பெண் கவிஞர் குட்டி ரேவதி இயக்கத்தில் உறவுகளை தேடும் “சிறகு”..!
உறவுகளின் புரிதல் தேடிப் பயணிக்கும் இரு இளைஞர்களின் கதை.
இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம்.
சென்னையில் தொடங்கும் இப்பயணம் கன்னியாகுமரிி வரை நீள்கிறது.எல்லோரும் இயந்திர கதியில் ஓடிக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் இயற்கையோடு இயைந்த பயணமும் இசையுமே புத்துணர்வைக் கொடுக்கும் என்கிறது 'சிறகு'.
'மெட்ராஸ் ', 'கபாலி', 'வடசென்னை ', 'சண்டைக்கோழி-2 ', 'பரியேறும் பெருமாள் ', ஆகிய படங்கள் மூலம் நமக்குஅறிமுகமான ஹரி கிருஷ்ணன் இப்படத்தின் நாயகன்.
நடனத்திலும், யோகாவிலும் சிறந்த, அழகியஇளம் அக்ஷிதா இப்படத்தின்நாயகியாகிறார்.
டாக்டர் வித்யா, நிவாஸ்ஆதித்தன் ஆகியோர் இரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். காளி வெங்கட் நட்புக்காக இணைந்துள்ளார் .
காட்சிகளை கண்களுக்குக் குளுமையாக ஒளிப்பதிவு செய்திருப்பவர் ராஜா பட்டாச்சார்ஜி . 'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் நமக்க...









