‘டாக்ஸிக்‘ திரைப்படத்தின் ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு!
‘டாக்ஸிக்‘ திரைப்படத்தின் ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு – ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது !
Monster Mind Creations, KVN Productions, மற்றும் Zee Music கம்பெனி இணைந்து, டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் ( ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ) திரைப்படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’-யின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளன. ஆடியோ வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல், தற்போது பிரம்மாண்டமான காட்சிகளுடன் ரசிகர்களை மீண்டும் கவர வருகிறது.
டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் (‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ) திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘தபாஹி’ பாடலின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஆடியோ வெளியானவுடன் உடனடியாக ரசிகர்களின் விருப்பப் பாடல...









