ஞாயிற்றுக்கிழமை, மே 31
Shadow

நடிகைகள்

மீடூ புகாரில் பிரபலமான சின்மயிக்கு செக் வைத்த ராதாரவி..!

மீடூ புகாரில் பிரபலமான சின்மயிக்கு செக் வைத்த ராதாரவி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
தமிழ் திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடி வருபவர் பாடகி சின்மயி. இவர் பல படங்களுக்கு பின்னணி வசனங்களையும் பேசியுள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் நடிகை திரிஷாவுக்கு பின்னணி வசனம் பேசினார். இவர் மீடூ விவகாரத்தில் கடந்த அக்டோபரில், கவிஞர் வைரமுத்து தனக்கும், சில பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். இந்த நிலையில், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான நடிகர் ராதாரவிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்த 2 பெண்களுக்கு பாடகி சின்மயி ஆதரவாக பேசினார். இதனால் தனது டப்பிங் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கி உள்ளனர் என தெரிவித்து உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக...
திமிரு புடிச்சவன் விமர்சனம்

திமிரு புடிச்சவன் விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம், வீடியோ
திமிரு புடிச்சவன் விமர்சனம் சிறார் குற்றவாளிகள் செய்கிற கொடூரங்களை செய்திகளில் பார்க்கும்போது நம்மையறியாமல் ஒரு பதட்டம் ஏற்படும்... அந்த குழந்தைகள் தப்பித்தவறியும் நமக்கு வேண்டியவர்களாக இருக்கக்கூடாது என்று மனசு வேண்டிக்கொள்ளும்... ஆனால் அம்மா அப்பா இல்லாத சூழலில் தம்பியை நல்லபடியாக வளர்க்கப்போராடும் அண்ணன்... அண்ணனின் கெடுபிடி பாசத்தை உணராத தறுதலை தம்பி இந்த காம்பினேஷனில் உருவான கதைதான் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன். போலீஸ் அதிகாரியான விஜய் ஆண்டனி காக்கி யூனிபார்முக்கு கொஞ்சமும் கவுரவம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக ரொம்பவே மெனக்கெடும் சூழலில் தவிர்க்க முடியாத கட்டாயம் ஏற்படும்போது உயிராய் நேசித்த சொந்த தம்பியையே சுட்டுக் கொல்கிறார். அந்த கொலைக்கு பிராயச்சித்தம் தேட புறப்படும்போது சிறார் குற்றவாளிகள் என்ற மிகப்பெரிய நெட்வொர்க் தெரிகிறது... அதன் தலைவனை தன் பாணியில் எப்படி...
கமல் மகளின் அந்தரங்க படங்களை வெளியிட்டது யார் என தேடுகிறது மும்பை போலீஸ்!

கமல் மகளின் அந்தரங்க படங்களை வெளியிட்டது யார் என தேடுகிறது மும்பை போலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌‌ஷரா ஹாசன். இந்தியில் அமிதாப் பச்சனும், தனுஷும் இணைந்து நடித்த ‌ஷமிதாப் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் அஜித் குமார் நடித்த விவேகம் படத்திலும் நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது விக்ரமுடன் ஒரு படத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் அக்‌‌ஷராவின் அந்தரங்க படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதுபற்றி அக்‌‌ஷரா வெளியிட்ட அறிக்கையில் ’இந்தப் படங்கள் ஒரு படத்தின் டெஸ்ட் ஷூட்டின்போது எடுக்கப்பட்டவை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை இணையத்தில் கசிந்துள்ளன. இவ்விவகாரத்தில் புகார் அளிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன்’ என்று கூறியிருந்தார். இதனையடுத்து இது தொடர்பாக மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் எப்.ஐ.ஆர...
ட்ரீம் வாரியர் தயாரிப்பில் ஜோதிகா..!

ட்ரீம் வாரியர் தயாரிப்பில் ஜோதிகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் படத்தின் பூஜை இன்று போடப்பட்டது 2-வது சுற்றில் தான் நடிக்கும் படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறார் ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு அவர் நடித்த '36 வயதினிலே' படம் வெற்றி பெற்றத்தைத் தொடர்ந்து 'மகளிர் மட்டும்' படமும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. தனக்கு முக்கியத்துவம் தரும் கதை மட்டும் தான் வேண்டும் என்றில்லாமல், நிஜ வாழ்க்கையோடு ஒன்றி போகும் கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும் கவனமாக இருக்கிறார். இதன் மூலம் முன்பை விட அதிக ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார். அதற்கு சான்றாக இந்த வாரம் வெளியாகிறது அவர் நடித்த 'காற்றின் மொழி'. இப்படம் வெளியாவதற்கு முன்பே ஜோதிகாவைப் பற்றியும், படத்தைப் பற்றியும் மிகுந்த எதிர்பார்ப்பை (குறிப்பாக பெண்களிடம்) ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், ஜோதிகாவை ...
மெளனகுரு சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யாவின் “மகாமுனி” படத்தை தயாரிக்கிறார் ஞானவேல் ராஜா!

