புதன்கிழமை, நவம்பர் 25
Shadow

நடிகைகள்

ஸ்லிம் சீக்ரெட்ஸ்  வெளியிடும் அனுஷ்கா

ஸ்லிம் சீக்ரெட்ஸ் வெளியிடும் அனுஷ்கா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  விஜய், சூர்யா, ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்த அனுஷ்கா தமிழில் வெளியான ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக 20 கிலோ எடை அதிகரித்தார். அதன் பின் ‘பாகுபலி’ படத்தில் தேவசேனாவாக நடித்த அனுஷ்காவால் தன்னுடைய பழைய உடல் எடைக்கு திரும்ப முடியவில்லை. பிரபல நியூட்ரீஷியன் லூக் கோட்டின்ஹோ உதவியுடன் டயட், உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் என படிப்படியாக தனது உடல் எடையைக் குறைத்து பழைய ஸ்லிம் அண்ட் ஃபிட் அனுஷ்காவாக மாறியுள்ளார். அதற்காகத்தான் எடுத்த முயற்சிகளை தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து ‘தி மேஜிக் வெயிட்லாஸ் பில்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நம்முடைய உடல் எடை அதிகரிப்பு அதற்கான சிகிச்சை முறை என எல்லாமே வாழ்க்கை முறை மாற்றத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனஅழுத்தம், உடல் எ...
அருண் விஜய் ஜோடியாக  ரித்திகா சிங்

அருண் விஜய் ஜோடியாக ரித்திகா சிங்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான `தடம்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், அவர் தற்போது பிரபாசுடன் `சாஹோ', விஜய் ஆண்டனியுடன் `அக்னிச் சிறகுகள்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் விவேக் இயக்கத்தில் `பாக்ஸர்' என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் நடிப்பதற்காக தயாராகி வரும் அருண் விஜய், வியட்நாம் சென்று அங்கு பாக்ஸிங்குக்கான சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அருண் விஜய் ஜோடியாக நடிக்க ரித்திகா சிங் ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ரித்திகா ஏற்கனவே இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
ஹீரோயினுக்கு பிறந்த நாள் கேக் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்..!

ஹீரோயினுக்கு பிறந்த நாள் கேக் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விஜய் -அட்லி கூட்டணியில் உருவாகி வரும் படப்பிடிப்பில் கூட நடித்து வரும் நடிகையின் பிறந்த நாளுக்கு ஸ்பெஷல் கேக் வரவழைத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி குஷி படுத்தி இருக்கிறார் விஜய். பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய்யும், அந்த அணியின் தலைவியாக இந்துஜா நடிக்கிறார். ரெபா மோனிகா ஜான், வாஷா பொல்லம்மா உள்ளிட்ட மற்ற நடிகைகள் நடித்துள்ளனர். அதில் மோனிகா ஜான் ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளான பெண்ணாக நடித்துள்ளார். மேலும் இதில் ‘படைவீரன்’, தெறி, காளி ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை அம்ரிதா ஐயரும் நடிக்கிறார். கடந்த செவ்வாய்க் கிழமை அம்ரிதாவுக்கு பிறந்த நாள் என்பதை அறிந்த விஜய், அவருக்கு இன்ப அதிர்ச்சி அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கேக் ஒன்றை ஆர்டர் செய்திருந்தார். ஷூட்டிங் முடிந்ததும் படப்பிடிப்புத் தளத்திலேயே கேக் வெட்டி கொண்டாடினார் அம்ரிதா. தளபதி விஜய்யின் இந...
தமிழ் ஹீரோவுடன் அமெரிக்கா பறந்த அனுஷ்கா..!

தமிழ் ஹீரோவுடன் அமெரிக்கா பறந்த அனுஷ்கா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    தமிழ் ஹீரோவுடன் அமெரிக்கா பறந்த அனுஷ்கா..! பாகுபலி என்ற பிரமாண்டமான படத்தில் முக்கியமான ரோலில் நடித்த அனுஷ்கா அடுத்து புதுப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.   அதோடு உடல் எடையை குறைப்பதற்காக சிறப்பு சிகிச்சை எடுத்து கொண்டார். இந்த நிலையில் பாகுபலி இயக்குனர் ராஜமவுலி கேட்டுக் கொண்டதால் அவர் இப்போது இயக்கி வரும் RRR படத்தில் 3 நிமிடங்கள் மட்டுமே வரக்கூடிய காட்சியில் நடித்தார். அதன் பின் திடீரென அமெரிக்கா பறந்திருக்கிறார். அவரோடு சாக்லெட் பாய் மாதவனும் ஜோடியாக அமெரிக்காவுக்கு பறந்திருக்கிறார்கள். நடிகர் மாதவன் கடந்த 2 ஆண்டுகளாக நம்பி நாராயண் என்ற விஞ்ஞானி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வந்தார். அந்த ஷூட்டிங் முடித்து வெள்ளை தாடி மீசைக்கு குட்பை சொல்லி மீண்டும் ஸ்வீட் பாய் ஆக மாறினார். இப்போது மாதவனும், அனுஷ்காவும் நடிக்கும் ‘சைலன்...
நடிகர் சங்கத் தேர்தல் நடத்த நீதியரசர் நியமனம்… விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ராதிகா தலைமையில் புது அணி போட்டியா..?

