ச் மாதம் அறிவிக்க திட்டமிட்டுள்ளார்.....
சங்கத்தலைவன் சினிமா ஆகும் “தறியுடன்” நாவல்..!

சங்கத்தலைவன் சினிமா ஆகும் “தறியுடன்” நாவல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
“தறியுடன்” நாவல் “ சங்கத்தலைவன் “ என்ற பெயரில் திரைப்படமாகிறது தமிழ்ச்சூழலில் சமீபத்தில் வெளியான ஒரு முக்கிய, சமூக அக்கறையுள்ள நாவல் பாரதிநாதனின் “ தறியுடன் “. நாவலாசிரியரின் சொந்த அனுபவங்களின் அடிப்படையில், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான சேலம், கோவை, ஈரோடு மாவட்டங்களின் முக்கிய தொழிலான விசைத்தறித்தொழில் மற்றும் அத்தொழிலாளர்களின் பிரச்சனையை ஒரு முற்போக்கு இயக்கத்தின் பின்னணியில் விவரிக்கிறது இந்த நாவல். இந்த நாவலை இயக்குனர் மணிமாறன் இயக்க, சமுத்திரக்கனி, கருணாஸ், அறம் படத்தில் நடித்த சுனுலட்சுமி மற்றும் விஜய் TV தொகுப்பாளினி ரம்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். GRASSROOT FILM COMPANY சார்பில் இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கிறார். இம்மாதம் 22 ந்தேதி இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது....