நடிகர்கள்
பெண் இயக்குனரின் கைவண்த்தில் வெடிகுண்டு பசங்க ஆடியோ வெளியீடு
ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ்”சார்பில் ஜனனி கே. பாலு மற்றும் “வீடு புரொடக்ஷன்ஸ்”சார்பில் தினேஷ் குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் “வெடிகுண்டு பசங்க”.
முழுக்க முழுக்க மலேசியாவில் நடப்பது மாதிரியான கதைப் பின்னணி கொண்ட இப்படத்தை பெண் இயக்குநரான Dr.விமலா பெருமாள் இயக்கியிருக்கிறார்.
இப்படத்தில் நாயகனாக தினேஷ் குமார், நாயகியாக சங்கீதா கிருஷ்ணசாமி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தங்கமணி வேலாயுதன், டேவிட் ஆண்டனி, ஆல்வின் மெர்வின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். “டோரா”, “குலேபகாவலி” படங்களுக்கு இசையமைத்த விவேக் & மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். பி. சிதம்பரம் ஒளிப்பதிவாளராகவும், ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், நடிகர்கள் நாசர், சதீஷ், பிருத்விராஜ்,...
கார்த்திக்-கவுதம்கார்த்திக் இந்த இணைதான் மிஸ்டர்.சந்திரமெளலி பட வெற்றிக்கு காரணம் – தனஞ்செயன் பெருமிதம்
மிஸ்டர் சந்திரமௌலி படத்திற்காக தனது படக்குழுவுக்கு தனது மனதில் ஆழத்தில் இருந்து நன்றி தெரிவிக்கும் தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் அவர்களிடம் இருந்து வெளியாகும் வார்த்தைகள் இவை.
இயக்குனர் திரு பற்றி அவர் பாராட்டி கூறுகையில், "அவருடன் சேர்ந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒன்று. அவரது உற்சாகமான பொறுப்பு, நேர்மை, அர்ப்பணிப்பு, புதுமையான சிந்தனை, அணியின் புத்துணர்ச்சியை மேம்படுத்துபவர் என முழு அணியும் நேசிக்கும் ஒரு நல்ல தலைவராக இருக்கிறார்.
தொழில்நுட்பக் குழுவை பற்றி பேசும்போது, "ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் அவரது முழுமையான அர்ப்பணிப்பை இந்தத் திரைப்படத்துக்கு அளித்திருக்கிறார். மேலும் அவருடைய காட்சியமைப்புகள் ரசிகர்களை மிகவும் ஈர்க்கும். நிச்சயமாக, இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த படத்தின் மிகப்பெரிய சொத்து. படத்தை முடித்து வீட்டுக்கு செல்லும் ரசிகர்கள் அவரது பாடல்கள் மற்றும் பி...
ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி..!
அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம்
ராஜபாண்டி இயக்குகிறார்
பட எண்ணிக்கை எனக்கு முக்கியமில்லை...நல்ல படம் தரமான கதைக்களம் திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் என தேர்ந்தெடுத்து நடிப்பவர் அரவிந்த்சாமி...
இது வரை இப்படித் தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்..
அப்படி சமீபத்தில் அவர் தேர்ந்தெடுத்து ஒத்துக் கொண்டது வித்தியாசமான கதைக்களம் கொண்ட ஒரு படம்..
"என்னமோ நடக்குது" "அச்சமின்றி" போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார்.
செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ள இப்படத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடிக்க உள்ளார்..படத்தில் பங்கு பெறும் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலமான கலைஞர்கள் பற்றியும் தயாரிப்பு நிறுவனம் பற்றியும் விரைவில் அறிவிக்கப் பட உள்ளது....
ராஜ்தாக்ரேவிடம் அரசியல் பேசினாரா லதா ரஜினி – வெளிப்படும் வாரீசு அரசியல்
ரஜினிகாந்த் கட்சியே ஆரம்பிக்கவில்லை, அதற்குள் வாரிசு அரசியலா?
மும்பையில் மகாராஷ்டிரா நவ நிர்மான் கட்சி தலைவர் ராஜ்தாக்ரேவை, நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ளது பல தளங்களில் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவர் ரஜினிகாந்த். இதன்பிறகு பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை பார்த்தார்.
சென்னைக்கு வந்து நடிகராகி முன்னணி ஸ்டாராக மாறியுள்ளார். இருப்பினும், சிவசேனாவின் நிறுவனர் பால் தாக்ரேவோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர் ரஜினிகாந்த். கடந்த 2010ம் ஆண்டு பால் தாக்ரேவை சந்தித்த ரஜினிகாந்த், அவரை தனக்குக் கடவுளைப் போன்றவர் என்றும் கூறியிருந்தார். மகாராஷ்டிராவில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பாக தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மண்ணின் மைந்தர்கள் மராட்டியர்கள் என்று கூறி அதற்காக நடந்த தாக்குதலில் முன்னின்றவர் என்ற குற்றச்சாட்டு மறைந்த...
முழுமையான காதல் படமாம் “பார்த்திபன் காதல்” சொல்கிறார் இயக்குனர் வள்ளிமுத்து..!
எஸ் சினிமா கம்பெனி என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ பார்த்திபன் காதல் “
இந்த படத்தில் யோகி கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
படம் பற்றி இயக்குனர் வள்ளிமுத்து..
உண்மை சம்பவத்தை மையப்படுத்தி புதிய களத்தில் இளமை கொஞ்சும் காதல் கதையாக உருவாக இருக்கிறது. அறிமுக நாயகன் யோகி ஓவிய கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இளம் கதாநாயகி வர்ஷிதா கிராமத்து கல்லூரி மாணவியாக நடிக்கிறார்.
சமீப கலாமாக தமிழ் சினிமாவில் காமெடிப்பேய் படங்களும், ஆக்ஷன் படங்களும் வந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் “ பார்த்திபன் காதல் “ ஒரு முழுமையான காதல் கதையாக உருவாகிறது.
கும்பகோணம், ராஜபாளையம், தென்காசி போன்ற இடங்களில் விரைவில் படபிடிப்பு நடக்க இருக்கிறது என்றார் இயக்குனர் வள்ளிமுத்து.
...
சரத்குமாரின் “வேளச்சேரி துப்பாக்கிசூடு”
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
காவல்துறை-மனித உரிமை ; இரண்டு தரப்பு நியாயத்தை பேசும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
சரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
வடமாநில இளைஞர்களின் அட்டகாசத்தை வெளிக்கொண்டு வரும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
V .R .மூவிஸ் சார்பாக்க T.ராஜேஸ்வரி தயாரிப்பில் உருவாகிவரும் படம் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'.. S.T..வேந்தன் இந்தப்படத்தை இயக்குகிறார். இவர் ஷாம்-சினேகா நடித்த இன்பா மற்றும் மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களை இயக்கியவர்.
இந்த புதிய படத்தில் சரத்குமார் என்கவுன்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.. கதாநாயகியாக மனித உரிமை கழக அதிகாரியாக இனியா நடிக்கிறார். மற்றும் இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, தீபக் படத்தொகுப...
சிவாஜி கணேசன் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு – தமிழக அரசுக்கு நடிகர் பிரபு பாராட்டு
நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு நடிகர் பிரபு பாராட்டு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து நடிகர் பிரபு கூறியதாவது:-
‘சிவாஜி கணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. இது எங்கள் குடும்பத்தின் கோரிக்கை என்பதைவிட, தமிழக மக்களின் நீண்டநாள் விருப்பமாக இருந்தது. ஒவ்வொரு தமிழர்களின் வீடுகளிலும் அவர்களுடைய குடும்பத்தில் ஒருவராக எங்கள் தந்தை வாழ்கிறார்.
அரசியலுக்கு அப்பாற்பட்டவர். தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் மிக சிறப்பாக பிரதிபலித்தார். சமூக நற்பணிகளுக்காக நிறைய உதவிகள் செய்து இருக்கிறார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் சட்டசபையில் சிவாஜி கணேசனை பாராட்டி பேசி உள்ளனர். அவர் மீது ரசிகர்கள் இன்றைக்கும் அன்பாக இருக்கிறார்கள். அவருக்கு சிறப்பு சேர்த்துள்ள முதல்-அமைச்சர் ...
வில்லனாக களமிறங்கும் மனோஜ் பாரதிராஜா
தமிழ் சினிமாவில் வித்தியாசமான தலைப்புகளுடன் புதுப்படங்கள் வந்த வண்ணமாக உள்ளன. அந்த வரிசையில் முற்றிலும் மாறுபட்ட தலைப்புடன் உருவாகி வரும் திரில்லர் படம் தான் `ரெடி டு சூட்'.
எஸ்.எஸ்.வி எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.ஆறுமுகம் தயாரிக்கும் இந்த படத்தின் படத்தின் பூஜை, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. மனோஜ்குமார் இதயராஜ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் ஆனந்த் நாக் நாயகனாக நடிக்கிறார். இவர் நேரம், பிரேமம், வெற்றிவேல் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ஆனந்த் நாக் ஜோடியாக ஜீவிதாவும், வில்லனாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே.பாரதிராஜாவும் நடிக்கின்றனர். சதீஷ் கதிர்வேல் ஔிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். முழுக்க முழுக்க திரில்லர் கதையாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவ...
மகன் கவுதமுக்கு அப்பாவாகவே Mr.சந்திரமௌலி படத்தில் நடித்துள்ள கார்த்திக்..!
தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று புகழப்பட்ட கார்த்திக் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து மகன் கவுதமுக்கு அப்பாவாகவே மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் நடித்துள்ளார். அவரிடம் பேசியதில் இருந்து...
நான் கவுதமை வைத்து படம் இயக்குவதற்காக கதை எழுதிக் கொண்டிருந்தேன். அந்த கதை அவருக்கு தெரியாது. ஒருநாள் என்னிடம் வந்து ஒரு கதை கேட்கறீங்களா? என்று கேட்டார். சம்மதித்தேன். திருவை அறிமுகம் செய்துவிட்டு சென்றுவிட்டார். கதை மிகவும் பிடித்ததால் சம்மதித்தேன். நானும் அப்பாவும் சேர்ந்து நடித்ததில்லை. நான் நடிக்க தொடங்கும்போதே அப்பா மறைந்துவிட்டார். அந்த ஏக்கம் எனக்குள் இருந்தது. தனிமையாகவே என்னுடைய சினிமா வாழ்க்கை வேகமாக ஓடியது. அதை சரி செய்ய என்னுடன் நடிக்கும் மூத்த நடிகர்களுடன் மனம் விட்டு பேசுவேன். இப்போது கவுதமிடம் பேசி அவர்கள் உலகத்தை புரிந்துகொள்கிறேன். நிஜ வாழ்க்கையில் நாங்கள் எப்படியோ அப்படித்தான் படத்...