நடிகர் சங்கத் தேர்தல் நடத்த நீதியரசர் நியமனம்… விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ராதிகா தலைமையில் புது அணி போட்டியா..?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் சங்கத் தேர்தல் நடத்த நீதியரசர் நியமனம்... விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ராதிகா தலைமையில் புது அணி போட்டியா..?   தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாசர் விஷால் தலைமையில் பாண்டவர் அணி என்ற பெயரில் போட்டியிட்டார்கள். பெரும் பரபரப்புடன் பொதுத் தேர்தல் போல பெரும் எதிர்பார்ப்புடன் நடந்த தேர்தலில் நாசர் தலைவராகவும் விஷால் பொதுச்செயலாளராகவும் கார்த்தி பொருளாளராகவும் தேர்வு பெற்றார்கள். இவர்களது பதவிக்காலம் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன்நிறைவடைந்த நிலையில் நடிகர் சங்க கட்டட பணிகள் நடந்து வருவதால் அதையே காரணம் காட்டி 6 மாத காலத்துக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், 6 மாத கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி செயற்குழு கூட்டம் நட...
அனுஷ்காவின் அந்த 3 நிமிடங்கள்

அனுஷ்காவின் அந்த 3 நிமிடங்கள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  அனுஷ்காவின் அந்த 3 நிமிடங்கள் அனுஷ்கா 3 நிமிடங்கள் மட்டுமே வரக்கூடிய ஒரு காட்சியில் நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறார். இயக்குனர் ராஜமௌலி இப்போது , இரண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்து வரும் 'ஆர் ஆர் ஆர்' படத்தில், மூன்று நிமிடம் மட்டுமே வர கூடிய, சிறப்பு தோற்றத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த காட்சி இடைவேளைக்கு முன் வருகிறதாம். மூன்று நிமிட காட்சி என்றாலும் பரவாயில்லை என ராஜமௌலிக்காக நடிக்க ஒப்புக்கொண்டாராம் அனுஷ்கா. ராஜமவுலியின் பிரமாண்டமான படமான பாகுபலியில் அனுஷ்கா உட்பட அதில் நடித்த அனைவருக்கும் பெரும் பேரும் புகழும் கிடைத்தது....
டாப்சியின் கேம் ஓவர்..!

டாப்சியின் கேம் ஓவர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் புதுப்படத்தில் டாப்சி தான் ஹீரோயின். Y not ஸ்டுடியோ தயாரிக்கிறது. இதே கதை இந்தி தெலுங்கு மொழிகளில் படமாகிறது. இந்தியில் அனுராக் காஷ்யப் இயக்குகிறார் டாப்சி இதில் மாற்றுத்திறனாளி வேஷத்தில் நடிக்கிறார். படத்துக்கு கேம் ஓவர் என பேர் வைத்திருக்கிறார்கள். இதுவும் ஒரு விளையாட்டு அரசியல் தொடர்பான படம் என்கிறார்கள்....
பேய் இருக்கிறதா ‘அகோரி’ பட விழாவில் பாக்யராஜ் ருசிகர தகவல்..!

பேய் இருக்கிறதா ‘அகோரி’ பட விழாவில் பாக்யராஜ் ருசிகர தகவல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ராஜ்குமார் இயக்கத்தில் ‌ஷயாஜி ஷிண்டே நடித்துள்ள ‘அகோரி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் கே.பாக்யராஜ் பேசியதாவது:- ‘தமிழக மக்களை நினைத்தால் தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எந்த கட்சிக்காரன் காசு கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு, சத்தியம் செய்து கொடுக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். இவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று எண்ணி எண்ணியே எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆர்பி.பாலா மொழி மாற்றுப் படங்களுக்கான வசனகர்த்தா என்று சொன்னார்கள். ‘புலி முருகன்’ மற்றும் ‘லூசிபர்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதி இருப்பதாகச் சொன்னார்கள். நான் ஒரே ஒரு டப்பிங் படத்திற்கு மட்டும்தான் வசனம் எழுதினேன். அங்கு சென்றவுடன் தான் அதில் உள்ள சவால்களும், சங்கடங்களும் புரிந்தன. அதன் பிறகுதான் டப்ப...