மெளனகுரு சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யாவின் “மகாமுனி” படத்தை தயாரிக்கிறார் ஞானவேல் ராஜா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K E  ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’. இதில் நடிகர் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள் தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாந்தகுமார். இவர் ஏற்கனவே மௌனகுரு என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர். இந்த படத்தின் ஒளிப்பதிவை அருண் பத்மநாபன் கவனிக்க, எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற VJ சாபு ஜோசப் படத்தை தொகுக்க, ரெம்போன் பால்ராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சண்டை பயிற்சியை ஆக்சன் பிரகாஷ் மேற்கொள்கிறார். படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,“க்ரைம் திரில்லர் ஜேனரில் ‘மகாமுனி ’ தயாராகிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பா...
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி

சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
‘குற்றம்-23’ மற்றும் ‘தடம்’ படங்களை தயாரித்த இந்தர்குமாரின் ரெதான் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’.  ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சசிகுமாரை வைத்து படம் இயக்குகிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். 1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் நாயகியாக சசிகுமார், மடோனா செபாஸ்டியன் நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ் பெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமானுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இன்று நவம்பர் 12-ம் தேதி காரைக்குடியில் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பை நடிகர், இயக்குனர் சமுத்திரகனி கிளாப் அடித்து துவக...
திட்டமிட்ட நவ.16ம் தேதி  பட ரிலீசுக்கு உதவுங்கள் – செய் படக்குழு வேண்டுகோள்

திட்டமிட்ட நவ.16ம் தேதி பட ரிலீசுக்கு உதவுங்கள் – செய் படக்குழு வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
திட்டமிட்டப்படி படத்தை வெளியிட உதவுங்கள் திரையுலகினருக்கு ‘செய் ’படக்குழுவினர் கோரிக்கை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வழிக்காட்டலின் படி நவம்பர் 16 ஆம் தேதியன்று வெளியாக அனுமதியளிக்கப்பட்ட ‘செய் ’படத்தை எந்தவித இடையூறும் இல்லாமல் வெளியிட உதவவேண்டும் என்று அப்படக்குழுவினர் திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். ட்ரிப்பி டர்ட்டில் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மன்னு தயாரித்திருக்கும் திரைப்படம் செய். இந்த படத்தில் நக்குல், அன்ஷால் முன்ஜால், பிரகாஷ்ராஜ், நாசர், அஞ்சலி, ப்ளாரன் பெரைரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜ்பாபு. ‘செய்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு   சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதன் போது, படத்தின் நாயகன் நக்குல், நாயகி அன்ஷால் முன்ஜால், படத்தின் இயக்குநர் ராஜ்பாபு, த...
ரீமேக் படங்களில் நடிப்பது சவாலானது ஆனால் காற்றின் மொழி அனுபவம் இனிமையானது – ஜோதிகா

ரீமேக் படங்களில் நடிப்பது சவாலானது ஆனால் காற்றின் மொழி அனுபவம் இனிமையானது – ஜோதிகா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  "காற்றின் மொழி" படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பிரபலங்கள் பேசியது... கலை இயக்குநர் கதிர் பேசும்போது:- தொடர்ந்து ராதாமோகனிடம் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். அவர் கூறியபோது குறுகிய காலத்தில் படத்தை முடிப்பதற்கு எல்லோரும் உதவி புரிந்தார்கள். எழுத்தாளர் பார்த்திபன் பேசும்போது:- ‘மொழி’ படம் பார்த்துவிட்டு ராதாமோகனின் ரசிகனாக பேசினேன். அவருடைய படத்திற்கு இப்படத்திற்கு எழுத வாய்ப்பு கிடைத்தது ஆச்சரியமாக இருந்தது. முழுக்க முழுக்க ஜோதிகாவுடைய ஆதிக்கம் தான். நடிப்பில் ராக்ஷஸி போல நடித்திருந்தார். இவ்வாறு எழுத்தாளர் பார்த்திபன் பேசினார். ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா பேசும்போது:- இந்த படம் நான் பணியாற்றிய படங்களிலேயே இந்த படம் தான் அமைதியாக பணியாற்றினேன். ஒவ்வொரு படம் பணியாற்றும்போதும் பயத்தோடுதான் பணியாற்றுவோம். விஜயலட்சுமி கதாபாத்திரம் நன்றாக பேசப்படும். லட்சும...
லேட்டா ஆனாலும் வந்துட்டேன் கரெக்ட்டா ஜெயிப்பேன் – 2.O டீசர் விழாவில் ரஜினி அரசியல் சூசகம்!

லேட்டா ஆனாலும் வந்துட்டேன் கரெக்ட்டா ஜெயிப்பேன் – 2.O டீசர் விழாவில் ரஜினி அரசியல் சூசகம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  2 .0 படத்தின் டிரைலர் வெளியீடு விழா இன்று நடைபெற்றது! இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் அதிக  பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் தான் 2.0. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்இசை அமைத்துள்ளார். லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது.  இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், சினிமா பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியவை " 2 .0 படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னால் படத்தில் சரியாக நடிக்க முடியவில்லை. என...